கெப்டன் டப்.ஈ பேன்க்ஸ
09.12.1950 இருந்து 25.11.1951 வரை
கெப்டன் ஜே. ஆர். எஸ் பிரவுன்ஸ
26.11.1951 இருந்து 14.06.1953 வரை
கொமதோரு பீ.எம்.பீ சாவேஸ
15.06.1953 இருந்து 11.07.1955 வரை
ரியர் அத்மிரால் ஜீ.ஆர்.எம். த மெல
12.07.1955 இருந்து 15.11.1960 வரை
ரியர் அத்மிரால் .ஆர்.கதிரகாமர
16.11.1960 இருந்து 30.06.1970 வரை
ரியர் அத்மிரால் .டீ.வீ ஹன்டர
01.07.1970 இருந்து 31.05.1973 வரை
ரியர் அத்மிரால் .டீ.பீ குனசேகர
01.06.1973 இருந்து 31.05.1979 வரை
ரியர் அத்மிரால் ஏ.டப்.எச் பெரேரா
01.06.1979 இருந்து 31.05.1983 வரை
வைஸ் அத்மிரால் ஏ.எச்,ஏ.த.சில்வா
01.06.1983 இருந்து 31.10.1986 வரை
அட்மிரல் எச் ஏ சில்வா
01.11.1986 இருந்து 31.10.1991 வரை
அட்மிரல் பெர்னாண்டோ டப்டப்ஈசீ.
01.11.1991 இருந்து 16.11.1992 வரை
அட்மிரல் டி.ஏ.எம்.ஆர். சமரசேகரவிஎஸ்வி
16.11.1992 இருந்து 26.01.1997 வரை
வைஸ் அட்மிரல் எச்.சி.ஏ.சி. திசேரா
27.01.1997 இருந்து 31.12.2000 வரை
அத்மிரால் டீ.டப்.கே. சந்தகிரி
01.01.2001 இருந்து 01.09.2005 வரை
அத்மிரால் டப்.கே.ஜே கரன்னாகொட
01.09.2005 இருந்து 14.07.2009 வரை
அத்மிரால் டீ.எஸ்.ஜீ சமரவீர
15.07.2009 இருந்து 14.01.2011 வரை
அத்மிரால் டீ.டப்.ஏ.எஸ்.திசானாயக
15.01.2011 இருந்து 26.09.2012 வரை
அத்மிரால் ஜே.எஸ்.கே. கொழம்பகே
27.09.2012 இருந்து 30.06.2014 வரை
அத்மிரால் .எஸ்.ஏ.எம்.ஜே பெரேரா
01.07.2014 இருந்து 10.07.2015 வரை
அட்மிரல் ஆர்.சி விஜேகுனரத்ன
11.07.2015 இருந்து 22.08.2017 வரை
அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா
22.08.2015 இருந்து 25.10.2017 வரை
 
 

Captain W.G.Beauchamp, VRD, CBE - Ceylon Royal Naval Volunteer Reserve

A Director of J.M. Robertson & Co. Ltd., was appointed first Commanding Officer, Ceylon Naval Volunteer Force Reserve in the rank of Commander. During the course of World War II he was promoted as Captain, with general demobilization he reverted to his substantive post and resigned his appointment as Commanding Officer, Ceylon Royal Naval Volunteer Reserve.

கேப்டன்டாப்.இபேங்ஸ், சிபிஇ- ராயல் கடற்படை

முதலாம் கடற்படை தளபதி, ரோயல் கடற்படையிலிருந்து பெறப்பட்ட ஒரு அதிகாரியாவார். முதலில் அவர் இலங்கை அரசின் கடற்படை சம்பந்தமான ஆலோசகராக நியமிக்கப்பட்டு கமாண்டர் ஜிஆர்எம் டி மெல் ஐக்கிய இராச்சியத்திற்கு பயிற்சிக்காக சென்றபின் இலங்கை தொண்டர் ரிசர்வ்கடற்படையின் பதில் தளபதியாக நியமிக்கப்பட்டார். கடற்படை சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் அவர்கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் குறித்த பதவியில் அவர் ஒரு வருட காலம் மாத்திரம் சேவையற்றினார்.

கப்டன் ஜேஆர்எஸ் பிரவுன் – ராயல் கடற்படை

ரோயல் கடற்படையிலிருந்து பெறப்பட்ட மற்றுமொரு அதிகாரி. இவர் ஒன்றரை வருடம் இலங்கையில் சேவையாற்றினார்

கொமடோர் பிஎம்பி சாவேஸ், டிஎஸ்சி- ரோயல் கடற்படை

இவர் இலங்கை கடற்படை தளபதியாக சேவையாற்றிய ரோயல் கடற்படையிளிருந்து பெறப்பட்ட கடைசி அதிகாரியாவார். கப்டன் தரத்திலிருந்த அவர் இலங்கையிலிருந்து வெளியேறும்போது கொமடோர் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுச் சென்றார். 1953ம் ஆண்டு இங்கிலாந்து அரசியின் வருகையின் போதுகடற்படை தளபதியாக இவரே இருந்தார்.

ரியர் அட்மிரல் ஜி. ஆர். எம். டி மெல், ஒபிஇ – ரோயல் சிலோன் கடற்படை

1917ஆம் ஆண்டு பிறந்த இவர் 1940 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி இலங்கை கடற்படை தொண்டர் ரிசர்வ்படையில் தகுதிகான் உப லெப்டினன்ட் ஆக ஆணையளிக்கப்பட்டார்.1941ல்லெப்டினன்ட் ஆகவும் 1945 ஆம் ஆணடு லெப்டினன்ட் கொமான்டர் ஆகவும் பதவி உயர்வு பெற்றார்.இலங்கை கடல் தொண்டர் ரிசர்வ் படையின் அனைத்து கப்பல்களிலும் சேவையாற்றி உள்ளார். பொது படைக் கலைப்பின் பின் இலங்கை கடல் தொண்டர் ரிசர்வ் படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1946 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரைகொமான்டர் தரத்தில் இருக்கும் போது வெளிநாட்டு பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார்.

ரியர் அட்மிரல் ஆர். கதிர்காமர்,எம்வீஓ-ரோயல் சிலோன் கடற்படை

அதனைத் தொடர்ந்து எச்.எம்.சீ எஸ் விஜய கடற்படைக்கப்பலின் முதலாவதுகட்டளைத்தளபதியாக நிமிக்கப்பட்டர் அதற்கு மேலாக ஆளுனர் ஜெனரல் சோல்பரி, குணதிலக்ககேபல்லாவ ஆகியோரின் உதவயாளராகவும் செயற்பட்டார்.1949ஆம் ஆண்டுலெப்டினன்ட் கொமான்டர், 1955ஆம் ஆண்டு கொம்மாண்டர், 1959ஆம் ஆண்டுகெப்டன், 1960ஆம் ஆண்டு தற்காலிக கெமோடோ (1964ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்ட கெமோடோ) ஆகிய பல பதிவியுர்வுகளையும் பெற்றுக் கொண்டார்.மேலதிகமாக துறைமுக (கார்கோ) கூட்டுத்தாபணத்தின்பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். 1970ஆம் ஆண்டு 07ஆம் மாதம் 1ஆம் திகதி ஓய்வு பெற்றார்.

1939-1945 வரையிலான யுத்த சேவைக்காக நட்சத்திரம்,பேர்மா நடசத்திரம் ஆகிய விருதுகளையும் பெற்றுக் கொண்டார்.

ரியர் அட்மிரல் டீ.வீ. ஹண்டர் – இலங்கை கடற்படை

1917ஆம் ஆண்டு பிறந்த இவர் சிலோன் தொண்டர் கடற்படை சிலோன் ரோயல் கடற்படை தொண்டர் ரீசேவ் படையில் 1938ஆம் ஆண்டு 10மாதம் 21ஆம் திகதியின் ஆட்சேரப்பில் சமிக்கயாளர்/கண்ணராக இணைந்து கொண்டார்.இவர் 1941ஆம் ஆண்டு பிரதான சிறு அதிகாரியாக ஆகினார். 1942ஆம் ஆண்டு தகுதிகாண் சப் லெப்டினன்டாக அதிகாரிமளிக்கப்பட்டார். அத்துடன் 1944 ஆம் ஆண்டு லெப்டினன்டாக பதவியர்வுபெற்றார்.

இவர் அனைத்து சிலோன் ரோயல் கடற்படை தொண்டர் ரீசேவ் கப்பல்களில் சேவையாற்றியதுடன் 1944 தொடக்கம் 1945 வரை இடம்பெற்ற பேர்மா யுத்தத்திற்கு சேவை செய்யம் வகையில் எம்எப்வீ 185 கப்பலை அகயாப்பிற்கு செலுத்தினார்.பொது படைக்களப்பின்போது அவர் தனது திறன் நிறைந்த பதவிலிருந்துவிலகினார்.பின்னர் மீண்டும் இணைந்து 1949ஆம் அண்டு மீன்வளத்துறை திணைக்களத்தில்இரண்டாம் தடைவையாக தனது கடமையினைபதவியேற்றார்.1953ஆம் ஆண்டுகடல்பகுதிபாதுகாப்பு,செழிப்பானபாதுகாப்பு மற்றும் காப்பு ஆகிய பயிற்சி நெறிகளையும்தொடர்ந்தார்.

1953ஆம் ஆண்டு லெப்டினன்ட் கொமான்டர், 1953ஆம் ஆண்டுகொமாண்டர், 1965ஆம் அண்டுகெப்டன்ஆகிய பதிவியுர்வகளையும் பெற்றுக் கொண்டதுடன் 1965ஆம்ஆண்டு இலங்கைதொண்டர்கடற்படையின் கட்டளைத்தளபதியாககடமையாற்றினார்.1963ஆம் ஆண்டு மெட்ராசில் விமானப் பயிற்சியினையும் பெற்றுக்கொண்டார்.அதன் பின்னர் 1970ஆம்ஆண்டு கெமோடேவாக பதவியுர்வு பெற்றார்அத்துடன் 1973ஆம் அண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி ரியர் அட்மிரலாகபதவியுர்வு பெற்று ஓய்வு பெற்றார்.

