நிறைவேற்றுப்  பிரிவு

நிறைவேற்றுப் பிரிவு அதிகாரிகளே கட்டளை அதிகாரங்களைபெறுவர். கடல் செல்லும் அதிகாரிகள் மட்டுமே கப்பல்களின் கட்டளை அதிகாரத்தைபெற முடியும். அவர்கள் பின்வரும் எந்த ஒரு பாடநெறியிளும் விசேடத்துவம்பெறலாம்.

*

கடல் வழிசெலுத்தல்

*

துப்பாக்கியியல் (கன்னரி)

*

நீர் மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர்

*

தகவல் தொடர்பு

*

நீரளவியல்

*

சுழியோடல்

பொறியியல் பிரிவு

பலவகையான மற்றும் அதிகரித்துவரும் நவீன ரக கப்பல்கள்மற்றும் படகுகளின் பராமரிப்பு விடயங்களை கையாள இலங்கை கடற்படையில்இயந்திரவியல் / மரைன் பொறியாளர்கள் குழுவொண்டுள்ளது. இவர்களுக்கு நாட்டில்பல பிரதேசங்களில் உள்ள கப்பல்கள், படகுகள் மற்றும் கடற்படை கப்பல் கட்டுதளத்தில் (டொக்யாட்) சேவையாற்றும் சந்தர்ப்பம் உள்ளது. மேலும் கட்டடப்பொறியலாளர்களும் வடிவமைப்பு, கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு பராமரிப்புதுறைகளில் முக்கியமான பங்காற்றுகின்றனர்.

இப்பொறியியலாளர்களுக்கு தமது தொழில் மற்றும்தொழில்முறை அபிவிருத்திக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகள்மூலம் அதிக வாய்ப்புகள் உள்ளதுடன் தமது கல்வி நடவடிக்கைகளை பட்டப்பின்படிப்பு முதுநிலை நிலை வரை மேற்கொண்டு உலகின் நவீன தொழில்நுட்பமுன்னேற்றங்களுக்கு இணையாக செல்லும் சந்தர்ப்பமும் உண்டு.


வைத்திய பிரிவு

செயல்திறன் மிக்க கடற்படை ஒன்றிற்கு கடற்படை வீரர்களின்உடல் மற்றும் மன ஆரோக்கியம் இன்றியமையாததாகும். தேர்ச்சி பெற்றுள்ளநிபுணர்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கடற்படை வைத்தியசாலைகளில்மற்றும் மருத்துவ காரியாலயங்களிலேயே பெருவாரியான கடற்படை நோயாளர்களுக்குசிகிச்சை அளிக்கப்படுகின்றது. இங்கு மருத்துவத் துறை ஊழியர்களுக்குஅவர்களின் தொழில் துறையில் நிபுணத்துவம் பெற பல வாய்புகள் உண்டு. கடற்படைவைத்தியர்கள் பலர் தம் துறைகளில் தேர்ச்சி பெற்று மருத்துவநிபுணர்கலாகியுள்ளனர். அவ்வாறே அதிகமான வைத்திய பிரிவு பணியாளர்கள் பலதுறைகளில் இலங்கையிலும் வெளிநாட்டிலும் சிறப்பு பாரமெடிக்ஸ் பயிற்சிபெற்றுள்ளனர்.

வழங்கள் பிரிவு

சிறந்த வழங்கள் ஆதரவின்றி எந்த ஒரு யுத்தமும் திறம்படகொண்டு நடத்த முடியாது. யுத்த காலங்களில் வழங்கள் பிரிவினாலே உள்ள வளங்களைபயன்படுத்தி யுத்தத்தை சிறப்பாக நடத்த தேவையான ‘அமைதியான சேவை’ செய்யப்படுகிறது. இத் துறையில் கிடைக்கு அனுபவம் ஒரு சிறந்த நிர்வாகியாக வரவாய்ப்பளிக்கிறது.

மின்னியல் பிரிவு

ஒரு யுத்தக் கப்பலானது ஒரு சிறிய மிதக்கும் நகரைப்போன்று தன்னகத்தே மின்சார உற்பத்தி மற்றும் வழங்கள் முறைமையை கொண்டுள்ளது.கப்பலின் முக்கிய பாகங்களில் தொடர்பு சாதன கருவிகலும் அடங்கும்.இக்கருவிகளில் அதிகமானவை கணனி சார் அல்லது கணிணி மற்றும் நவீன மின்னியல்தொழினுட்பத்தைக் கொண்டு இயங்குபவையாகும். செலுத்தல் மற்றும்யுத்தக்கருவிகளும் நவீன தொழிநுட்ப கண்டுபிடிப்புகளுக்கமையஅமைக்கப்பட்டிருக்கும். கப்பலின் சிறந்த செயட்பாட்டிட்கு இவற்றின்ஒன்றினைந்த தொழிற்பாடு அவசியம். இப்பொறுப்பு மின்னியல் பிரிவு அதிகாரிகளையேசாரும். கடற்படை மின்னியல் அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் முதுகலைகற்றலுக்கான வாய்ப்புகளையும் வழங்குகின்றது.

