கடலில் சிக்கி பரிதவித்த இளைஞர்கள் மீட்பு
 

கோபாலபுரம் கடற் பரப்பில் சிக்கிப் பரிதவித்துக் கொண்டிருந்த 03 இளைஞர்களை நிலாவெளியில் அமையப் பெற்றுள்ள விஜயபா கடற்படைக் கப்பலின் கீழ் பணிபுரியும் கடற்படை வீரர்கள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் உயிர் காப்பு வீரர்கள் ஆகியோர்கள் இணைந்து நேற்று 12  பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்ட மூவரும் உலப்பனைப் பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் ஆகும்.