1939-1945 வரையிலான யுத்த சேவைக்காக நட்சத்திரம்,பேர்மா நடசத்திரம் ஆகிய விருதுகளையும் பெற்றுக் கொண்டார்.

ரியர் அட்மிரல் டீ.பீ குணசேகர, என்டீசீ,பீஎஸ்சீ- இலங்கை கடற்படை

1929ஆம் ஆண்டு பிறந்த இவர் ரோயல் சிலோன் கடற்படையில் 1951ஆம் ஆண்டு 07ஆம் மாதம் 23ஆம் திகதி உப லெப்டினன்டாக பதவியுர்வு ஆணையளிக்கப்பட்ட இவர் 1954 ஆம் ஆண்டு லெப்டினன்டாகபதவியர்த்தப்பட்டார். அதன் பின்னர் 1962ஆம் ஆண்டு லெப்டினன்ட் கொம்மான்டராக பதவியுர்த்தப்பட்டார். அதற்கு மேலாக 1965ஆம்ஆண்டு ஆளுனர் அவர்களுக்கு உதவியாளராகவும் செயற்பட்டார்.1970ஆம் ஆண்டு கொமாண்டராக பதவியர்த்தப்பட்டார்.1972ஆம் ஆண்டு கெப்டனாகவும் 1973ஆம் ஆண்டுகெமோடோவாகவும் பதவியர்த்தப்பட்டார்.அதன் பின்னர் ரிய அட்மிரலாக பதவியர்வு பெற்று கட்டளைத்தளபதியாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். 1965ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெற்றார்.

ரியர் அட்மிரல் ஏ.டாப்.எச். பெரேரா, விஎஸ்வி, என்டிசி- இலங்கை கடற்படை

1930 ஆம் ஆண்டு பிறந்து 1945 இல் ரோயல் இலங்கை கடற்படையில் சப்லெப்டினென்ட் ஆணை பெற்றார்.1958 ல் கன்னரி பயிற்சி நெறிக்காக ஐக்கிய இராச்சியம் சென்றார். பின்பு 1962 ஆம் அண்டுலெப்டினன்ட் கமாண்டரகவும் 1970ல்கமாண்டர்தரங்களுக்கு பதவியுயர்வு பெற்றார். 1962 ஆம் ஆண்டு மேற்கு ஈரானில் உள்ளஐக்கிய நாடுகள் இராணுவ அவதானிகள் குழு கடமைகலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

விசிஷ்ட சேவா விபுச்ஷணவ பதக்கம் வழங்கப்பட்டது

வைஸ் அட்மிரல் ஏ எச் ஏ டீ சில்வா, வீ எஸ் வீ, என் டீ சீ பீ எஸ் சீ –இலங்கை கடற்படை

1931ஆம் ஆண்டு பிறந்த இவர் ரோயல் சிலோன் கடற்படையில் 1950ஆம் ஆண்டு 09ஆம் மாதம்01 திகதி முதலாவது ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்டு கெடட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இலங்கை கடற்படையில் கெடட் அதிகாரியாகஇணைந்து கொண்டு டத்மௌத் பீஆர்என்சீ யில் தனது கடட் பயிற்சியினையும்நிறைவுசெய்தார். மேலும் அவர் 1951ம் ஆண்டு இடைநிலை அதிகாரியாக பதவிஉயர்த்தப்பட்டு. 1953ம் ஆண்டு இரண்டாம் லெப்டினன்ட் ஆகவும்உறுதி செய்யப்பட்டார், 1958ம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் தொடர்பாடல்துறையில் விஷேட கற்கைநெறியினை மேட்கொண்டார்.1969-1970 காலப்பகுதிகளில்ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயரிஸ்தானிகராக செயற்பட்ட பின்னர் 1963ஆம்ஆண்டு லெப்டினன்ட் கொம்மான்டராகபதவியுர்த்தப்பட்டார்.1970ஆம் ஆண்டுகொமாண்டராக பதவியர்த்தப்பட்டு 1973 ஆம் ஆண்டு கெப்டனாகவும் 1971 ஆம் ஆண்டுகிழக்கு (டீ ஏ எப் ஐ ஐ) இற்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் பணியாற்றியஅதேவேளையில்திருகோணமலை கடட்படையினருக்கு பொறுப்பதிகாரியாகவும்செயற்பட்டார். இதன் பின்னர் பொலன்னறுவை மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புஅதிகாரியாகவும் பணியாற்றினார். கடற்படை தளபதியாக செயற்பட்ட அதேவேளை மேலதிகசேவைக்காக கூட்டுச் சேவைகள் சிறப்பு நடவடிக்கை கட்டுப்பாட்டிற்கு பிரதானஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். 1986ஆம் ஆண்டு அக்டோபர்மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெற்ற பின்னர் கியூபா நாட்டு தூதுவராகநியமிக்கப்பட்டார்.

விசிஷ்ட சேவா விபுச்ஷணவ பதக்கம் வழங்கப்பட்டது

அட்மிரல் எச் ஏ சில்வா, வீஎஸ்வீ, என்டீசீ பீஎஸ்சீ –இலங்கை கடற்படை

1936 ஆம் ஆண்டு பிறந்த இவர் ரோயல் சிலோன் கடற்படையில் 1953ஆம் ஆண்டு 10ஆம் மாதம்12 திகதி கெடட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். டத்மௌத்பீஆர்என்சீ யில் தனது கெடட் பயிற்சியினையும் நிறைவு செய்தார். மேலும் அவர் 1955ம் ஆண்டு இடைநிலை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டு. 1956ம் ஆண்டுஇரண்டாம் லெப்டினன்ட் ஆகவும் 1958ம் ஆண்டு லெப்டினன்ட் ஆகவும்1966ம் ஆண்டுலெப்டினன்ட்கொமான்டர், 1973ஆம் ஆண்டு கொம்மாண்டர், 1978ஆம் ஆண்டுகெப்டன், 1983ஆம் ஆண்டுகெமோடோ போன்ற பதவியுயர்வுகளையும்பெற்றுக்கொண்டதோடு 1986ம் ஆண்டு பாதுகாப்பு படிகளின் பிரதானியாக பதவிஉயர்த்தப்பட்ட முதலாவது ரியர் அட்மிரல் என்பதோடு 1991 ஆம் ஆண்டு அக்டோபர்மாதம் 31ஆம் திகதிமுதல் வைஸ் அட்மிரல் மற்றும் அட்மிரல் ஆகிய பதவிகளையும்வகித்துஓய்வு பெற்றரார்.

விசிஷ்ட சேவா விபுச்ஷணவ பதக்கம் வழங்கப்பட்டது.

அட்மிரல் W.W.E.C. பெர்னாண்டோ ndc, psc, VSV –இலங்கை கடற்படை

1938ம் ஆண்டு ஒக்டோபர் 10ம் திகதி பிறந்த அட்மிரல் W.W.E.C. பெர்னாண்டோ மொறட்டுவ – பிரின்சி ஒப் வேல்ஸ் கல்லூரியில் தனது கல்வியினை பயின்றார்.1953ம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி இலங்கை கடற்படையில் கெடட் அதிகாரியாகஇணைந்துகொண்டு ஐக்கிய இராச்சிய டாட்மௌத் பிரித்தானிய ரோயல் கடற்படைகல்லூரியினால் வழங்கப்பட்ட 05 மாத கால அடிப்படை பயிற்சியினையும்நிறைவுசெய்தார். அவர் 1959ம் ஆண்டு இடைநிலை அதிகாரியாகவும், 1960ம் ஆண்டு (எக்டிங்) இயங்கும் இரண்டாம் லெப்டினன்ட் ஆகவும், 1962ம் ஆண்டு மார்ச் 01ம்திகதி இரண்டாம் லெப்டினன்ட் ஆகவும், பதவி உயர்வு பெற்றார். மேலும் அவர், 1963ம் ஆண்டு ஏப்ரல் 01ம் திகதி லெப்டினன்ட் தரத்திற்கும், 1971ம் ஆண்டுஏப்ரல் 01ம் திகதி லெப்டினன்ட் கொமாண்டர் தரத்திற்கும், 1978ம் ஆண்டுமார்ச் மாதம் 01ம் திகதி கொமாண்டர் தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றார். முறையே 1984ம் ஆண்டு ஜனவரி மாதம் 01ம் திகதி மற்றும் 1986ம் ஆண்டு ஜுலை 01ம்திகதிஆகிய வருடங்களில் கேப்டன் மற்றும் கொமோடோ ஆக தரமுயர்த்தப்பட்டதோடு, அவர் 1991ம் ஆண்டு ரியர்அட்மிரல், கடற்படை பிரதானி மற்றும் வைஸ் அட்மிரல் ஆகஇலங்கை கடற்படை கட்டளை அதிகாரியினால் தரமுயர்த்தப்பட்டார்.

அட்மிரல் W.W.E.C. பெர்னாண்டோ அவர்கள் பிரிட்டிஷ் நிறுவனம்முகாமைத்துவத்தில் அங்கத்துவத்தை பெற்றதோடு, ஐக்கிய இராச்சிய கடல்நிறுவனத்தில் பாதுகாப்பு கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் அவர் மாஸ்டர் கடலோடிகள் பட்டத்திற்கான சான்றிதழினையும்பெற்றுக்கொண்டார். இதேவேளை, ஐக்கிய இராச்சிய கடல்நிறுவனத்தில் இலங்கை கிளைக்கான முதலாவது தலைவராகவும் அவர் திகழ்ந்தார்.

