இப்பதக்கம் வழங்கப்படுவது
* பாதுகாப்பு அமைச்சர், பிரதி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் அவர்களின் பதவிகளின்அடிப்படையில்.
* அனைத்து பாதுகாப்பு படை அங்கத்தவர்கள், (28 ஜூலை 2006 - 10 ஜூலை 2007) காலப்பகுதியில் சேவையில் இருந்த மற்றும் அவர்களின் சேவை தளபதிகளின்பரிந்துரைக்கமைய.
* குறிப்பிட்ட காலப்பகுதியில் கிழக்கு பிராந்தியத்தில் சேவையாற்றிய போலிசார், பொலிஸ் மா அதிபரின் பரிந்துரக்கமைய.
* கிழக்கு பிராந்தியத்தில் இக்காலப்பகுதியில் பாதுகாப்பு படைகளில்சேவையாற்றிய சிவில் பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய.
* பாதுகாப்பு சேவைகளில் சேவையாற்றிய சிவில் வைத்தியர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதியிற் குள் குறைந்தது 7 நாட்கள் கிழக்குப் பிராந்தியத்தில் சேவையாற்றியவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய.
கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை கிலஸ்ப்
இக் கிலஸ்ப் வழங்கப்படுவது
i. பாதுகாப்பு அமைச்சர், பிரதி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச்செயலாளர், பாதுகாப்பு படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் அவர்களின் பதவிகளின் அடிப்படையில்.
ii. கிழக்கு பிராந்தியத்தில் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கையின் போது தாக்குதலில் பங்கேற்ற, தாக்குதல் ஆதரவு, வழங்கள், வைத்திய, திட்டமிடல், இயக்கம் அல்லது வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஆகிய வற்றிட்கு பங்கேற்ற செயற்பாட்டு உத்தர விட்கமைய 30 நாட்களுக்கு குறையாத காலப்பகுதிக்கு சேவையாற்றிய அனைத்து பாதுகாப்பு படை வீரர்கலுக்கு வழங்கப்படலாம். எனினும் காயமடைந்த இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு 30 நாள் காலநிபந்தனை பொருந்தாது, அவர்கள் அக் காலப்பகுதியில் காயமடைந்திருந்தால்.
iii. விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் கிழக்கு பிராந்தியத்தில் நேரில் கடமையாற்றாத விடத்து அவர்களின் சேவை தளபதிகளின் முடிவுக்கமைய விமானப்படை அக்காலப்பகுதியில் விமானப்படை வீரர்களின் விமான செலுத்தல்கள் மற்றும் கடற்படை வீரர்களின் வழங்கள் பயணங்கலுக்காக வழங்கப்படலாம்.