இத்தாலி கடற்படையின் “கெரபினியரி” இராணுவ கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இத்தாலி கடற்படையின் “கெரபினியரி” இராணுவ கப்பல் இன்று (11) காலையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகைதந்த கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி பாரம்பரிய வரவேற்பொன்றை அளித்தது.

கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் அதின் கட்டளை அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் பிரான்சிஸ்கோ பெக்னொடா அவர்கள் மேற்கு கடற்படைக் கட்டளை தலைமைகைத்தில் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்களை சந்தித்து பேசினார். அங்கு அவர்கள் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு குறித்து நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கெரபினியரி கப்பல் இம்மாதம் 14 ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் போது இப் கப்பலின் பணிக்குழுவினர்கள் பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரிக்கும் நோக்கத்தின் இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்யும் பல திட்டங்களுக்கு மற்றும் சில கடற்படைப் பயிற்சிகளுக்கும் பங்கேற்க உள்ளனர்.