அவருடைய மகத்தான நன்மதிப்பு அவர் SLN இல் “SINHALE' முதலாவதுகுறியாக்க முறையை திட்டமிட்டார் மற்றும் சுங்கம் மற்றும் சமுதாயஒழுங்குமறைகளினுடைய சேவைகள் எனும் புத்தகத்தின் உரிமையாளராகவும்காணப்பட்டார்.

அவர் தொடர்ந்த கற்கை நெறிகளக 1963 ஜனவரி 15ம் திகதி தொடக்கம் 1963 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் பாகிஸ்தான் கடற்படையில்கடல்பயிற்சியினையும், (Sea Training on board) இந்திய INS Vendurathi வெண்டுரதிஇல் 1976 ஆம் அண்டு செப்டம்பர் தம் 01ம் திகதிதொடக்கம் 1977 மார்ச் 16ம்திகதி வரையிலான காலப்பகுதியில் தொடர்பாடல் துறையில்விஷேடகட்கைநெறியினையும், 1977 ஜனவரி 01ம் திகதி தொடக்கம் 1977 டிசெம்பர் 01ம்திகதி வரையிலான காலப்பகுதியில் இந்திய வெலிங்டன்பாதுகாப்பு சேவைகள்கல்லூரியில் பாதுகாப்பு கட்கைநேறியினையும் 1987 ஜனவரி 03ம் திகதி நியூடில்லியில் தேசிய பாதுகாப்பு கல்லூரி கட்கை நெறியினையும் மேற்கொண்டார்.

அட்மிரல் பெர்னாண்டோ சிலோன் பாதுகாப்பு படைகள் நீண்டகால சேவை விருதுமற்றும் கிலஸ்ப், கடற்படை 25 ம் வருட பதக்கம், இலங்கை பாதுகாப்பு படைகள்நீண்டகால சேவை விருது மற்றும் கிலஸ்ப், இலங்கை குடியரசு பாதுகாப்பு சேவைகள்பதக்கம், ஜனாதிபதி பதவியேற்பு பதக்கம், பூர்ண பூமி பதக்கம் மற்றும் விசிஷ்டசேவா விபூஷணம் பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

அவர் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை தீவிரப்படுத்தி அவர்களின் பிரதானவளங்கள் வழியை முடக்கியமைக்காக 1992 ஆம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி கொழும்பில் வைத்துதற்கொலை தாக்குதல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். மரணத்திற்குப்பின் அவர்அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டார்.

அட்மிரல் டி.ஏ.எம்.ஆர். சமரசேகரவிஎஸ்வி, யுஎஸ்பி, என்டிசி, பிஎஸ்சி- இலங்கை கடற்படை

1948 ஆம் ஆண்டில் பிறந்த இவர் ரோயல் கடற்படையில் நேரடி உள்சேர்ப்பு உப லெப்டினன்ட்ஆக 23.06.1971 சேர்ந்தார்.1974 ஆம் ஆண்டு லெப்டினன்ட், 1982 லெப்டினன்ட் கமாண்டர், 1985ல் கமாண்டர், 1987ல் கேப்டன், 1990ல் கொமொடோர், 1992 ல் ரியர்அட்மிரல், 1993ல் கடற்படை தளபதி பதவியை ஏற்ற பின் வைஸ் அட்மிரல் ஆக பதவிஉயர்வு பெற்றார். 1992ல் அமரிக்காவில் அலுவலர் பயிற்சியை நிறைவு செய்து கொண்டார்.1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி ஓய்வு பெற்றதுடன் அட்மிரல் தரத்தித்கு பதவி உயர்த்தப்பட்டார். அவர்விசிஷ்ட சேவா விபூசணம்பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டார்.

வைஸ் அட்மிரல் எச்.சி.ஏ.சி. திசேரா, விஎஸ்வி, யுஎஸ்பி, என்டிசி – இலங்கை கடற்படை

வத்தளை பரி. ஆந்தோனி கல்லூரியில் கற்ற இவர் 1947 ஆம் ஆம் ஆண்டு பிறந்தார்.திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் முதலாம் கெடெட் உள்வாங்கலின் ஒருவராக இணைந்து கொண்டார்1973ஆம் ஆண்டில் உப லெப்டினன்ட் ஆகவும் 1974 ஆம் ஆண்டில் லெப்டினன்ட் ஆகவும் பதவி உயர்வு பெற்றார்.

விசிஷ்ட சேவா விபுச்ஷணவ பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டார்.

அட்மிரல் டி.டப்.கே சந்தகிரி, RSP,VSV, USP, rcds, MSc, psc, FCMI, MNI – இலங்கை கடற்படை

1947 ஆம் ஆண்டில் பிறந்த அட்மிரல் சந்தகிரி அவர்கள் வேயாங்கொடை செயின்ட் மேரி கல்லூரியில் மற்றும் கேகாலை மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். 1966 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கடற்படையின் இணைந்து கொன்ட இவர் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் முதலாம் கெடட் அதிகாரி ஆட்சேர்ப்பில் கெடெட் அதிகாரியாக இணைந்து கொள்ளும் சிறப்புரிமை 1966 ஆண்டு ஜலை மாதம் 01 ஆம் திகதி பெற்றுள்ளார். 1973 ஜூலை மாதம் முதலாம் திகதி சப் லெப்டினன்ட் ஆக ஆணையளிக்கப்பட்ட இவர் நீண்ட ஆயுதங்கள் பயிற்ச்சி பெற்று 1984 ஆண்டில் இந்தியாவில் வெலிங்டன் பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1985 ஆம் அண்டு ஜனவாரி 01 திகதி கமாண்டர் நிலைக்கு பதவி உயர்வு பெற்று ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி, பணியாளர்கள் நல அலுவலர், பணியாளர்கள் தொடர்பாடல் அதிகாரி, புலனாய்வு அதிகாரி மற்றும் தலைமையகத்தில் பிரதிப் பணிப்பாளர் கடற்படை நடவடிக்கை போன்ற பொறுப்புக்களை வகித்தார். பின்பு 1984.04.01 ஆம் திகதி மற்றும் 1992.02.01 திகதி முறையே கெப்டன் மற்றும் கொமொடோர் தரத்துக்கு உயர்வு பெற்றார். கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதியாகயவும் அவர் பதவி வகித்துள்ளார். வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளின் தளபதியாகவும் செயல்பட்டுள்ளார். அவர் அடுத்தடுத்து 4 கடற்படை தளபதிகளினால் பணிப்பாளர் கடற்படை நடவடிக்கை பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். 1996 ஆண்டில் இங்கிலாந்து பாதுகாப்பு பணியாளர்கள் பாடநெறி கற்றலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிகாரியாக இவர் மரியாதை பெற்றுள்ளார். 1997.03.08 ஆம் திகதி ரியர் அட்மிரல் பதவிக்காக பதவியுயர்வு பெற்று 1998.04.01 திகதி கடற்படை தலைமை பணியாளராக நியமிக்கப்பட்டார். 1998 யில் வடக்கு கடற்படை கட்டளை தளபதியாக பணியாற்றிய இவர் காரைநகர் தீவு மற்றும் யாழ்ப்பாண தீபகற்பத்திறம் இணைக்கவதுக்காக கரையோர பாதை சரி செய்யும் நடவடிக்கை எடுத்துள்ளார். தம்பகொலபட்டுன சங்கமித்தா போதின் வஹன்சே வந்த இடத்தில் பன்சல் உறுவாக்குதல், பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட ஹிரிகடு சேய பன்சல மற்றும் பாதை புனரமைப்பு பொன்ற பல தொண்டு நிகழ்வுகளை அவர் செய்துள்ளார். 2001.01.01 திகதி வைஸ் அட்மிரல் பதவிக்கி உயர்த்தபட்டத்துடன் கடற்படை தளபதி பதவியில் கடமையேற்றிய இவர் 2004 ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் மற்றும் சேதமடைந்த கடல்சார் சொத்துக்கள் மீட்டெடுக்க தேவையான ஏற்பாடுகள் விரைவாக எடுத்துள்ளார். தேசிய கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் கூடைப்பந்து சங்கத்தின் செயலாளராக பணியாற்றியுள்ள இவர் பிரகு அதிமேதகு ஜனாதிபதியின் பரிந்துரை மீது 2004.09.15 திகதி பாதுகாப்பு படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். மெலும் இவர் தேசிய பாதுகாப்பு கவுன்சலில் இத்தகைய பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் கடற்படை அதிகாரியாக வரலாற்றில் சேர்ந்துள்ளார். 2005.09.01 திகதி அட்மிரல் பதவிக்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளார். அவருடைய பிரியத்துக்குரிய மனைவி திருமதி பர்ல் சந்தகிரி ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆவார். இவர் யசுரு சந்தகிரி மற்றும் சதுர சந்தகிரி ஆகியோரின் தந்தெயுமாவார்.

அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆர்எஸ்பி, விஎஸ்வி, யுஎஸ்பி, எம்பிஏ, எம்எஸ்சி, என்டிசி, பிஎஸ்சி, டிஐஎஸ்எஸ், எம்ஆர்ஐஎன், எம்என்ஐ

அட்மிரல் வசந்த கரன்னகொட 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி இலங்கை கடற்படைதளபதியாக பதவியேற்றார். பிராந்திய தளபதியாக இருந்து நேரடியாக கடற்படை தளபதியாக நியமனம் பெற்ற ஒரே ஒரு கடற்படை அதிகாரி ஆவார்..

