பரம வீர விபூஷனய (PWV)
வீரோதார விபூஷனய (WV)
 
வீர விக்கிரம விபூஷனய (WWV)
ரண விக்கிரம பதக்கம (RWP)
 
ரண சூர பதக்கம (RSP)
விசிஷ்ட சேவா விபூஷனய (VSV)
உத்தம சேவா பதக்கம (USP)
விதேஷ சேவா பதக்கம (VSP)
இலங்கை குடியரசு இராணுவ சேவைகள் பதக்கம் (1972)
இலங்கை கடற்படையின் 50வது ஆண்டு நிறைவு பதக்கம் (2000)
இலங்கை கடற்படையின் 25வது ஆண்டு நிறைவு பதக்கம் (1975)
இலங்கை ஆயுத சேவைகளின் நீண்ட கால சேவை விருது(1968)
இலங்கை ஆயுதப் படை நீண்ட கால சேவை விருது (1979)
ஜனாதிபதி பதவியேற்பு பதக்கம் (1978)
50வது சுதந்திர ஆண்டுவிழா நினைவு பதக்கம்
தேச புத்திர சம்மாணய
கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம்
வடக்கு மனித நடவடிக்கை பதக்கம்
வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம்
பூர்ணபூமி பதக்கம்
வடமாரச்சி நடவடிக்கை பதக்கம்
ரிவிரெச மெஹெயும
பிரசன்சனீய சேவா விபூஷனய
பிரசன்சனீய சேவா பதக்கம
பிரசன்சனீய சேவா பதக்கம

பரம வீர விபூஷனய (PWV)

பரம வீர விபூசனய மற்றும் பார், சேவையின் போது எதிரியின் முன்னிலையில்சுயநலம் கருதாது சுயமாக தன் சகாக்களின் அல்லது தான் ஈடுபாட்டுள்ளநடவடிக்கையின் இலக்குகளை அடைவதற்காக செய்த தனிப்பட்ட விசேட வீரசெயல்களுக்காக வழங்கப்படும்.

வீரோதார விபூஷனய (WV)

வீரோதார விபூஷனய மற்றும் பார், இராணுவ தன்மையற்ற வெளிப்படையான சுயநலம்கருதாது பிறர் உயிர் காப்பதற்காகமேட்கொள்ளப்படும் தனிநபர் வீரசெயல்களுக்காக அல்லது நீரில் மூழ்குதல், தீ, வெள்ளம் போன்றவிபத்துக்களிலிருந்து தன் உயிராபத்தையும் கருதாது மற்றவர் உயிரை காக்கசெற்யப்படுகின்ற மெச்சத்தக்க செயல்களுக்காக வழங்கப்படும். அச்செயலில்ஈடுபடும் போது காட்டப்பட்ட தைரியம் தாமதமின்மை போன்ற அம்சங்களும் இதன் போதுகவனத்தில் கொள்ளப்படும்.

வீர விக்கிரம விபூஷனய (WWV)

வீர விக்கிரம விபூஷனய மற்றும் பார், எதிரியின் முன்னிலையில் சுயநலம்கருதாது சுயமாக தன் சகாக்களின் அல்லது தான் ஈடுபாட்டுள்ள நடவடிக்கையின்இலாக்குகளை அடைவதற்காக செய்த தனிப்பட்ட இராணுவ விசேட வீர செயல்களுக்காகமற்றும் நீரில் மூழ்குதல், தீ, வெள்ளம் போன்ற விபத்துக்களிலிருந்து தன்உயிராபத்தையும் கருதாது மற்றவர் உயிரை காக்க செய்யப்படுகின்ற மெச்சத்தக்கசெயல்களுக்காகவழங்கப்படும்.அச்செயலில் ஈடுபடும் போது காட்டப்பட்டதைரியம் தாமதமின்மை போன்ற அம்சங்களும் இதன் போது கவனத்தில் கொள்ளப்படும்.

ரண விக்கிரம பதக்கம (RWP)

ரண விக்கிரம பதக்கம மற்றும் பார், எதிரியின் முன்னிலையில், சுயமாகசெய்யப்படும் தனிநபர் அல்லது தொடர்புடைய வீரச் செயல்களுக்காக வழங்கப்படும்.

ரண சூர பதக்கம (RSP)

ரண சூர பதக்கம, எதிரியின் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டதனி நபர் வீரச் செயல்களுக்கான வெகுமதியாக இப்பதக்கம் வழங்கப்படும்.

