வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன, அவர்கள் கொழும்பு ரோயல்கல்லூரியில் தனது கல்வியை கற்றார். ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ம் திகதி 09 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான அதிகாரிகாரியாக இலங்கைகடற்படையில் இணைந்து கொண்டார். திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் கல்லூரியில் தனது அடிப்படைப் பயிற்சியை பெற்ற அவர் பிரித்தானிய ரோயல் கடற்படை அகடமியில் மேலதிக பயிற்சியினைப் பெற்றுக் கொண்டார்.1982 ஆம் ஆண்டு பிரித்தானிய ரோயல் கடற்படையில் இணைந்து கொண்ட கடட் அதிகாரிகளில் சர்வதேச சிறந்த கடற்படை மிட்சிப்மென் கெடட் அதிகாரியாக அவர் தெரிவு செய்யப்பட்டு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவர் நீரில் செய்யப்படுகின்ற யுத்தம் பற்றி விஷேட பயிற்சி பெற்றதுடன் சூழியோடி பரசூட் மற்றும் பல் வேறுபட்ட துறைகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அவரின் கடைசி கடல்கட்டளையை இலங்கை கடற்படைக்குறிய “ சயுர” எனும் கப்பல் ஆகும். அவரின் 35 வருட கடற்படை சேவை காலத்தில் கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில்கட்டளை அதிகாரி, கொடி அதிகாரி கடற்படை சமுத்திர கட்டளையில் தளபதி , நவதில்லி நகரத்தில் இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தாணிகர் அலுவலகத்தில்முதலாவது பாதுகாப்பு ஆலோசர், பணிப்பாளர் கடற்படை நடவடிக்கை, விஷேட படைபிரிவின் தளபதி, கிழக்கு, வடக்கு, தேற்கு, மேற்கு பிராந்தியங்களில் கடற்படைத்தளபதி,இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்,, மற்றும்கடற்படை பிரதானிஆகிய முக்கிய பதவிகளையும் வகித்தார்.பின்னர் 2015 ஜுலை மாதம் 11ஆம் திகதி கடற்படைத்தளபதியா நியமிக்கப்பட்டார்.

இலங்கை கடற்படையின் விஷேட பிரிவானசிறப்பு படகு படைப் பிரிவை உருவாக்கியமை வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரதன அவர்களையே சாரும். யுத்த காலத்தின்போது குறித்த இப்படைப் பிரிவின் பங்களிப்பு முக்கியமாக காணப்பட்டது. இவரின் சேவைக்காலத்தில் குறித்த இப்படைப்பிவிற்கு இரு தடவை கட்டளையிட்டு எதிரிகளை அழிக்கும் வகையில் செயல்பட்டர். அத்துடன் 1993 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ‘பூனேரியன் யுத்த நடவடிக்கைகளின் போதும் தனது வழிகாட்டலின் கீழ் முன்னெடத்தமை குறிப்பிடத்தக்கது.

வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் காட்டிய திறமைகளுக்கு“ வீரோதார விபூஷன” ,” ரணவிக்கிரம” , “ ரணசூர” பதக்கங்கள் ஆகியன வழங்கப்பட்டதுடன் தனது சேவை காலத்தில் காட்டிய இலட்சியசேவைக்காக “ விஷிஷ்ட சேவா பதக்கம மற்றும் உத்தம சேவா பதக்கம” ஆகியனவும் வழங்கப்பட்டன.

அவர் 1996ம் ஆண்டில் பகிஸ்தான் கரச்சி பல்கழைக்கலத்தில் “ விஞ்ஞான பட்டதாரி பட்டமும் 2010ஆம் ஆண்டில் இந்தியாவில் மதுராசி பல்கழைக்கலத்தில் “ தத்துவத்திற்கான முது மானிபட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.

மேலும் அவர் அமெரிகாவில் பாதுகாப்புபல்ழகைகலத்தில் பழைய மாணவர் ஆவார். அது மாத்திரம் அன்றி விளையாட்டுத் துறைகளிலும் பல்வேறு திறமைகளை காட்டியுள்ளார்.ரக்பி,கால்பந்து, பாய்மர, மற்றும் படகுப்போட்டி ஆகியவற்றில் தனது திறமைகளை காட்டியதுடனன் மூலம் கடற்படை வரணங்களையும் வெற்றி பெற்றுக் கொண்டார். கடற்படை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த துப்பாக்கி சுடுபவராகவும் காணப்பட்டார்.அத்துடன் தேசி துப்பாக்கி சுடும் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். தற்பொழுது கடற்படை கொல்ஃப் கழகத்தின் தலைவராகவுமுள்ளார்.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற லங்கா அழகு ராணி போட்டியில் கலந்து கொண்டு அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட திருமதி யமுனா அவர்களை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 23 வயதுடைய சத்திரியஜித் எனும் ஒரு மகனும் உள்ளார்.