மாலிமா விருந்தோம்பல் சேவை


சுற்றுலாத்துறையின் சமீபத்திய வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, இந்த சேவை கடற்படையால் "மாலிமா விருந்தோம்பல் சேவை" என்ற வர்த்தக நாமத்தின் கீழ் ஒரு சுயாதீன விருந்தோம்பல் சேவையாக ஆரம்பிக்கப்பட்டது. வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வாடிக்கையாளர்களைப் பூர்த்தி செய்வதற்காக தீவு முழுவதும் பல ஓய்வு விடுதிகளும் உணவகங்களும் இதன் கீழ் இயங்குகின்றன.

போர் முடிவுக்கு வந்து சமாதானத்தை பெற்ற நிலையில், கடற்படைக்குச் சொந்தமான சுற்றுலாத் தலங்களைக் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ள புராதன மதிப்புள்ள கட்டிடங்களை சுற்றுலா விடுதிகளாக மாற்றி மலிவு விலையில் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் மாலிமா விருந்தோம்பல் நிறுவப்பட்டுள்ளது. இதன் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் வசதிகளும் சுற்றுலாத்துறையின் தரத்திற்கு அமைவாக கடற்படையினரால் மேற்கொள்ளப்படுவதுடன், இந்த விருந்தோம்பல் சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு உயர் ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவைகளை வழங்குவதற்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாலிமா விருந்தோம்பல் சேவைக்கு சொந்தமான உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளின் வலையமைப்பின் காரணமாக மலிமா விருந்தோம்பல் இந்தத் துறையில் முன்னணியில் வளர்ந்து வருகிறது. மலிமா விருந்தோம்பல் இலங்கையில் விருந்தோம்பல் துறையில் எதிர்பார்க்கப்படும் பல சேவைகளை வழங்குகின்றது.