விசிஷ்ட சேவா விபூஷனய (VSV)

25 ஆண்டுகாலத்திற்கு குறையாத மாசற்ற ஒழுக்கமான இராணுவ சேவையை கொண்ட சிரேஷ்டஇராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் இப்பதக்கத்திற்கு தகுதிபெருவர். இதற்கான சேவைக்கால தேவை தடைபடாததாகவும் தொடர்ச்சியானதாகவும்இருப்பது அவசியம். இப்பதக்கத்தை பெற்ற ஒவ்வொருவரும் இரண்டாவது தடவை பெறவும்தகுதி பெறுவர்.

உத்தம சேவா பதக்கம (USP)

உத்தம சேவா பதக்கம, இலங்கை நிரந்தர கடற்படையின் அதிகாரிகள்/வீரர்கள்யாவருக்கும் 15 வருடங்களுக்கு குறையாத தொடர்ச்சியான சிறந்த தார்மீக மற்றும்இராணுவ நடத்தையைக்கொண்ட சேவைக்காலத்தில் நன்னடத்தை, சிறந்த திறன், தகுதிமற்றும் முன்னுதாரணமிக்க சேவைக்காக வழங்கப்படும். ஒவ்வொரு பெறுனரும் தனதுபெயருக்கு பின்னால் USP எனும் குறியீட்டை பாவித்துக் கொள்ளலாம்.

விதேஷ சேவா பதக்கம (VSP)

இலங்கை முப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் சகல தரத்தையும்சேர்ந்த அதிகாரிகளுக்கு நாட்டிற்கு வெளியே வெளிநாட்டு இராணுவ மிஷன்களில்அல்லது நாட்டிற்காக அல்லது ஐக்கிய நாடுகள் சங்கத்தின் அமைதிகாப்புநடவடிக்கைகளில்இதன்பின் செய்யப்பட்ட விதிமுறைகளுக்கமைய செய்யப்படும்பங்களிப்புகளுக்காக வழங்கப்படும்.

இலங்கை குடியரசு இராணுவ சேவைகள் பதக்கம் (1972)

இலங்கை குடியரசின் முப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவுகளின்அனைத்து தரங்களின் அதிகாரிகளுக்கு, இலங்கை மாணவர் படையணியின் அதிகாரிகலைதவிர்ந்து 1972ம் ஆண்டு மே மதம் 22ம் திகதி சேவையில் இருந்த மற்றும்முப்படை தளபதிகளின் பரிந்துரை பெற்றவர்கள் இப்பதக்கத்தை பெறலாம்.

இலங்கை கடற்படையின் 50வது ஆண்டு நிறைவு பதக்கம் (2000)

முப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவுகளின் சகல தரங்கலுக்கும்கடற்படை ஸ்தாபனங்களில் சேவையாற்றும் சிவிலியன்களுக்கும் வழங்கப்படும்.இலங்கை கடற்படையின் 50வது ஆண்டு நிறைவு காலமாகிய 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதிக்கும் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதிக்குமிடையில் அவர்கள் குறைந்தது பத்து வருட சேவையைபூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இலங்கை கடற்படையின் 25வது ஆண்டு நிறைவு பதக்கம் (1975)

முப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவுகளின் சகல தரங்கலுக்கும்கடற்படை ஸ்தாபனங்களில் சேவையாற்றும் சிவிலியன்களுக்கும் வழங்கப்படும்.இலங்கை கடற்படையின் 25 வது ஆண்டு நிறைவு காலமாகிய 1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம்திகதிக்கும் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதிக்குமிடையில் அவர்கள் குறைந்தது பத்துவருட சேவையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இலங்கை ஆயுத சேவைகளின் நீண்ட கால சேவை விருது(1968)

முப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவுகளின் சகல தரங்கலுக்கும்கடற்படை ஸ்தாபனங்களில் சேவையாற்றும் சிவிலியன்களுக்கும் வழங்கப்படும்.இலங்கையின் கடற்படையின் 25 ஆண்டு நிறைவு காலமாகிய 1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம்திகதிக்கும் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதிக்குமிடையில் அவர்கள் குறைந்தது பத்துவருட சேவையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இலங்கை ஆயுதப் படை நீண்ட கால சேவை விருது (1979)

