“செல்வம் மற்றும் சலுகையை விட குடும்ப அன்பு மற்றும் நண்பர்கள் பாராட்டும் முக்கியமானதாகும்.”
-சார்ல்ஸ் குரல்ட்-
 

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் 12வது தலைவியாக பொறுப்பேற்றதையிட்டு நான் பெருமை மற்றும் மகிழ்ச்சியடைகிரேன். சேவா வனிதா பிரிவானது கடற்படை அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன் கருதி நீண்டகாலமாக சேவை செய்யும் முன்னணி ஸ்தாபனமாகும். மேலும் முன்னாள் தலைமைகளினால் மேட்கொள்ளப்பட்ட அனைத்து வேலைகளும் இத்தருணத்தில் நன்றியுடன் மற்றும் பாராட்டுடன் நினைவுபடுத்தப்படுகிறது. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அங்கத்தவர்களின் ஆதரவு இல்லாதாவிடத்து இது சாத்தியப்பட்டிருக்காது. இதற்காக, தங்களின் நேரத்தையும் உழைப்பையும் கொடுத்து உழைத்த அனைவருக்கும் நான் மீண்டும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.

1989ல் அப்போது லெப்டினன்டான ரவீந்திர சி விஜேகுனரத்ன அவர்களின் இலம் மனைவியாக திருகோணமலை கடற்படை அதிகாரிகளின் விவாக விடுதியில் குடியிருக்கும் போது இவ் ஸ்தாபனத்தின் தலைவியான திருமதி. சித்ரா சில்வா (காலம்சென்ற அட்மிரல் ஆனந்த சில்வா அவர்களின் பாரியார்) அவர்களின் அழைப்பின் பேரில் இதில் இணைந்தேன். அக்காலம் தொடக்கம் அனைத்து கடற்படை குடும்பங்களினதும் வாழ்க்கை தரத்தை மேப்படுத்த வேண்டி இதன் அங்கத்தவர்களால் மேட்கோள்ளப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களை நான் கண்கூடாக கண்டுகொண்டேன். இந்த சிறப்பான ஸ்தாபனத்தின் அங்கத்தவர்களாக இருப்பதையிட்டு எமக்கு ஒரு சிறந்த தனித்துவமான அங்கீகாரம், புகழ் மற்றும் பெருமை கிடைத்துள்ளது. இதன் தனித்துவமே எங்கள் அனைவரையும் ஏற்ற தாழ்வுகளின் போது ஒன்றாக இணைத்து வைத்துள்ளதாகும். எங்களுடைய கணவர்களுக்கு நாம் அளிக்கும் பலம் மற்றும் தைரியம், அவர்களின் வெற்றி மற்றும் கடற்படைக்கு அவர்களினால் அளிக்கப்படும் சேவையின் உந்து சக்தியாக அமைகிறது.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல் சேவா வனிதா பிரிவின் செயத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று உறுதியான நம்பிக்கையோடு கூறிக்கொள்கிறேன். யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணமல் போனோரின் குடும்பங்களின் நலனை பேணுவதில் அதிகம் முக்கியத்துவம் செலுத்த எண்ணியுள்ளேன். எம்மில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பதை நாம் எல்லோரும் அறிந்த விடயம் அத்துடன் இழந்த ஒரு குடும்ப உறுப்பினர் உயிரை ஒரு போதும் மாற்றீடு செய்ய முடியாது எனினும் நாட்டிற்காக உயிரிழந்த மற்றும் காயமடைந்த வீரர்களின் நலனை காப்பது எமது கடமையாகும். குழந்தைகளின் நலணில் அக்கறை செலுத்துவது மிக முக்கியமானதாகும். அவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கோடு பல நிகழ்ச்சிகளையும் திட்டமிடப்பட்டுள்ளது.

பரந்த முக்கியத்துவமிக்க இன் நலன்புரி நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொள்ள தேவையான தலைமையையும் வழிகாட்டலையும் என்னால் வழங்க முடியுமென நான் நம்புவதோடு கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட செயல் திட்டங்களை தொடர்ந்தும் மேற்கொள்ளவும் எண்ணியுள்ளேன். கடற்படை குடும்பங்களிடையே அன்பு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதன் மூலம் கடற்படை அங்கத்தவர்களிடையே சந்தோஷத்தை பேண முடியும் அது செல்வம் மற்றும் சலுகைகளை விட முக்கியமானது. நாம் எல்லோரும் ஒரு தனித்துவமிக்க அணியாக திரண்டிருக்கும் போது எம்முன் வரும் சவால்களை மற்றும் தடைகளை இலகுவாக வெற்றி கொள்ளலாம்.

Let’s join hands in making the future work of the Seva Vanitha Unit சேவா வனிதா பிரிவின் எதிர்கால சேவைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள நாம் அனைவரும் அணிதிரள்வோம் !

திருமதி. யமுனா விஜேகுனரத்ன
தலைவி, இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு.