வைஸ் அட்மிரல் திரவிஸ் ஜெரமி லியந்துரு சின்னய்யா, கண்டியை பிறப்பிடமாக கொண்டிருக்கும் இவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவராவார். 1982 ஆண்டில் நவம்பர் மாதம் 15ம் திகதி கடற்படையில் கெடட் அதிகாரியாக இணைந்து திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 1984ம் ஆண்டு  பயிற்சியை முடித்த பின் ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய ராயல் கடற்படை கல்லூரியில் பயிற்சியை முடித்து 1986ல் பட்டம் பெற்றார். மேலும் எச்எம்எஸ் டிரய்யாட், எச்எம்எஸ் மேர்குறி, எச்எம்எஸ் கொலின்வுட் மற்றும் ஐக்கிய இராச்சிய  போர்ட்ஸ்மௌதிலுள்ள எச்எம்எஸ் வேர்நன் ஆகியவற்றிலும் விசேட கடல்சார் கற்கைகளை மேற்கொண்டார். அக்காலகட்டத்தில் பிரித்தானியாய யுத்தக் கப்பல்களிலும் அவர் சேவையாற்றியுள்ளார். 

பீட்டர்ஸ்பீல்ட், போர்ட்ஸ்மௌதிலுள்ள எச்எம்எஸ் மெர்குரி மற்றும் இந்தியாவிலுள்ள கோசின்,   ஐஎன்எஸ் வெண்டுருதியில்   கடற்படை தொடர்பு மற்றும் மின்னணு போர் தொடர்பான சிறப்பு பயிற்சியையும் முடித்துள்ளார். இந்தியா வெலிங்டன், பாதுகாப்புச் சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் அறிவியல் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் ராஜதந்திரம் தொடர்பில் ஒரு சிறப்பு பாடநெறியை பின்பற்றியுள்ளதுடன் சர்வதேச ஆய்வுகள் தொடர்பில் ஒரு டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவர் அமேரிக்கா, வாஷிங்டன் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பயங்கரவாத தடுப்பு அங்கத்தவர் மேலும் அப்பல் கலைகழகத்தினால்  2005 ஆண்டுக்கான ‘சிறப்புமிகு பட்டதாரி’ விருதையும் பெற்றுள்ளார். இவர் ஓஹையோ, பாதுகாப்பு உதவி முகாமைத்துவ  பாதுகாப்பு நிறுவனத்தில்  பாதுகாப்பு ஒத்துழைப்பு பாடநெறியையும் பின்பற்றியுள்ளார். இவர் ஆழ்ந்த புலமை பெற்ற சிறந்த ஒரு அதிகாரியாக  கருதப்படுகிறார்.

இவர் இலங்கை கடற்படையின் அனைத்து படையனிகளிலும் சேவையாற்றியுள்ள ஒரு முன்னணி நிறைவேற்று பிரிவு அதிகாரியும் ஆவார். கப்பல் படையணியின் கட்டளை அதிகாரி, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் கட்டளை தளபதி, கிழக்கு பிராந்திய பிரதி தளபதி, தொண்டர் படை கட்டளை தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளதோடு,  2007ல் கடற்படையின் பிரதான கப்பலான சயுர கப்பலின் கட்டளை அதிகாரி, 4ஆம் விரைவு தாக்குதல் படகு படையின் படையணி அதிகாரி (Squadron Commander) பின்னர் அதன் கட்டளை அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார். மேலும் பல கடற்படை கப்பல்களில் மற்றும் தலைமையக பதவிகளிலும் சேவையாற்றியுள்ளார். கடற்படை தளபதியின் அந்தரங்க உதவியாளர், பணிப்பாளர் கடற்படை திட்டங்கள் மற்றும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி, பிரதிப் பணிப்பாளர் கடற்படை நிர்வாகம், பணிபாளர் அதிகாரி திட்டங்கள், மூத்த பணிபாளர் ஆய்வு மற்றும் அபிவிருத்தி மற்றும் கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கட்டளை பிராந்திய தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். 

இவர் ஒரு மதிக்கப்படும் பயிற்றுவிப்பாளரும் சிறந்த பேச்சாளரும் ஆவார். கடற்படையை பிரதிநிதுவப்படுத்தி பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகலுக்கு சமூகமளித்துள்ளதோடு பல கட்டுரைகளையும் பிரசுரித்துள்ளார். படலந்தை பாதுகாப்புச் சேவைகள் பணியாளர் கல்லூரியின் கடற்படை பிரிவை நிறுவுவதில் முன்னோடியாக திகழ்ந்ததோடு அதற்கான பாடத்திட்டங்களை வடிவமைப்பதிலும் பங்குகொண்டுள்ளார். 

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கரையோர போர் தொடர்பில் இவர் ஒரு நிபுணராக கணிக்கப்படுகிறார். மாலைத்தீவு பாதுகாப்பு படையின் கடல் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் எதிர்ப்பு / பயங்கரவாத எதிர்ப்பு கோட்பாட்டை வகுப்பதற்கு உதவியாக செயல்படவும் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.   