இலங்கை ஆயுதப் படையின் நீண்ட கால சேவை விருதானது இலங்கைகடற்படையில் 12 வருட தொடர்ச்சியான சேவையை முடித்த மற்றும்சிறந்தநடத்தையையுடைய மற்றும் பிராந்திய தளபதி/ கட்டளை அதிகாரியினால்பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தரங்களுக்கு பெற முடியும். சேவை விடுப்புமற்றும் தடுப்பு அல்லது சிறை காலம் இல்லாமல், சேவையை கைவிட்டுச் அல்லதுஇல்லாத காலங்கல் தகுதி சேவை காலமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இலங்கைஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதமேந்திய சேவைகள் சேவை முழு நேரம் இராணுவசேவையை சம்பந்தப்பட்ட, பதக்கம் தகுதி சேவையாக கணக்கிடப்படாது, அத்தகையரிசர்வ் அல்லது தொண்டர் படையை ஒன்று திரட்டும் போது தவிர, அவசரசந்தர்ப்பங்களில் அல்லது செயலில் சேவை அழைப்பு விடுத்துள்ளசந்தர்ப்பத்தில், தொண்டர் படைகள் போன்ற ரிசர்வ் உறுப்பினராக முழு நேரசேவையை இருந்த காலம்இப்பதக்கத்திட்கு தகுதி சேவையாக எண்ணப்படவேண்டும்.

இலங்கை ஆயுதப்படை சேவை நீண்ட கால கிளஸ்ப் (1979)

இலங்கை ஆயுதப்படை சேவை நீண்ட கால கிளஸ்ப், இலங்கைநிரந்தர கடற்படையில் 20 வருட கால தொடர்ச்சியான சேவையை பூர்த்தி செய்தஅனைத்து தரங்களுக்கும் மேலே குறிப்பிட்ட தேவைகளிட்கமைய வழங்கப்படலாம்.

ஜனாதிபதி பதவியேற்பு பதக்கம் (1978)

இப்பதக்கமானது நிரந்தர மற்றும் தொண்டர் இராணுவா, கடற்படை மற்றும்விமானப்படை அனைத்து தரங்களுக்கும், அதிகாரிகள் உட்பட இலங்கைமாணவர் படையணியின் தரங்களை தவிர்ந்த, 1978 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி சேவையில்இருந்த அனைவருக்கும் ஒவ்வொருவரின் சேவை தளபதிகளினால் பரிந்துரைக்கமையவழங்கப்படலாம்.

50வது சுதந்திர ஆண்டுவிழா நினைவு பதக்கம்

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04ம் திகதிக்கு சேவையில் இருந்த அனைத்து இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படையினரின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவினருக்குஅவர்களின் தளபதிகளின் பரிந்துரைக்கமைய வழங்கப்படலாம்.

தேச புத்திர சம்மாணய

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் அனைத்து இராணுவா, கடற்படை மற்றும்விமானப்படையினரின் அனைத்து தரங்களுக்கும் யுத்தத்தில் காயமடைந்த மற்றும்அவர்களின் சேவை தளபதிகளால் பரிந்துரைக்கப்பட்டு அந்தந்த உத்தரவுவிதிமுறைகல் மற்றும்வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைகீழ் வழங்கப்படலாம்.

கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம்

இப்பதக்கம் வழங்கப்படுவது

* பாதுகாப்பு அமைச்சர், பிரதி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் அவர்களின் பதவிகளின்அடிப்படையில்.

* அனைத்து பாதுகாப்பு படை அங்கத்தவர்கள், (28 ஜூலை 2006 - 10 ஜூலை 2007) காலப்பகுதியில் சேவையில் இருந்த மற்றும் அவர்களின் சேவை தளபதிகளின்பரிந்துரைக்கமைய.

* குறிப்பிட்ட காலப்பகுதியில் கிழக்கு பிராந்தியத்தில் சேவையாற்றிய போலிசார், பொலிஸ் மா அதிபரின் பரிந்துரக்கமைய.

* கிழக்கு பிராந்தியத்தில் இக்காலப்பகுதியில் பாதுகாப்பு படைகளில்சேவையாற்றிய சிவில் பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்பரிந்துரைக்கமைய.

* பாதுகாப்பு சேவைகளில் சேவையாற்றிய சிவில் வைத்தியர்கள் மற்றும்அவர்களின் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதியிற்குள் குறைந்தது 7 நாட்கள் கிழக்குப் பிராந்தியத்தில் சேவையாற்றியவர்கள், சம்பந்தப்பட்டஅதிகாரிகளின் பரிந்துரைக்கமைய.

கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை கிலஸ்ப்

இக்கிலஸ்ப்வழங்கப்படுவது

i. பாதுகாப்பு அமைச்சர், பிரதி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச்செயலாளர், பாதுகாப்பு படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் அவர்களின்பதவிகளின் அடிப்படையில்.

ii. கிழக்கு பிராந்தியத்தில் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கையின்போதுதாக்குதலில் பங்கேற்ற, தாக்குதல் ஆதரவு, வழங்கள், வைத்திய, திட்டமிடல், இயக்கம் அல்லது வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஆகியவற்றிட்குபங்கேற்றசெயற்பாட்டு உத்தரவிட்கமைய 30 நாட்களுக்கு குறையாத காலப்பகுதிக்குசேவையாற்றிய அனைத்து பாதுகாப்பு படை வீரர்கலுக்கு வழங்கப்படலாம். எனினும்காயமடைந்த இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு 30 நாள் காலநிபந்தனை பொருந்தாது, அவர்கள் அக்காலப்பகுதியில் காயமடைந்திருந்தால்.

iii. விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் கிழக்கு பிராந்தியத்தில்நேரில் கடமையாற்றாத விடத்து அவர்களின் சேவை தளபதிகளின் முடிவுக்கமையவிமானப்படை அக்காலப்பகுதியில் விமானப்படை வீரர்களின் விமான செலுத்தல்கள்மற்றும் கடற்படை வீரர்களின் வழங்கள் பயணங்கலுக்காக வழங்கப்படலாம்.

வடமராச்சி நடவடிக்கை பதக்கம்

இப்பதக்கம் வழங்கப்படுவதாவது,

* வடமராச்சி பகுதியில் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்று சேவையாற்றிய அனைத்து பாதுகாப்பு படை வீரர்களுக்கும்.

* வடமராச்சி நடவடிக்கையின் போது முன்னணிபிரதேசத்தில் படையினரை இயக்கிய வழங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு, வடமராச்சி பிரதேசத்திலோ அல்லது மற்ற பிரதேசங்களிளோ நிலைகொண்டிருந்த.

* வடமராட்சி செயல்பாட்திற்கு உதவியாக வடமராட்சி பிரதேசத்திற்குவெளியே நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு படையினர்

* வடமராச்சி செயல்பாட்டை திட்டமிட்ட மற்றும் யாழ்பாணத்தில் அனைத்து சிவில் மற்றும் படையினர்.

* வடமராச்சி நடவடிக்கைகளின் போது காயமுற்றோருக்கு வைத்திய வசதி வழங்கிய அனைத்து இராணுவ மற்றும் சிவில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு.

வடக்கு மனிதாபிமான நடவடிக்கை கிலஸ்ப்

இக்கிலஸ்ப் வழங்கப்படுவது

* பாதுகாப்பு அமைச்சர், பிரதி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் அவர்களின் பதவிகளின் அடிப்படையில்.

* வடக்கு பிராந்தியத்தில் வடக்கு மனிதாபிமான நடவடிக்கையின் போது தாக்குதலில் பங்கேற்ற, தாக்குதல் ஆதரவு, வழங்கள், வைத்திய, திட்டமிடல், இயக்கம் அல்லது வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஆகியவற்றிட்கு பங்கேற்ற செயற்பாட்டு உத்தரவிட்கமைய 90 நாட்களுக்கு குறையாத காலப்பகுதிக்கு சேவையாற்றிய அனைத்து பாதுகாப்பு படை வீரர்கலுக்கு வழங்கப்படலாம். எனினும் காயமடைந்த இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு 90 நாள் கால நிபந்தனை பொருந்தாது, அவர்கள் அக்காலப்பகுதியில் காயமடைந்திருந்தால்.

* விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் வடக்கு பிராந்தியத்தில் நேரில் கடமையாற்றாத விடத்து அவர்களின் சேவை தளபதிகளின் முடிவுக்கமைய விமானப்படை அக்காலப்பகுதியில் விமானப்படை வீரர்களின் விமான செலுத்தல்கள் மற்றும் கடற்படை வீரர்களின் வழங்கள் பயணங்கலுக்காக வழங்கப்படலாம்.

வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கைகள் பதக்கம்

இப்பதக்கம் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரதேசங்களில் சேவையாற்றி 23 ஜூலை 1983லிருந்து மொத்தமாக 3 வருட கால சேவையை கொண்ட அனைத்து வீரர்களுக்கும் இப்பதக்கம் வழங்கப்படலாம்.

* கிழக்கு கடற்படை பிராந்தியம்

* வடக்கு கடற்படை பிராந்தியம்

* வடமத்திய கடற்படை பிராந்தியம்

* எஸ்எல்என்எஸ் விஜய (01ஜனவரி 1997 க்கு பின் சேவை காலம் மட்டும் கருத்தில் கொள்ளப்படும்)

பூர்ண பூமி பதக்கம்

கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் மாவட்டங்களில் 180 நாட்கள் சேவையாற்றிய வீரர்களுக்கு வழங்கப்படலாம்.

* யாழ்ப்பாணம், 22 ஜூலை 1977 லிருந்து

* வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை, 16 செப்டம்பர் 1983 லிருந்து.

வடமராச்சி நடவடிக்கை பதக்கம்

இப்பதக்கம் வழங்கப்படுவதாவது,

* வடமராச்சி பகுதியில் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்று சேவையாற்றிய அனைத்து பாதுகாப்பு படை வீரர்களுக்கும்.

* வடமராச்சி நடவடிக்கையின் போது முன்னணி பிரதேசத்தில் படையினரை இயக்கிய வழங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு, வடமராச்சி பிரதேசத்திலோ அல்லது மற்ற பிரதேசங்களிளோ நிலைகொண்டிருந்த.

* வடமராட்சி செயல்பாட்திற்கு உதவியாக வடமராட்சி பிரதேசத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு படையினர்

* வடமராச்சி செயல்பாட்டை திட்டமிட்ட மற்றும் யார்ல்பனத்தில் அனைத்து சிவில் மற்றும் படையினர்

* வடமராச்சி நடவடிக்கைகளின் போது காயமுற்றோருக்கு வைத்திய வசதி வழங்கிய அனைத்து இராணுவ மற்றும் சிவில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு.ரிவிரெச நடவடிக்கை சேவை பதக்கம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர், முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் செயலார்ந்த பணியில் இருந்த அனைத்து படையினருக்கும் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய வைத்தியர்கள் மற்றும் உதவியாளர்கள், பொலிசார், சிவிலியன்கள், 1995 அக்டோபர் 17 முதல் 1995 டிசம்பர் 05 வரை ரிவிரெச நடவடிக்கை I போது சேவையில் ஈடுபட்டிருந்தவர்கள். பற்றாணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கமைய.

ரிவிரெச நடவடிக்கை சேவை கிளஸ்ப்

யுத்த உத்தரவுகளுக்கமைய யாழ்ப்பான குடாநாட்டில் மற்றும் ஏனைய பிரதேசங்களில் சண்டை, தாக்குதல் ஆதரவு, வழங்கல், மருத்துவ திட்டமிடல், இயக்கம் மற்றும் எனைய சேவைகள் வழங்களில் குறிப்பிட்ட காலப்பகுதியில் 25 நாட்களுக்கு குறையாத காலம் சேவையாற்றிய முப்படைகளின் அனைத்து தரத்தினருக்கும் வழங்கப்படும்.

பிரஷன்சனிய சேவை விபூசணம்

பிரஷன்சனிய சேவை விபூசணமானது ஆணை பெற்ற அதிகாரிகளுக்கு இலங்கை தொண்டர் கடற்படையில் அவர்களின் நீண்ட, அப்பழுக்கற்ற நடத்தை, மெச்சத்தக்க விசுவாசமான மற்றும் மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படும் மேலும் இது 2000 ஜனவரி 31 பிரகடனத்தால் ஆளப்படுகிறது.பிரஷன்சனிய சேவை பதக்கம்

பிரஷன்சனிய சேவை பதக்கம் வாரன்ட் அதிகாரிகள், சிறு அதிகாரிகள், முதன்மை மாலுமிகள் மற்று சாதாரண மாலுமிகளுக்கு இலங்கை தொண்டர் கடற்படையில் அவர்களின் நீண்ட, அப்பழுக்கற்ற நடத்தை, மெச்சத்தக்க விசுவாசமான மற்றும் மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படும் மேலும் இது 2000 ஜனவரி 31 பிரகடனத்தால் ஆளப்படுகிறது.இலங்கை பாதுகாப்பு படைகள் பதவியேற்பு பதக்கம் -1956

இப்பதக்கம் இலங்கை கடற்படையில் 1950-1951 காலப்பகுதியில் செவைசெயதவர்களுக்கு வழங்கப்படும். இது 1955 ஜூலை உருவாக்கப்பட்டது.