அவர் தனது, புகழ்பெற்ற அப்பழுக்கற்ற கடற்படை வாழ்க்கையில் பல சாதனைகளைஅடைந்துள்ளார். அவர் இரண்டு முதுநிலை பட்டம் பெற்ற முதல் கடற்படை அதிகாரிஆவார். வணிக நிருவாகமும் பாதுகாப்பு ஆய்வுகள் தொடர்பில் அவருக்கு இருமுதுமானிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.. ரோயல் நிறுவனம் நேவிகேஷன் மற்றும் ஐக்கிய இராச்சியம் கடல்சார் நிறுவனம் ஆகியவற்றின் அங்கத்தவரும் ஆவார்.

ஹவாய் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய பசுபிக் மையம் மற்றும் வாஷிங்டன்டி.சி உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிழக்கு-தெற்கு ஆசியாவில்மூலோபாய கற்கைகளுக்கான மையத்தின் பழைய மாணவரும் ஆவார். அவர் 1987ல் ஐக்கிய இராச்சியம் ரோயல் கடற்படை கல்லூரி மற்றும் 2000 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தேசியபாதுகாப்புப் படை கல்லூரி ஆகியவற்றிலும் பட்டத்தினை பெற்றுள்ளார்.

ஏழுசந்தர்ப்பங்களில் நான்கு கடற்படை கட்டளை பிராதியங்களைநிர்வகித்துள்ளார்- வடக்கு, கிழக்கு மற்றும் மேட்கு கட்டளைகள் இரு தரம், வடமத்திய ஒரு தரம், ஒட்டுமொத்தமாக ஆறு வருடங்கள். கட்டளைத் தளபதியாக அவர்கடற்படையின் அடிப்படை வசதிகளை கடற்படை வளங்களை பயன்படுத்தி குறைந்த செலவில்அபிவிருத்தி செய்து வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முகமாகசெய்தஅவரின் சேவை பலராலும் பாரட்டப்பட்டன.

அட்மிரல் கரன்னாகொட கடற்படை தலைமையகத்தின் முதலாவது பணிப்பாளர் நாயகம்நடவடிக்கைகள் ஆவார். அதற்கு முன்னர் இயக்குனர் கடற்படை நடவடிக்கைகள்பணிப்பாளர் கடற்படை திட்டங்கள் மற்றும் திட்டமிடல் அத்துடன் இயக்குனர்கடற்படை ஆளணி மற்றும் பயிற்சி போன்ற பதாவிகளை வகித்தார்.

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதியாக சேவையாற்றியுள்ளார்.மேட்கு, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய பிரதி தளபதியாகவும்சேவையாற்றியுள்ளார்.

அவர் ஒரு நெவிகேஷன் நிபுணராவார். பல கப்பல்களில் சேவையாற்றியுள்ளார்.எஸ்எல்என்எஸ் விக்கிரம வின் கட்டளை அதிகாரி பதவியை விட்டு 7ம் கண்காணிப்புகட்டளை படை தளபதியாக பதவியேற்றத்துடன் அவரின் நீண்ட கால கடல் சேவையும் முற்றுப்பெற்றது.

அட்மிரல் கரன்னாகொட, முப்படைகளின் தளபதி மற்றும் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களினால் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் கடற்படை வியூகத்தின்பிரதான நபராக மற்றும் யுத்த வெற்றிக்கு ஆற்றிய பங்களிப்புக்காக அட்மிரல்தரத்திற்கு பதவி உயர்வளிக்கப்பட்டார். கடற்படையின் 59 வருட வரலாற்றில்நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற அட்மிரல் தரத்தை அடைந்த முதலாவது தளபதிஇவராவார்.

அவர் ரண சூர பதக்கம் பெற்றுள்ளார். மேலும் விஷிஸ்ட சேவா விபூஷணம், உத்தமசேவா பதக்கம், இலங்கை குடியரசு ஆயுதப் சேவை பதக்கம், 50 ம் சுதந்திர தினபதக்கம், இலங்கை பாதுகாப்பு படைகள் நீண்ட கால சேவை பதக்கம், ஜனாதிபதியின்பதவியேற்பு பதக்கம், 50 வது சுதந்திர ஆண்டுவிழா நினைவு பதக்கம், வடக்குமற்றும் கிழக்கு ஆபரேஷன் பதக்கம், பூர்ண பூமி பதக்கம் மற்றும் ரிவிரெசபதக்கம் போன்ற பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

அட்மிரல் டிஎஸ்ஜி சமரசிங்ஹ ஆர்எஸ்பி, விஎஸ்வி, யுஎஸ்பி, என்டிசி, பிஎஸ்சி, டிஐஎஸ்எஸ்

அட்மிரல் டிஎஸ்ஜி சமரசிங்ஹ, 1974 ஆம் அண்டில் கெடெட் அதிகாரியாக கடற்படையில்இணைந்தார். அவர் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 4ம் ஆற்சேர்ப்பின் சிறந்த பயிற்சியாளர் விருதினை வென்றுள்ளார். 1976 ஆம் ஆண்டுபிரித்தானியா ரோயல் கடற்படை கல்லூரி டார்ட்மவுத் இங்கிலாந்து, வின் சிறந்தசர்வதேச மிட்ஷிப்மன் விருதை வென்றுள்ளார். அட்மிரல் டிஎஸ்ஜி சமரசிங்ஹ ஒருசிறந்த நேவிகேஷன் நிபுணர்.ஐஎன்எஸ் வேண்டுருதி, இந்தியா நேவிகேஷன் மற்றும்இயக்கம் பள்ளியில்பயிற்சியின் போது முதலாவதாக வந்தார்.

கடல் மற்றும் கரை ஸ்தாபணங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.கடலில் சிறிய ரோந்து படகுகள், நீண்ட தூர ரோந்து படகுகள், வேக தாக்குதல்படகுகள், கண்காணிப்பு கட்டளை டெண்டர் மற்றும் கண்காணிப்பு கட்டளை கப்பல் (அச்சமயம் பிரதான கப்பல்) போன்றவற்றில் சேவையாற்றியுள்ளார். அவரின் 7 வருடகடல் சேவையில் 41/2 வருடங்கள் கட்டளை தரத்தில் அமைந்த்துள்ளது. அவர்டக்கில் ஒரு செயல்பாட்டு ஸ்தாபனத்தில் பிரதானியாக சேவையாற்றியுள்ளார்.இரண்டு முன்னணி பயிற்சிநிறுவனங்களில்பயிற்சி தளபதியாகவும்தலைமையகத்தில் பணிப்பாளர் அந்தஸ்துடைய பதவிகளையும் ஒரே நேரத்தில்வகித்துள்ளார்.

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்திய பிரதிதளபதியாக சேவையாற்றியதுடன் 2002 ஆம் ஆண்டில் அவர் தென் பிராந்திய தளபதியாகவஞும் நியமிக்கப்பாட்டார். அவரே பணிப்பாளர் நாயகம் சேவைகள் (2004) நியமனத்திலிருக்கும் போது பணிப்பாளர் திட்டங்கள்&திட்டமிடல், கடற்படைதளபதியின் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி காரியாலயத்தின்கூட்டு செயல்பாட்டு தலைமையகத்தின்பிரதான அதிகாரி ஆகிய பதவிகளை ஒரேநேரத்தில் வகித்த முதலாவது அதிகாரியும் ஆவார். இருதரப்பு விவகாரங்கள்தொடர்பான இந்தியா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா (2006 1995) போன்றநாடுகளுக்கு கடற்படை பிரதிநிதிகள் குழுக்ககளை வழிநடத்திச் சென்றுள்ளார்.

மேலும் அவர் அமெரிக்க்காவின் ரோட் ஐலன்ட், நிவ்போர்ட் யுத்த கல்லூரியின்சிறப்பு பட்டதாரியாகவும் (வகுப்பு 38), இந்தியாவின் தேசிய பாதுகாப்புவித்தியாலயத்தின் 2005 (45 ம் வகுப்பு) சிறப்பு பட்டதாரியும் ஆவார்.

தேசிய பாதுகாப்பு படை கல்லூரியில் – தில்லி, அவரின் புகழ்பெற்ற ‘கடல்சார் பயங்கரவாதத்தை தோற்கடிக்க வியூகம்’ எனும் கட்டுரை மற்றும் தேசியகடல்சார் அறக்கட்டளை – இந்தியாவில்இந்திய இலங்கை பட்டறை கட்டுரை ‘பேண்தகு கூட்டுறவு பாதுகாப்பு சவால்கள் மற்றும் விருப்பங்கள்’ ஆகியனபிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளாகும்.

கொமொடோர் தரத்தில் இருக்கும் போது அமெரிக்க ஹவாயிலுள்ள ஆசிய பசிபிக்பாதுகாப்பு ஆய்வுகள் மையத்தில் 2003ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆய்வுகளுக்கானநிறைவேற்று பாடநெறியை மேற்கொண்டார். அதில் 91 பன்னாட்டு மாணவர்கள்மத்தியில் இருந்து சிறப்புமிகு பட்டதாரியாக அவர் அங்கீகாரம் பெற்றார்.

அவர் நான்கு தளபதிகளிடமிருந்து (1977 - 2006) 5 பாராட்டு கடிதங்களைபெற்றுள்ளார்.லிபியா (2009) மற்றும் இந்தோநேசியா (2006) விற்கான முறையேஜனாதிபதி மற்றும் பிரதமர் விஜயங்களின் போது பிரதிநிதிகள் குழு அங்கத்தவராக சென்றுள்ளார்.

வடகிழக்கு பிரதேசத்தை விடுவிக்க மனிதாபிமான நடவடிக்கைகளின்தொடக்கத்தில் அவர் வேலைபார்க்கும்வடக்கு கட்டளை தளபதி (டிசம்பர் 2005) நியமிக்கப்பட்டார், பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் (2006), கிழக்கு கட்டளைதளபதி (2007), வடக்கு கட்டளை தளபதி (2008). காலத்தில் புலிகளின் மிதக்கும்ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் பணிப்பாளர் நாயகம்நடவடிக்கைகள் மற்றும் கிழக்கு கட்டளை தளபதி 2006 – 2008 பொறுப்பில்இருந்தார். அவர் 2009 மே மாதம் கடற்படை பிரதானியாக பதவியுயர்வு பெற்றார்.ரண சூர பதக்கம், விஷிட்ட சேவா பதக்கம், உத்தம சேவா பதக்கம் ஆகியவற்ற்னினை பெற்றுள்ளார்.

