இத்தாலி கடற்படையின் கப்பல்கள் உருவாக்கும் மற்றும் போர் உத்திகள் பற்றி 7வது பணியகம் பிரதானி கடற்படை தலையினர் பிரதானியை சந்திப்பு
 

இத்தாலி கடற்படையின் கப்பல்கள் உருவாக்கும் மற்றும் போர் உத்திகள் பற்றி 7வது பணியகம் பிரதானி ரியர் அட்மிரல் பெச்க்வாலே டீ கென்டியா அவர்கள் இலங்கை கடற்படை தலையினர் பிரதானி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (11) சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை ரியர் அட்மிரல் தர்மேந்திர வேத்தேவ அவர்கள், பணிப்பாளர் நாயகம் பொருட்கள் மற்றும் சேவைகள், பணிப்பாளர் நாயகம் பொறியியல் மற்றும் இலங்கையின், இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் மார்கோ டெரினோனி அவர்களும் இன் நிகழ்வுக்கு கலந்துக்கொண்டனர்.