இவர் கடற்படையின் ஆயுதங்களை ஐக்கிய இராச்சிய ராயல் போர்த்தளவாடங்கலுக்கமைய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தல்கள் செய்வதில் முக்கிய பங்காற்றினார். மேலும் இஸ்ரேலிய விமான நிறுவனத்துடன் இணைந்து சுப்பர் டோரா வகுப்பு அதிவேக படகுகளை வடிவமைப்பதிலும் முக்கிய பங்காற்றினார். கடற்படையின் சுதேச உத்பத்தியான 30 மிமீ உறுதிப்படுத்தப்பட்ட துப்பாக்கியின் வடிவமைப்பு குழுவின் தலைவராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.

இவர் ஒரு சிறந்த துப்பாக்கி வீரராவார். 2001/2002 காலத்தில் கடற்படை அணியை தலைமை தாங்கிய சிறந்த ஒரு பிஸ்டல் வீரரும் ஆவார். மேலும் கடற்படை கூடைப்பந்து, கால்பந்து, ரக்கர், ஸ்கோஷ் மற்றும் பூப்பந்து அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். வீர தீர செயல்களுக்கான பதக்கங்களை பலமுறை பெற்ற சிறந்த யுத்த அனுபவமுள்ள ஒரு அதிகாரியாவார். புலிகளின் பத்து ஆயுத கப்பல்களையும் அழிக்க  அமைக்கப்பட்ட  கடற்படை விசேட படையினை இவரே தலைமை தாங்கிச் சென்றார். ‘சாகர பலய’ என்று பெயரூட்டப்பட்ட இச்செயல்பாடு புலிகளுக்கெதிரான யுத்தத்தில் அவர்களின் அழிவை துவக்கிவைத்த திருப்புமுனையாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தலைமையின் கீழ் புலிகளுக்கெதிராக 37 வெற்றிகர தாக்குதல்களும் அதிவேக படகு அணியின் தளபதியாக 70 வெற்றிகர தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புலிகளின் பிரதி தலைவர் மற்றும் 9 பிராந்திய தலைவர்கள் உட்பட 19 கரும்புலி பயங்கரவாதிகளை ஏற்றிச்சென்ற ‘கடல்புரா’ எனும் புலிகளின் கப்பலை கைப்பற்றிய அதிகாரியும் இவராவார்.   

யுத்தத்தின் போது நேரடி கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மிக மூத்த கடற்படை அதிகாரியும் இவரே. இவர் ரியர் அட்மிரல் நிலைக்கு யுத்த கல பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் வீர செயல்களுக்கான அதி உயர் போர் பதக்கமும் (உயிர் வாழும் அதிகாரிக்கான) ‘டப்டப்வி’ வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு கிடைத்த அதி உயர் வீரத்துக்கான விருது, வீர விக்கிரம விபூஷனய (டப்டப்வி) விருது ஆகும். இது எதிரியின் முன்னிலையில்  ஒருவரால் மேட்கொள்ளப்பட்ட யுத்த வீர செயல்களுக்காக வழங்கப்படும் அதி உயர் விருதாகும். மேலும் ரண விக்கிரம பதக்கம் (ஆர்டப்பி) எதிரியின் முன்னால் மேற்கோள்ளப்பட்ட விசேட வீர செயல்களுக்கு வழங்கப்படும் விருது, மூன்று முறை ரண சூர பதக்கம் (ஆர்எஸ்பி) ஆகிய பதக்கங்களை பெற்றுள்ளார்.  

மேலும் மற்றைய பதக்கங்களாவன: உத்தம சேவா பதக்கம் (யுஎஸ்பி), வடமராச்சி நடவடிக்கை பதக்கம், ரிவிரெச நடவடிக்கை பதக்கம் மற்றும் கிலஸ்ப், வடக்கு கிழக்கு நடவடிக்கை பதக்கம் இரண்டு கிலஸ்ப் உட்பட, இலங்கை நீண்ட சேவை பதக்கம் மற்றும் கிலஸ்ப், பூர்ண பூமி பதக்கம், இலங்கை 50ம் சுதந்திர தின ஞாபகார்த்த பதக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம் கிலஸ்ப் உட்பட. இவர் பல பாராட்டுகளை பெற்றுள்ளதுடன் நாட்டிற்கு கவனிக்கத்தக்க  வீரம், ஒப்பட்ட்ற சாகசம் மற்றும் சிறந்த சேவைக்காக இலங்கை ஜனாதிபதியின் தனிப்பட்ட பாராட்டையும் பெற்றுள்ளார்.

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக நியமிக்கபட முன் வைஸ் அட்மிரல்  ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பணியாற்றினார். கண்டியை பிறப்பிடமாக கொண்ட இவரின் மனைவி திருமதி திருனி சின்னய்யா ஆவார், மகன் தாருன் (24) மற்றும் மகள் எனக்சி (21) ஆவார்கள்.