விளையாட்டு பணிகள் :

இவர் முன்னாள் இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்த பிரான்சிஸ் சமரசின்ஹமற்றும் நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி. உமாவதி சமரசின்ஹதம்பதிகளின் இரண்டாம் மகனாவார். இவரின் பெற்றோர்கள் மாளிம்பொடை பாலடுவைமற்றும் ஹக்மன புஹுல்வெல்லவை சேர்ந்தவர்கள். இவரின் மனைவி மாலதி மகள் நதீஷா (18) மற்றும் மகன் ஹரித் (13).

அட்மிரல் திசாநாயக்க டப்வி, ஆர்எஸ்பி&பார், விஎஸ்வி, யுஎஸ்பி, என்டிசி, எம்பில் (டி&எஸ்எஸ்), எம்எஸ்சி (டிஎஸ்), மேனேஜ், எம்என்ஐ (லண்டன்)

அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதிவைஸ் அட்மிரல் டி டப் ஏ எஸ் திசாநாயக்க டப்வி, ஆர்எஸ்பி&பார், விஎஸ்வி, யுஎஸ்பி, என்டிசி அவர்களை நான்கு நட்சத்திர அட்மிரலாக பதவிஉயர்த்தப்பட்டார். இவர் 15 ஜனவரி 2011ல் 17ம் கடற்படை தளபதியாகபதவியேற்றார்.

2009 ஜூலையில் அதிமேதகு ஜனாதிபதி ஆயுதப்படைகலின் தளபதிஎன்ற வகையில்கடற்படையின் பிரதானியாக, பயங்கரவாதத்தித் கெதிராக தாய்நாட்டை காக்கும்பணியில் அவரின் பங்களிப்புகளை கருத்தில் கொண்டு நியமித்தார். பின்னர் 15 ஜனவரி 2011 ல் கடற்படை தளபதியாக மூன்று நட்சத்திர அந்தஸ்துடைய வைஸ்அட்மிரல் நிலைக்கு பதுவி உயர்வு அளிக்கப்பட்டார்.

அட்மிரல் திசாநாயக்க புலிகளுடனான இறுதி யுத்தத்தில் வடக்கு கட்டளைதளபதியாக கடற்படை யுத்த நடவடிக்கைகளை வழிநடத்தினார். 60 வடுடம்பழைமைவாய்ந்த கடற்படையின் அதிகமாக பதக்கம் பெற்று தளபதியானவரும் இவராவார்.தற்கொலை தாக்குதல் ஒன்றில் உயிர் பிழைத்து அத்தாக்குதலின் போது சக அதிகாரிஒருவரின் உயிரை காப்பாற்றியமைக்காக அவருக்கு வீரோதார விபூசனைய விருதுவழங்கப்பட்டது. மேலும் இருதடவைகள் ரணசூர பதக்கமும் விசிஷ்ட சேவா விபூசனய, உத்தம சேவா பதக்கம் உட்பட பதினொரு போர் நினைவு, நடவடிக்கை மற்றும் சேவைபதக்கங்களை பெற்றுள்ளார். அத்துடன் மூன்று, ஐந்து நட்சத்திர பாராட்டுபதக்கங்ம் உட்பட அலங்கார பதக்கங்கள் பெற்றுள்ளார்.

அட்மிரல் திசாநாயக்க 1 ஆம் திகதி ஜூன் மாதம் 1977 ஆம் ஆண்டில் கடற்படையில் கடெட் அதிகாரியாக இனைந்துதிருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் அடிப்படை பயிற்சிபெற்றார். அதன் பின் உப லெப்டினன்ட் பயிற்சி நெறியை இந்தியாவில்மேற்கொண்டார். இளநிலை அதிகாரியாக அவர் ஐக்கிய ராஜ்யம் பிரிட்டிஷ் ரோயல்கடற்படையில்சர்வதேச போர் பாடநெறியை மேற்கொண்டார்.

இவர் 15 வருட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சேவை செய்துள்ளதோடு கடல்சேவையில் 8 வருடங்களாகும். அட்மிரல் திசாநாயக்க கடற்படை தலைமையகத்தின்பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் மற்றும் பணிப்பாளர் நாயகம் சேவைகள் ஆகியபதவிகளை வகித்துள்ளார். அதற்கு முன் தெற்கு பிராந்தியத்தின் தளபதியாகபணியாற்றினார். பணிப்பாளர் கடற்படை நிர்வாகம், கடற்படை ஆளணி மற்றும்கடற்படை நலன்புரி ஆகிய பதிவிகளையும் வகித்துள்ளார். பாதுகாப்பு சேவைகள்விளையாட்டு சபை மற்றும் கடற்படை விளையாட்டு சபை ஆகியவற்றின்செயலாளருமாகவும் பணியாற்றியுள்ளார்.

அட்மிரல் திசாநாயக்க இந்தியாவின் சிறப்பு மிக்க தேசிய பாதுகாப்புகல்லூரியின் புகழ்பெற்ற பட்டதாரியாவார். மேலும் பாதுகாப்பு மற்றும்மூலோபாய ஆய்வுகளுக்கான முதல் வகுப்பு முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார்.கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின்பாதுகாப்பு ஆய்வுகள் மேலாண்மைமுதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். வாஷிங்டன் தேசிய பாதுகாப்புபல்கலைக்கழகம் மற்றும் ஹவாய் ஆசிய பசுபிக் பாதுகாப்பு ஆய்வுகளுக்கானநிலையம் ஆகியவற்றின்புகழ்மிக்க பழைய மாணவரும் ஆவார். ஐக்கிய ராஜ்யத்தின்கடல் சார் நிறுவனத்தின் அங்கத்தவரும் ஆவார்.

இவர் 1998 – 2001, இந்தியா, புது தில்லியில் இலங்கை தூதரகத்தின்பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றினார். சயுற கப்பல் உட்பட இந்தியாவில்இருந்து இராணுவத் தளபாடங்களை கொள்வனவு, இரு ஆண்டு ஆப்ஸ் ஆய்வு கூட்டங்கள், சர்வதேச கடல் எல்லைக் கோட்டுக்கு கூட்டங்கள் மற்றும் இலங்கை மற்றும்இந்திய கடற்படை தலைமையகங்களுக்கிடையே நேரடி தொடர்புகள் ஏற்படுத்துவதில்இவர் முன்னோடி பங்கு வகித்தார்.

அட்மிரல் திசாநாயக்க, ஒரு இளம் அதிகாரியாக 1984ல் காங்கேசன்துறைக்குவடக்கே 19 உறுப்பினர்களுடன் முதன்முதலில் ஒருபுலிகளின் படகை அழித்தகுழுவை தலைமை தாங்கிய பெருமை இவரையே சாரும். மேலும் கடலில் கடற்படைபடகுகளில் கட்டளை அதிகாரியாக 30 தனிப்பட்ட குறுக்கீடுகள் மற்றும் கடலில்தாக்குதல்களை இவர் கொண்டு நடத்தியுள்ளார்.

வகை படகு படையின் கட்டளை அதிகாரியாக இருந்து கடற்படை தலைமையை அடைந்தமுதலாம் அதிகாரியும் இவராவார். அட்மிரல் திசாநாயக்க வடமராச்சி, பலவேகையமற்றும் ரிவிரெச போன்ற அனைத்து கூட்டு நடவடிக்கைகளிலும் பங்கேற்றுள்ளார்.முல்லைதீவு கரையிரங்கல் மற்றும் 1996 வெளியேற்றுதல் நடவடிக்கைகளை போன்றகடற்படை நடவடிக்கைகளிலும் இவர் தலைமை வகித்துள்ளார்.

அட்மிரல் திசாநாயக்க கடற்படையின் அதிகம் பாராட்டப்பட அதிகாரிகளுள்ஒருவராவார். செயல்பாட்டு நடவடிக்கைகள், புத்தாக்கம் மிக்க போர்உட்கட்டமைப்பை அபிவிருத்தி, கட்டுமான துறையில், மேலாளர் மற்றும் நிர்வாகப்திறன், கல்வி சாதனைகள், படைப்பாற்றல், கலை திறமை மற்றும் நாட்டின்நலனுக்காக அதிக அர்ப்பணிப்பு போன்ற இவரது சிறந்த திறமைகளுக்காக பல கடற்படைதளபதிகளிடமிருந்து பாராட்டு சான்றிதழ்களையும் இவர் பெற்றுள்ளார்.

பிரபல கலை குடும்பத்திலிருந்து வரும் இவர் சிறந்த ஒரு கவிஞரும்பாடலாசிரியரும் ஆவார். 1983ல் நெலூகாவை மணந்த இவருக்கு மது எனும் மகளும்ருவணர எனும் மகனும் உள்ளனர். இவர்களிருவரும் பட்டதாரிகலாவர்.

அட்மிரல் திசாநாயக்க நாரம்மலை, மயூரபாத வித்தியாலயத்தில் கல்வி கற்று, மத்திய கல்லூரி ஒன்றில் கல்வி கற்றுபாதுகாப்பு படை ஒன்றின் தளபதியானமுதலாவது அதிகாரியாவார். மேலும் வடமேற்கு மாகாணத்திலிருந்து பாததுகாப்புசேவை ஒன்றின் தளபதியான முதலாவது அதிகாரியும் அவராவார்.

