தொண்டர் கடற்படை

தொண்டர் படையணியானது இலங்கை கடற்படையின் சிவிலியன் சம்பந்தமான, பயிற்சி பெற்ற விழிப்புடன் தயாராக நிபுணத்துவம் மற்றும் திறமையுடன் தேசிய அவசர நிலைமைகளின் போது தேவையான உதவிகளை வழங்கும் பிரதான படையணியாகும்.


நோக்கு

இலங்கை கடற்படையின் இலக்குகளை அடைய வேண்டி ஒன்றிணைந்து நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் இலங்கை தொண்டர் கடற்படை படையின் கூட்டு முயற்சியுடன் சேவை செய்யும்.

செயற்பணி

இலங்கை நிரந்தர கடற்படைக்கு துணையாகவும் பங்கு மற்றும் பணிகளை நிறைவேற்ற சிவிலியன் படிநிலைகள் உள்ள பல்வேறு துறைகளில் அவர்களின் நிபுணத்துவத்தை கொண்டு தேவையான உதவிகளை வழங்கள்.

பயிற்சி

சேவையில் இல்லாத தொண்டர் படையினர் மாதாந்த மற்றும் வருடாந்த, கடற்படை தளபதியின் ஆய்வுடன் நிறைவுபெறும் பயிற்சி பாசறைகளில் பங்குகொள்ள வேண்டும்.

தொண்டர் கடற்படை தலைமையகம் பின்வரும் பயிற்சி பசாறைகளை படையினரின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு நடாத்தும்.

* வாராந்த பாசறை – மாதத்தின் ஒவ்வொரு மூன்றாம் வார இறுதியில்

* வருடாந்த பாசறை – ஒவ்வொரு வருடத்தின் செப்டம்பர் மாதத்தில்

 
 
வரலாறு

இலங்கை தொண்டர் கடற்படையின் வரலாறு இலங்கை கடற்படையின் வரலாறு ஆகும்.அத்துடன் சிலோன் தொண்டர் கடற்படை மற்றும் சிலோன் ரோயால் தொண்டர் ரீசேர்வ் கடற்படை ஆகியவற்றின் செயற்பாடு கடற்படை தொண்டர் படையினை

உருவாக்க வழிவகுத்தது. இலங்கை தொண்டர் கடற்படை 1937ஆம் ஆண்டு 1ஆம் இலக்கம் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக கட்டளைத்தளபதி டப்ஜீ பீச்சம் வீஆர்டீ,சீபீஈ (முன்னால் கெப்டன்) அவர்களின் கட்டளையின் கீழ் 12 அதிகாரிகள் மற்றும் 18 கடற்படை வீரர்கள் ஆகியோருடன் உருவாக்கப்பட்டது. சீமென்/லாஸ்கார்ஸ், சிக்னல்மேன் மற்றும் கன்னர்ஸ் போன்ற பயிற்சிகளுடன் கடற் பயிற்சிகளும் வழங்கப்பட்டு 1938 மற்றும் 1939 ஆகிய ஆண்டில் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டணர்.

புதிய சிலோன் தொண்டர் கடற்படைத் தலைமையகம் 1939ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் திகதி அரசாங்க சபை அமைச்சர் திரு. டீ.எஸ் சேனநாயக்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க இருந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சிலோன் கடற்படை தொண்டர் படைத் தலைமையகம் 1939ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி கொச்சிகடவில் நிறுவப்பட்டது.குறித்த தொணடர் படையினர் திரட்டப்பட்டு கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகம் ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அதன் பின்னர் சிலோன் கடற்படை தொண்டர் படை 1943 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி பிரிட்டானியர் எடுத்து சிலோன் ரோயல் கடற்படை தொண்டர் என பெயர் மாற்றம் பெற்றது. கூட்டுப் படைகளின் போர் வெற்றிபெற்ற பின்னர் இலங்கை அரசாங்கத்திடம் 1946 கையளிக்கப்பட்டது.

1950 இன் 34 ஆம் இலக்க கடற்படை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் 1952 ஆம் ஆண்டு ஜனவரி ௦9ம் திகதி ரோயல் இலங்கை தொண்டர் படையினர் அனுமதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. கடற்படை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட ரோயல் இலங்கை தொண்டர் கடற்படையின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் அதேதினத்தில் உடனடியாக செயற்படும் வன்னம் சேவையில் இணைய முடியாது. புது யுக உதயத்தின் ஊடாக, பூரண சுதந்திரத்தை பெற்றுக் கொண்டதோடு 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி ஒரு குடியரசு நாடாகவும் மாற்றம் பெற்றது. அத்துடன் ரோயல் சிலோன் தொண்டர் கடற்படை இலங்கை தொண்டர் கடற்படையாக மாற்றம் பெற்றது.

 
 
 
அதிகாரிகள்

தொழித் தகைமையுடைய மற்றும் அரச அல்லது தனியார் நிறுவனங்களில் சேவையாற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலங்கை தொண்டர் கடற்படையில் ஆணைபெற்ற அதிகாரியாக நிறைவேற்று / மருத்துவம் / மின் / மெக்கானிக் / மின்னணுவியல் / பொறியியல் மற்றும் தகவல் தொழிநுட்ப பிரிவுகளுக்கு சேரமுடியும். தேவை ஏற்பாடு சமயம் அவர்கள் கடற்படை சேவைக்கு அழைக்கப்படுவார்கள்.

 
 
 
கடற்படை வீரர்கள்

தொண்டர் கடற்படையில் வீரராக சேர விரும்பும் எவருக்கும் அதிலுள்ள பிரதான மாலுமி பிரிவு உட்பட எந்த பிரிவுக்கும் சேர்ந்து ஒவ்வொரு ஐந்து வருட காலத்திலும் பதவியை புதுப்பித்துக்கொண்டு சேவையாற்றலாம் மேலும் தேவையேட்படுமிடத்து விடுப்பு கோரிக்கை செய்து சேவை இருந்து வெளியேறலாம்.