சுய சரிதை

ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க WWV,RWP,VSV,USP,ndc,psc, AOWC அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் தளபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால்  கடற்படை தளபதியாக  நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு இணங்க செய்யப்பட்டது. மேலும் இந்நியமனம் அக்டோபர் 26,  2017 அன்று முதல் செல்லுபடியாகும்.    

இந்நியமனத்துக்கமைய, ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள், வைஸ் அட்மிரல் தரத்திற்கும் உயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் 22 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.   

இதற்கமைய, வைஸ் அட்மிரல் சிரிமேவன்  ரணசிங்க அவர்கள்  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களிடமிருந்து தனது நியமன கடிதத்தைப் பெற்துக்கொண்டார்.

வைஸ் அட்மிரல் சிரிமேவன் சரத்சண்திற  ரணசிங்க, பரி. ஜோசப்  வித்தியாலயம் மற்றும் அனுராதபுரம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றுள்ளார்.  1983, நவம்பர் 15ம் திகதி இலங்கை கடற்படையின் 11ம் உள்வாங்களின் கடெட் அதிகாரியாக இணைந்து  திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் அடிப்படை பயிற்சியை பெற்றார். வைஸ் அட்மிரல்  ரணசிங்க,  பயிற்சியின் போது 11ம் உள்வாங்களின் சிறந்த கடெட் அதிகாரிக்கான விருதை பெற்றார்.  முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா, மற்றும் தற்போதைய கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ ஆகியோரும் தத்தமது அடிப்படை பயிற்சியின் போது இவ்விருதை பெற்றவர்களாவார்கள். இவர் தனது இடைநிலை அதிகாரிக்கான பயிற்சியை ஐக்கிய இராச்சியத்தின் டார்த்மௌத், பிரித்தானிய ராயல் கடற்படை கல்லூரியில் பெற்றுக்கொண்டார்.        

வைஸ் அட்மிரல் ரணசிங்ஹ அவர்கள், வீர விக்கிரம விபூசணம் மற்றும் ரண விக்கிரம பதக்கம் ஆகிய வீர தீர செயல்களுக்கான பதக்கங்களை பெற்றுள்ளார். 1996ல் லெப்டினன்ட் கமாண்டர்  தரத்தில் இருந்த இவர் வட பிராந்தியத்தின் சாலை கடல் பிரதேசத்தில் வைத்து தந்திரோபாயத்துடன்  மற்றும் வீரத்துடன் செயல்பட்டு எல்.ரீ.ரீ.ஈ  படகொன்றை மோதி, அழித்து, காங்கேசந்துரையிலிருந்து திருகோணமலைக்கு நகரோமா எனும் கப்பலில் சென்றுக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களின்  உயிர்களைக் காப்பாற்ற உதவினார். இதுவே கடற்படை  வரலாற்றில், எல்.ரீ.ரீ.ஈ படகொன்று மோதி அழிக்கப்பட முதலாவது சம்பவமகும். 

சிறந்த சேவைக்ககன விருதுகள் பல பெற்றுள்ள இவர் சிறந்த செயல்திறன் மற்றும் கடற்படை சேவைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக அடுத்தடுத்த வந்த பல கடற்படை தளபதிகளிடமிருந்து பாராட்டையும் பெற்றுள்ளார். 

மேலும், கடற்படை கப்பல் ‘சமுதுர’ (முன்னாள் ஐக்கிய அமெரிக்க கப்பல் ‘கரேஜஸ்’) ன் ஆரம்ப கட்டளை அதிகாரியாக, வைஸ் அட்மிரல் ரணசிங்ஹ அவர்கள் இலங்கை கடற்படை வரலாற்றின் மிக நீண்ட தூர கடல் பயணமான  ஐக்கிய அமெரிக்க நியூ போர்ட்  முதல் கொழும்பு வரையிலான பயணத்தை தலைமை தாங்கி வந்தார். 

இவர் 2002 – 2004 வரை கடற்படையின் சிறப்பு மிக்க அதிவேக தாக்குதல் பிரிவை வழிநடத்தியுள்ளதுடன் தெற்கு பிராந்திய கட்டளை தளபதியாக (2008), பிராந்திய கட்டளை தளபதி- தெற்கு பிராந்தியம் (2012) மற்றும் மேற்கு பிராந்தியம் (2013 – 2014) ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். மேலும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கமண்டான்ட் , பணிப்பாளர் கடற்படை நடவடிக்கைகள் , பணிப்பாளர் கடற்படை ஆயுதங்கள்,  பணிப்பாளர் சிறப்பு படைகள், பணிப்பாளர் கடற்படை திட்டங்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் இலங்கை கரையோர பாதுகாப்பு படை  ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

கடற்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு  முன்னர் இவர் கடற்படை அதிகாரிகளின் பிரதானியாக 2 ½ வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றியுள்ளார்.

வைஸ் அட்மிரல் ரணசிக்ஹ, இந்தியாவின் கொச்சி, வேண்டுருதி கடற்படை தளத்தில் பயிற்சி பெற்ற ஒரு நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர்க்கலை நிபுணராவார். இவர் 1999ல், இந்தியா வெலிங்டன் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் கடற்படை அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்தார். மேலும் 2007ல் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்  தேசிய பாதுகாப்பு பல்கலைகழகத்தில் கூட்டு நாட்டு அதிகாரிகள் யுத்த கற்கையை நெறியையும்,  2012 ல் இந்தியாவின் புது டெல்லி தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தேசிய பாதுகாப்பு கற்கையை நெறியையும்  நிறைவு செய்தார்.     

மேலும் இவர் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைகழகத்தில்,  பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பின் முதுமாணி பட்டம் (முதல் வகுப்பு),  பாகிஸ்தான் இஸ்லாமாபாத்  தேசிய பாதுகாப்பு பல்கலைகழகத்தில், பாதுகாப்பு மேலாண்மை முதுமாணி பட்டம் (இரண்டாம் மேல்), மற்றும்  பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் (முதல் வகுப்பு) மாணிப் பட்டம் ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.   

வைஸ் அட்மிரல் ரணசிக்ஹ, பிரித்தானிய ராயல் கடற்படை கல்லூரியின் பாட்மிண்டன் விளையாட்டில் நிறம் பெற்ற ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார். 1997ல் கடற்படை பிராந்தியங்களுக்கிடையிலான போட்டிகளில் பாட்மிண்டன் விளையாட்டுக்கான டிரிபிள் கிரவுன் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  வைஸ் அட்மிரல் ரணசிங்ஹ மற்றும் மனைவி சந்தியா இருவக்கும் சுபுணி எனும் ஒரு மகளும்  உள்ளார்.