அட்மிரல் ஜயந்த பெரேரா ஆர்டப்பி, விஎஸ்வி, யுஎஸ்பி, என்டிசி, பிஎஸ்சி, எம்எஸ்சி (டிஎஸ்), எம்ஏ (ஐஎஸ்), டிப்ளோம (ஐஆர்), டிப்ளோம (சிஆர், எப்என்ஐ (லண்டன்) )

அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதிஅவர்கள் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, ஆர்எஸ்பி, விஎஸ்வி, யுஎஸ்பி, ஆர்சிடிஎஸ், பிஎஸ்சி அவர்களை 27 செப்டம்பர் 2012 முதல் கடற்படையின்தளபதியாக நியமிக்கப்பட்டார்.. 63 வருட வரலாற்றைக் கொண்ட கடற்படையின் 18 ம் தளபதிஇவராவார். இவர் 28 ஜூன் 2014ல் நான்கு நட்சத்திர அந்தஸ்துடைய அட்மிரலாகபதவி உயர்வு பெற்றார்.

கடற்படை செயல்பாட்டு தலைமையிலிருந்து நேரடியாக கடற்படை தலைமையை ஏற்றஇரண்டாவது அதிகாரியும் இவராவார். அதற்கு முன் வரலாற்று புகழ்மிக்கதிருகோணமலை கப்பல் கட்டு தளத்தில் கிழக்கு பிராந்திய தளபதியாககடைமையாற்றினார். அவரது 36 வருட கால சிறந்த சேவையில் அவர் பல விடயங்களில்முன்னோடியாக திகழ்ந்துள்ளார். இவர் பாதுகாப்பு ஆய்வுகள் முதுகலை அறிவியல்பட்டம் மற்றும் சர்வதேச ஆய்வுகள் உள்ள முதுகலைமானிப்பட்டம் ஆகியஇரண்டுமுதுகலை பட்டங்களை பெற்றுள்ளார். அவர் தற்சமயம் தத்துவவியல் கலாநிதிபட்டத்திற்காக படித்து வருகிறார்.

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்திய பிரதிதளபதியாக கடமையாற்றியுள்ள இவர் 2002 ல் தெற்கு பிராந்திய தளபதியாகநியமிக்கப்பட்டார். இயக்குனர் கடற்படை திட்டங்கள்&திட்டங்கள், கடற்படை தளபதியின்கடற்படை உதவியாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானியின்கீழ் இயங்கியகூட்டு செயல்பாட்டு தலைமையகத்தின் தலைமை உத்தியோகத்தர்எனும் பதவிகளை ஒரே நேரத்தில் ஏற்று நடந்த முதலாம் இயக்குநர் நாயகம் சேவைகள் (2004) இவரேஆவார். அவர் இந்தியா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காபோன்ற நாடுகளுக்கு இரு தரப்பு விவகார கடற்படை தூதுக்குழுக்களை வழிநடத்திசென்றிருக்கிறார் (1995 – 2006).

அட்மிரல் கொலம்பகே அவர்கள் பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும்அதிகாரிகள் கல்லூரியின் தொடக்கத்திலிருந்து விரிவுரையாலராகவும்இருக்கிறார். கடல்சார் பாதுகாப்பு விடயத்தில் அவர் ஒரு நிபுணர் மேலும்அவ்விடயம் தொடர்பில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளதுடன் துறைமுக மற்றும்கப்பல் பாதுகாப்பு தொடர்பில்சர்வதேச கடல் அமைப்பினால்சான்றளிக்கப்பட்டஇலங்கை மற்றும் சர்வதேச அரங்கில் ஒரு விரிவுரையாளரும் ஆவார். இவர் ‘கடற்படைவிதிமுறைகள் மற்றும் கோவைகள்’ எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய வெலிங்கடன் பாதுகாப்பு சேவைகள் கல்லூரி, அமரிக்கா ஹவாய் ஆசியபசிபிக் பாதுகாப்பு கற்கை நிலையம் மற்றும் ஐக்கிய இராச்சிய ராயல்பாதுகாப்பு கற்கை கல்லூரி ஆகியவற்றின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரும் ஆவார்.ஐக்கிய இராச்சியகடல்சார் நிலையத்தின் அங்கத்தவரும் தற்போது அதன்இலங்கைக்கான காரியாலயத்தின் தலைவராகவும் உள்ளார். பாதுகாப்பு ஆய்வுகள், மோதல் தீர்மானம், சர்வதேச விவகாரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்படிப்லோமாக்களையும் பெற்றுள்ளார்.

அட்மிரல் கொலம்பகேஆகஸ்ட் 23, 1978 ல் கடற்படையில் இனைந்து திருகோணமலைகடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தனது அடிப்படை பயிற்சியை பெற்றார்.பயிற்சி முடிவில் 7ம் உள்வாங்களின் சிறந்த கெடெட் வீரருக்கான “கவுரவபட்டயம்” அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஐக்கிய இராச்சியத்தின்டார்த்மௌத் பிரித்தானியா ராயல் கடற்படை கல்லூரியில் சர்வதேச மத்திய அதிகாரிபாடநெறியை பின்பற்ற வாய்ப்பும் பெற்றார்.

4 வருட காலத்தில் கிழக்கு, வடக்கு, மேதகு மற்றும் வடமத்திய கட்டளைபிராந்தியங்களின் கட்டளை தளபதியாக கடமையாற்றியுள்ளார். கடற்படைதலைமையகத்தின் பணிப்பாளர் நாயகம் நடவடிக்ககைள் பொறுப்பை இரண்டு தடவைகள்பெற்றுள்ளார். அதற்கு முன்னர் பணிப்பாளர் நாயகம் சேவைகள், மற்றும்பணிப்பாளர் நாயகம் கடற்படை பயிற்சி&பணியாளர் ஆகவும் இருந்துள்ளார்.வடமத்திய, தென் மற்றும் கிழக்கு பிராந்தியங்களின் பிரதி கட்டளைதளபதியாகவும் சேவையாற்றுயுள்ளார்.

அட்மிரல் கொலம்பகே பல்வேறு வேக ஏவுகணை கப்பல்கள், துரித பீரங்கி போர்க்படகுகள், அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் எம்பிபியஸ் கப்பல்கள்ஆகியவற்ரில் கட்டளை அதிகாரியாக சேவையாற்றியுள்ளதுடன் மேற்பரப்பு போர்நடவடிக்கைசின்னத்தையும் பெற்றுள்ளார். இந்திய மற்றும் சீன கடற்படைகளில்விரிவான பயிற்சி பெற்ற சிறந்த ஒரு ஆயுத நிபுணரம் ஆவார்.

ரண சூரா பதக்கம் பெற்றுள்ளார். மேலும் விசிஷ்ட சேவா விபூசணம், உத்தமசேவா பதக்கம் கடற்படை 50 ம் ஆண்டு நிறைவு பதக்கம், இலங்கை ஆயுதப் சேவைகள்நீண்ட சேவை பதக்கம், ஜனாதிபதி பதவியேற்பு பதக்கம், 50 வது சுதந்திரஆண்டுவிழா நினைவு பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடமனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கில் செயற்பாடுகள்பதக்கம், பூர்ண பூமி பதக்கம், வடமராச்சி பதக்கம் மற்றும் ரிவிரெச நடவடிக்கைபதக்கம் ஆகியவற்றினை பெற்றுள்ளார்.

அட்மிரல் கொலம்பகே மிகவும் பாராட்டப்பட கடற்படை அதிகாரிகளில்ஒருவராவார். அடுத்தடுத்து வந்த பல கடற்படை தளபதிகளிடமிருந்து கடமைகள்மற்றும் பொறுப்புகள் பல துறைகளில் சாதனைகள், சிறந்த செயல்பாட்டுநடவடிக்கைகள், தலைமைதத்துவம், நிர்வாகம், கல்வி சாதனைகள், உயர்ந்தஅர்ப்பணிப்புடன் கூடிய நாட்டுநலனுக்கான சேவை ஆகியவற்றிற்காக பாராட்டுகடிதங்களை பெற்றுள்ளார். மேலும் 5 நட்சத்திர அந்தஸ்துடைய பாராட்டு பேட்ஜ்ம் பெற்றுள்ளார்.

சிறந்த ஒரு தேசிய மட்ட மெய்வல்லுனரான இவர் இலங்கை பாடசாலைகளுக்கான நிறம்மற்றும் கடற்படை நிறத்தையும் பெற்றுள்ளார். 1999 – 2006 கடற்படைமெய்வல்லுனர் கழகத்தின் தலைவராக இருந்துள்ளதுடன் இலங்கை தடகல கழகத்தில்தலைவராகவும் இருந்துள்ளார். இவர் பாதுகாப்புச் சேவைகள் மற்றும் இலங்கைகடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருக்கின்றார்.

அட்மிரல் கொலம்பகே கட்டுநாயக்கவை வசிப்பிடமாக கொண்டுள்ளதுடன் தகவல்தொழிநுட்ப ஆசிரியையான சிறிமா மணந்துள்ளார். அவர்களின் மகள் இண்தீவரி இலங்கைமத்திய வங்கியில் உதவி இயக்குனராக சேவையாற்றுகிறார். அட்மிரல் கொலம்பகேகண்டி பரி. சில்வெஸ்டர் கல்லூரியின் பழைய மாணவராவார். அக்கல்லூரியின் பழையமாணவர்களில் முதலாவது கடற்படை தளபதியும் இவராவார்.

அட்மிரல் ஜயந்த பெரேரா ஆர்டப்பி, விஎஸ்வி, யுஎஸ்பி, என்டிசி, பிஎஸ்சி, எம்எஸ்சி (டிஎஸ்), எம்எஸ்சி (டி&எஸ்எஸ்)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆர்டப்பி, விஎஸ்வி, யுஎஸ்பி, என்டிசி, பிஎஸ்சி அவர்களை ஜுலை 09, 2015 முதல் 4 நட்சத்திர அந்தஸ்துடைய அட்மிரலாக பதவி உயர்வளிக்கப்பட்டார்.

