53 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரு இந்தியர்கள் கடற்படையினரால் கைது.
 

வடக்கு கடற்படை கட்டளை நெடுந்தீவு இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தில் வீரர்களால் நேற்று (10) மீன்பிடி கப்பலுடன் 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெடுந்தீவுக்கு வடக்கு பிரதேச இலங்கைக்கு சொந்தமான கடலில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு அவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்வதற்கு தயாராக உள்ள 53 கிலோகிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது. கைதுசெய்யபட்டவர்கள் மற்றும் கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.