பேன்ட் வாத்திய பிரிவு

கடற்படை மற்றும் பொது நிகழ்வுகளின் போது கடற்படையின்வாத்திய பிரிவு தமது சேவையை அளிக்கின்றது. கலைத்துறையில் ஆர்வமுல்லோருக்குகடற்படையின் இப்பிரிவு மேற்கத்திய, கீழைத்தேய இசை மற்றும் கலாச்சாரஅங்கங்கள் சம்பந்தமான சிறந்த தொழித்துறை பயிற்சியை பெற வாய்ப்பளிக்கிறது.கப்பல்கட்டும் பிரிவு

கடல் யுத்தத்தில் வெற்றி என்பது யுத்தக் கப்பல்களின்செயல்பாட்டு திறனில் தங்கியுள்ளது. இப்பிரிவு யுத்தக் கப்பல்களின் சகல காலபராமரிப்பு வேலைகளை செய்வதோடு எல்லா நேரத்திலும் கப்பல்களை சிறந்த இயக்கநிலையில் வைத்திருக்கும் பொருட்டு தமது சேவையை வழங்குகின்றது. இப்பிரிவில்இலங்கை மற்றும் வெளிநாடுகளில் கப்பல் திருத்தம் சம்பந்தமான விசேட பயிற்சிபெற்ற அனுபவம் வாய்ந்த திறமையான ஆளணியினர் உள்ளனர்.கடற்படை ரோந்து பிரிவு

இலங்கை கடற்படையின் கல நடவடிக்கை திறனை அதிகரிக்கும்முகமாக இப்பிரிவு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பிரிவின் அதிகாரிகள்மற்றும் வீரர்கள் பிரதானமாக கல யுத்த நடவடிக்கைகளில் மற்றும் பல்வேறுகட்டளை பிரதேசங்களின் கீழ் பல்வேறு நியமனங்கள் ஏற்று சேவை செய்கிறார்கள்.

தகவல் தொழிநுட்ப பிரிவு

கடற்படையின் நிர்வாக செயல்பாடுகள் சிறந்த முறையில்கொண்டு நடத்துவதற்கு தேவையான தகவல்கலை விரைவாக வழங்குதல் மற்றும்தேவைக்கேற்ப செயல்திறன் மிக்க தொழிநுட்ப உதவிகளை வழங்கள் மற்றும் தகவல்தொழிநுட்ப கல்வியை ஊக்குவித்தல் மற்றும் பாவனையாளர் திருப்தியைமேம்படுத்தல் போன்ற சேவைகள் இப்பிரிவினால் வழங்கப்படும்.

காவளர் பிரிவு

கடற்படையினரிடையே ஒழுக்கம், சட்டம் மற்றும் ஒழுங்கைபராமரிக்கும் பொறுப்பு இப்பிரிவைச் சாரும். குற்றத்தடுப்பு, குற்றங்களைகண்டறிதல், குற்றவாளிகளை கைது செய்தல், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி பூர்வாங்க விசாரணைகளை கொண்டு நடத்தல் மற்றும் கடற்படைஅதிகாரிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகளில் உதவியளித்தல் போன்ற கடமைகள்இப்பிரிவினால் மேட்கொள்ளப்படும்.

நீதி பிரிவு

நீதி தொடர்பான விடயங்கல் மற்றும் செயல்முறைகள் மூலம்செயல்திறன் மிக்க ஒழுக்க அமுலாக்கம் உட்பட கடற்படை தொடர்பான ஏனையவிடயங்களில் கடற்படை தலைமைக்கு ஆலோசனை அளிப்பது இப்பிரிவின் கடமையாகும்.இதன் அதிகாரிகள் சட்டத்தரணிகளாக கடற்படையை நீதிமன்றத்தில்பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் கடற்படையின் ஆளணிக்கு சேவை தொடர்பான சட்டஅறிவை பெற்றுக் கொடுப்பதிலும் ஈடுபடுவர்.

 
 
அதிகாரபூர்வமுள்ள அதிகாரிகள் - இலங்கை தரப்படை
 

அதிகாரபூர்வமுள்ள அதிகாரிகள்- இலங்கை கடற்படை
 

அதிகாரபூர்வமுள்ள அதிகாரிகள்- இலங்கை விமானப்படை
 

அதிகாரம இலங்கை தரைப்படை

 

அதிகாரம இலங்கை தரைப்படை

 

அதிகாரபூர்வமற்ற பதவித்தரங்கல்

 
 
Non-Sub Badges of Sailors