அட்மிரல் ஜயந்த பெரேரா அவர்கள் 63 வருடம் பழமையான வரலாற்றையுடைய கடற்படையின் 19 வது தளபதியாவார். அதற்கு முன்னர் அவர் கடற்படை பிரதானியாக செயல்பட்டார்.

அட்மிரல் ஜயந்த பெரேரா 1978 ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி கடற்படையில் இணைந்து திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியல் அடிப்படை பயிற்சி பெற்றார். இவர் இந்தியாவின் கொச்சி ஆயுத பாசறையில் பயிற்சி பெற்ற ஒரு கன்னரி நிபுணராவார். இந்தியாவில்கடற்படை கற்கைநெறியையும், பாகிஸ்தான், இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புகற்கை நெறியையும் நிறைவு செய்தார்.பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பை மெட்ராஸ்பல்கலைக்கழகத்திலும், பாகிஸ்தான் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்புபல்கலைக்கழகத்திலும் பின்பற்றினார். 2005ல் மே மாதத்தில் ஐக்கியஇராச்சியத்தில் சர்வதேச அனர்த்த முகாமைத்துவ கற்கைநெறி&செயலமர்வையும், 2012ல் பெப்ரவரியில் ஹவாய் பேர்ல் துறைமுகத்தில் உள்ளஅமெரிக்க கடற்படை போர் கல்லூரியில் ஒருங்கிணைந்த படை கடல்சார் உபகரண தளபதிகற்கைநெறியையும் நிறைவு செய்தார்.

அட்மிரல் ஜயந்த பெரேரா, இலங்கை கடற்படையின் முதன்மைகப்பலான சயுர (முதலாம் கமிஷன் கட்டளை அதிகாரி), அதிவேக தாக்கிதல் படகுகள் உட்படதுரையிரங்கும் படகு ஆகியவற்றிலும் கடற்படை ஸ்தாபங்களிலும் சேவையாற்றியுள்ளார். இவர் 2008ல் மேற்கு கட்டளை தளபதியாக, 2007ல் தெற்கு கட்டளை தளபதியாகவும் 2006ல் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கிழக்கு கட்டளைபிரதி தளபதியாகவும் சேவையாற்றியுளார். மேலும் இவர் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், பணிப்பாளர் நாயகம் சேவைகள், கப்பல் குழும கட்டளை அதிகாரி, பணிப்பாளர் கடற்படை நடவடிக்கைகள் மற்றும் விசேட படையணிகள், பணிப்பாளர் கடற்படை ஆயுதங்கள், பிரதி பணிப்பாளர் கடற்படை புலனாய்வு, பிரதி பணிப்பாளர் கடற்படை பயிற்சி, கடற்படை பேச்சாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி காரியாலயத்தின் பிரதம உத்தியோகத்தராகவும் சேவையாற்றியுளார்.

அட்மிரல் ஜயந்த பெரேரா, ரண விக்கிரம பதக்கம் பெற்றுள்ளார். அவரின் முன்மாதிரியான மற்றும் சிறந்த சேவைக்காக பலதவைகள் கடற்படை தளபதிகளிடமிருந்து விருது பெற்றுள்ளார்.

அட்மிரல் ஜயந்த பெரேரா அவர்களின் துணைவி திருமதி ஷாலிகா பெரேரா தன்கணவருக்கு உற்ற துணையாகவும் அவரின் கடற்படை சேவையின் காலத்தின் போது உறுதுணையாகவும் இருந்துள்ளார். இவர் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியாக 2012 அக்டோபரிலிருந்து 2014 ஜுன் வரை சேவையாற்றியுள்ளார். மேலும்இவர்களுக்கு ரணித்ரி பெரேரா மற்றும் ரனாலி பெரேரா என்னும் இரட்டை மகள்கள்இருக்கின்றனர். அவ்விருவரும் இந்திய பெங்களூர் பல்கலைகழகத்தில் வணிகமேலாண்மை பட்டம் பெற்றுள்ளதுடன்ஜயவர்தனபுர பல்கலைகழகத்துடன் இனைந்தமுகாமைத்துவப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தில் மற்றும்அவுஸ்திரேலியாவின்கன்பரா பல்கலைகழகத்தில் சர்வதேச வர்த்தக மற்றும் வழங்கள் தொடர்பானமேட்படிப்பையும் தொடந்துள்ளனர்.

அட்மிரல் ஜயந்த பெரேரா கொழும்பு தர்ஸ்டன் வித்தியாலயத்தின் மாணவராகஅப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். தலைமை மாணவராக, ரக்கர் அணி தலைவராக, மாணவ சிப்பாய்கள் படையணியில் சார்ஜண்ட்டாக மற்றும் சார்ஜன்ட்மேஜராக அவர் தன் பாடசாலை வாழ்கையின்போது தன்பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்..

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன டப்வீ,ஆர்டப்பீ*,ஆர்எஸ்பீ, வீஎஸ்வீ, யூஎஸ்பி, என்டீஸி,பீஎஸ்என்
பாதுகாப்பு படைகளின் தளபதி

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன, அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது கல்வியை கற்றார். ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ம் திகதி 09 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான அதிகாரிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டார். திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் கல்லூரியில் தனது அடிப்படைப் பயிற்சியை பெற்ற அவர் பிரித்தானிய ரோயல் கடற்படை அகடமியில் மேலதிக பயிற்சியினைப் பெற்றுக் கொண்டார்.1982 ஆம் ஆண்டு பிரித்தானிய ரோயல் கடற்படையில் இணைந்து கொண்ட கடட் அதிகாரிகளில் சர்வதேச சிறந்த கடற்படை மிட்சிப்மென் கெடட் அதிகாரியாக அவர் தெரிவு செய்யப்பட்டு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவர் நீரில் செய்யப்படுகின்ற யுத்தம் பற்றி விஷேட பயிற்சி பெற்றதுடன் சூழியோடி பரசூட் மற்றும் பல் வேறுபட்ட துறைகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அவரின் கடைசி கடல்கட்டளையை இலங்கை கடற்படைக்குறிய “ சயுர” எனும் கப்பல் ஆகும். அவரின் 35 வருட கடற்படை சேவை காலத்தில் கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில்கட்டளை அதிகாரி, கொடி அதிகாரி கடற்படை சமுத்திர கட்டளையில் தளபதி, நவதில்லி நகரத்தில் இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தாணிகர் அலுவலகத்தில் முதலாவது பாதுகாப்பு ஆலோசர், பணிப்பாளர் கடற்படை நடவடிக்கை, விஷேட படைபிரிவின் தளபதி, கிழக்கு, வடக்கு, தேற்கு, மேற்கு பிராந்தியங்களில் கடற்படைத்தளபதி, இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்படை பிரதானி ஆகிய முக்கிய பதவிகளையும் வகித்தார். பின்னர் 2015 ஜுலை மாதம் 11 ஆம் திகதி கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

இலங்கை கடற்படையின் விஷேட பிரிவான சிறப்பு படகு படைப் பிரிவை உருவாக்கியமை அட்மிரல் ரவீந்திர விஜேகுணரதன அவர்களையெ சேரும். யுத்த காலத்தின்போது குறித்த இப்படைப் பிரிவின் பங்களிப்பு முக்கியமாக காணப்பட்டது. இவரின் சேவைக்காலத்தில் குறித்த இப்படைப்பிவிற்கு இரு தடவை கட்டளையிட்டு எதிரிகளை அழிக்கும் வகையில் செயல்பட்டார். அத்துடன் 1993 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ‘பூனேரியன் யுத்த நடவடிக்கைகளின் போதும் தனது வழிகாட்டலின் கீழ் முன்னெடத்தமை குறிப்பிடத்தக்கது.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் காட்டிய திறமைகளுக்கு“ வீரோதார விபூஷன” ,” ரணவிக்கிரம” , “ ரணசூர” பதக்கங்கள் ஆகியன வழங்கப்பட்டதுடன் தனது சேவை காலத்தில் காட்டிய இலட்சியசேவைக்காக “ விஷிஷ்ட சேவா பதக்கம மற்றும் உத்தம சேவா பதக்கம” ஆகியனவும் வழங்கப்பட்டன.

அவர் 1996ம் ஆண்டில் பகிஸ்தான் கரச்சி பல்கழைக்கலத்தில் “ விஞ்ஞான பட்டதாரி பட்டமும் 2010 ஆம் ஆண்டில் இந்தியாவில் மதுராசி பல்கழைக்கலத்தில் “ தத்துவத்திற்கான முது மானிபட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.

மேலும் அவர் அமெரிகாவில் பாதுகாப்பு பல்ழகைகலத்தில் பழைய மாணவர் ஆவார். அது மாத்திரம் அன்றி விளையாட்டுத் துறைகளிலும் பல்வேறு திறமைகளை காட்டியுள்ளார். ரக்பி, கால்பந்து, பாய்மர, மற்றும் படகுப்போட்டி ஆகியவற்றில் தனது திறமைகளை காட்டியதுடன் மூலம் கடற்படை வர்ணங்களையும் வெற்றி பெற்றுக் கொண்டார். கடற்படை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த துப்பாக்கி சுடுபவராகவும் காணப்பட்டார். அத்துடன் தேசிய துப்பாக்கி சுடும் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். மேலும் கடற்படை கொல்ஃப் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற லங்கா அழகு ராணி போட்டியில் கலந்து கொண்டு அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட திருமதி யமுனா அவர்களை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 24 வயதுடைய சத்திரியஜித் எனும் ஒரு மகனும் இருக்கிரார்.

அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா டப்டப்வி, ஆர்டப்பி, ஆர்எஸ்பி**, யூஎஸ்பி, சீடிஎப், என்டியூ, பிஎஸ்சி, எம்எஸ்சி

அட்மிரல் ட்ரவிஸ் ஜெரமி லியந்துரு சின்னையா அவர்கள் கண்டி திரித்துவக் கல்லூரியின் மற்றும் திருகோணமலை சென் ஜோன் கல்லூரியின் பழைய மாணவராவார். 1982 ஆண்டில் நவம்பர் மாதம் 15ம் திகதி கடற்படையில் கெடட் அதிகாரியாக இணைந்து திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 1984ம் ஆண்டு பயிற்சியை முடித்து கெடட் அதிகாரியாக வெலியேரிய பின் ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய ரோயல் கடற்படை கல்லூரியில் பயிற்சியை முடித்து 1986ல் பட்டம் பெற்றார். மேலும் எச்எம்எஸ் டிரய்யாட், எச்எம்எஸ் மேர்குறி, எச்எம்எஸ் கொலின்வுட் மற்றும் ஐக்கிய இராச்சிய போர்ட்ஸ் மௌதிலுள்ள எச்எம்எஸ் வேர்நன் ஆகியவற்றிலும் விசேட கடல்சார் கற்கைகளை மேற்கொண்டார். அக்காலகட்டத்தில் பிரித்தானியாய யுத்தக் கப்பல்களிலும் அவர் சேவையாற்றியுள்ளார்.

பீட்டர்ஸ்பீல்ட், போர்ட்ஸ் மௌதிலுள்ள எச்எம்எஸ் மெர்குரி மற்றும் இந்தியாவிலுள்ள கோசின், ஐஎன்எஸ் வெண்டுருதியில் கடற்படை தொடர்பு மற்றும் மின்னணு போர் தொடர்பான சிறப்பு பயிற்சியையும் முடித்துள்ளார். இந்தியா வெலிங்டன், பாதுகாப்புச் சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் அறிவியல் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் ராஜதந்திரம் தொடர்பில் ஒரு சிறப்பு பாடநெறியை பின்பற்றியுள்ளதுடன் சர்வதேச ஆய்வுகள் தொடர்பில் ஒரு டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவர் அமேரிக்கா, வாஷிங்டன் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பயங்கரவாத தடுப்பு அங்கத்தவர் மேலும் அப்பல் கலைகழகத்தினால் 2005 ஆண்டுக்கான ‘சிறப்புமிகு பட்டதாரி’ விருதையும் பெற்றுள்ளார். இவர் ஓஹையோ, பாதுகாப்பு உதவி முகாமைத்துவ பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாடநெறியையும் கற்றுள்ளார். இவர் புலமை பெற்ற சிறந்த ஒரு அதிகாரியாக கருதப்படுகிறார்.

இவர் இலங்கை கடற்படையின் அனைத்து படையனிகளிலும் சேவையாற்றியுள்ள ஒரு முன்னணி நிறைவேற்று பிரிவு அதிகாரியும் ஆவார். கப்பல் படையணியின் கட்டளை அதிகாரி, கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் கட்டளை தளபதி, கிழக்கு பிராந்திய பிரதி தளபதி, தொண்டர் படை கட்டளை தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளதோடு, 2007ல் கடற்படையின் பிரதான கப்பலான சயுர கப்பலின் கட்டளை அதிகாரி, 4ஆம் அதிவேக தாக்குதல் படகு படையின் படையணி அதிகாரி (Squadron Commander) பின்னர் அதன் கட்டளை அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார். மேலும் பல கடற்படை கப்பல்களில் மற்றும் தலைமையக பதவிகளிலும் சேவையாற்றியுள்ளார். கடற்படை தளபதியின் அந்தரங்க உதவியாளர், பணிப்பாளர் கடற்படை திட்டங்கள் மற்றும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி, பிரதிப் பணிப்பாளர் கடற்படை நிர்வாகம், பணிபாளர் அதிகாரி திட்டங்கள், மூத்த பணிபாளர் ஆய்வு மற்றும் அபிவிருத்தி மற்றும் கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கட்டளை பிராந்திய தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இவர் ஒரு மதிக்கப்படும் பயிற்றுவிப்பாளரும் சிறந்த பேச்சாளரும் ஆவார். கடற்படையை பிரதிநிதுவப்படுத்தி பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகலுக்கு சமூகமளித்துள்ளதோடு பல கட்டுரைகளையும் பிரசுரித்துள்ளார். படலந்தை பாதுகாப்புச் சேவைகள் பணியாளர் கல்லூரியின் கடற்படை பிரிவை நிறுவுவதில் முன்னோடியாக திகழ்ந்ததோடு அதற்கான பாடத்திட்டங்களை வடிவமைப்பதிலும் பங்குகொண்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கரையோர போர் தொடர்பில் இவர் ஒரு நிபுணராக கணிக்கப்படுகிறார். மாலைத்தீவு பாதுகாப்பு படையின் கடல் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் எதிர்ப்பு / பயங்கரவாத எதிர்ப்பு கோட்பாட்டை வகுப்பதற்கு உதவியாக செயல்படவும் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.

இவர் கடற்படையின் ஆயுதங்களை ஐக்கிய இராச்சிய ரோயல் போர்த்தளவாடங்கலுக்கமைய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தல்கள் செய்வதில் முக்கிய பங்காற்றினார். மேலும் இஸ்ரேலிய விமான நிறுவனத்துடன் இணைந்து சுப்பர் டோரா வகுப்பு அதிவேக படகுகளை வடிவமைப்பதிலும் முக்கிய பங்காற்றினார். கடற்படையின் சுதேச உத்பத்தியான 30 மிமீ உறுதிப்படுத்தப்பட்ட துப்பாக்கியின் வடிவமைப்பு குழுவின் தலைவராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.

இவர் ஒரு சிறந்த துப்பாக்கி வீரராவார். 2001/2002 காலத்தில் கடற்படை அணியை தலைமை தாங்கிய சிறந்த ஒரு பிஸ்டல் வீரரும் ஆவார். மேலும் கடற்படை கூடைப்பந்து, கால்பந்து, ரக்கர், ஸ்கோஷ் மற்றும் பூப்பந்து அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். வீர தீர செயல்களுக்கான பதக்கங்களை பலமுறை பெற்ற சிறந்த யுத்த அனுபவமுள்ள ஒரு அதிகாரியாவார். புலிகளின் பத்து ஆயுத கப்பல்களையும் அழிக்க அமைக்கப்பட்ட கடற்படை விசேட படையினை இவரே தலைமை தாங்கிச் சென்றார். ‘சாகர பலய’ என்று பெயரூட்டப்பட்ட இச்செயல்பாடு புலிகளுக்கெதிரான யுத்தத்தில் அவர்களின் அழிவை துவக்கிவைத்த திருப்பு முனையாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தலைமையின் கீழ் புலிகளுக்கெதிராக 37 வெற்றிகர தாக்குதல்களும் அதிவேக படகு அணியின் தளபதியாக 70 வெற்றிகர தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புலிகளின் பிரதி தலைவர் மற்றும் 9 பிராந்திய தலைவர்கள் உட்பட 19 கரும்புலி பயங்கரவாதிகளை ஏற்றிச்சென்ற ‘கடல்புரா’ எனும் புலிகளின் கப்பலை கைப்பற்றிய அதிகாரியும் இவராவார்.

யுத்தத்தின் போது நேரடி கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மிக மூத்த கடற்படை அதிகாரியும் இவரே. இவர் ரியர் அட்மிரல் நிலைக்கு யுத்த கல பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் வீர செயல்களுக்கான அதி உயர் போர் பதக்கமும் (உயிர் வாழும் அதிகாரிக்கான) ‘டப்டப்வி’ வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு கிடைத்த அதி உயர் வீரத்துக்கான விருது, வீர விக்கிரம விபூஷனய (டப்டப்வி) விருது ஆகும். இது எதிரியின் முன்னிலையில் ஒருவரால் மேட்கொள்ளப்பட்ட யுத்த வீர செயல்களுக்காக வழங்கப்படும் அதி உயர் விருதாகும். மேலும் ரண விக்கிரம பதக்கம் (ஆர்டப்பி) எதிரியின் முன்னால் மேற்கோள்ளப்பட்ட விசேட வீர செயல்களுக்கு வழங்கப்படும் விருது, மூன்று முறை ரண சூர பதக்கம் (ஆர்எஸ்பி) ஆகிய பதக்கங்களை பெற்றுள்ளார்.

மேலும் மற்றைய பதக்கங்களாவன: உத்தம சேவா பதக்கம் (யுஎஸ்பி), வடமராச்சி நடவடிக்கை பதக்கம், ரிவிரெச நடவடிக்கை பதக்கம் மற்றும் கிலஸ்ப், வடக்கு கிழக்கு நடவடிக்கை பதக்கம் இரண்டு கிலஸ்ப் உட்பட, இலங்கை நீண்ட சேவை பதக்கம் மற்றும் கிலஸ்ப், பூர்ண பூமி பதக்கம், இலங்கை 50ம் சுதந்திர தின ஞாபகார்த்த பதக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம் கிலஸ்ப் உட்பட. இவர் பல பாராட்டுகளை பெற்றுள்ளதுடன் நாட்டிற்கு கவனிக்கத்தக்க வீரம், ஒப்பட்ட்ற சாகசம் மற்றும் சிறந்த சேவைக்காக இலங்கை ஜனாதிபதியின் தனிப்பட்ட பாராட்டையும் பெற்றுள்ளார்.

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக நியமிக்கபட முன் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பணியாற்றினார். 2017 ஒக்டோபர் 25 ம் திகதி அட்மிரல் பதவிக்கி தரமுயற்றபட்டது. திருனி என்பவரை திருமனம் செய்த இவர் தாருன் (மகன்) மற்றும் எனக்சி (மகள்) ஆகியோரின் தந்தெயுமாவார்.