வரலாறு

கடற்படையின் விரிவாக்கம் (சுருக்கமான வரலாறு)

இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் வழிகளின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை எப்போதும் கடல் பிரயாணிகளை கவரும் ஒரு காந்தமாக இருந்து வந்துள்ளது. 1937 ஆம் ஆண்டு சிலோன் கடற் தொண்டர் படை (CNVF) நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அது சிலோன் ரோயல் கடற்படையிற்கு உள்ளீர்க்கப்பட்டு சிலோன் ரோயல் கடற்படை தொண்டர் ரிசர்வ் என அறியப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்த பிறகு, 100 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்ட கடற்படையாக உருப்பெற்றது. 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி கடற்படை சட்டம் இயற்றப்பட்டு ரோயல் சிலோன் கடற்படை உருவாக்கம் பெற்றது.1972 ஆம் ஆண்டின், புதிய அரசியலமைப்பின் பிரகாரம் ரோயல் சிலோன் கடற்படை, இலங்கை கடற்படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1972ஆம் ஆண்டு வரை சிலோன் என அறியப்பட்ட இலங்கையில் கடல் நடவடிக்கைகள் பிரித்தானிய காலநித்துவ காலத்தில் அவர்களின் உலகளாவிய நடவடிக்கைகளின் பிரதிபலனாகவே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இரு உலகப் போர்களின் போது, ஜேர்மன் போர் கப்பல்கள் இந்து சமுத்திரத்தை ஊடுருவி நேச நாட்டு கப்பல் போக்குவரத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தின. புத்தெழுச்சி பெற்ற ஜேர்மன் ஒரு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பது புலனாக, 1932 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு ஏகாதிபத்திய பாதுகாப்பு மாநாட்டில் பேரரசின், டொமினியன், காலனி அல்லது காபந்து உட்பட எல்லாப் பகுதிகளிலும் அவை மாநாட்டில் கலந்துகொள்ளாவிடினும் பேரரசிற்குட்பட்ட அப்பகுதியின் பாதுகாப்பை பொபொறுபேற்க வேண்டும் என்ற ஒரு கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இலங்கையில், இந்த முடிவை "தொண்டர் கடற் பாதுகாப்புப் படை, கட்டளைச்சட்டம் எண் 1937 ன் 1" மூலம் நடைமுறை படுத்தப்பட்டது. 1938 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், முதலாவது அதிகாரிகள் ஆணையளிகப் பட்டார்கள். இரு இங்கிலாந்து மாஸ்டர் கடலோடிகள் மற்றும் இரண்டு இலங்கையர்கள், (சம்பளத் தளபதி லெப்டினன்ட் இ ப்என் கெரேஸியன், பின்நாள் உச்ச நீதிமன்ற நீதிபதி) மற்றும் டி சுசந்த டி பொன்சேகா (பின்நாள் பர்மா மற்றும் ஜப்பானுக்கான தூதுவர்) அ

History

இரு உலகப் போர்களின் போது, ஜேர்மன் போர் கப்பல்கள் இந்து சமுத்திரத்தை ஊடுருவி நேச நாட்டு கப்பல் போக்குவரத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தின. புத்தெழுச்சி பெற்ற ஜேர்மன் ஒரு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பது புலனாக, 1932 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு ஏகாதிபத்திய பாதுகாப்பு மாநாட்டில் பேரரசின், டொமினியன், காலனி அல்லது காபந்து உட்பட எல்லாப் பகுதிகளிலும் அவை மாநாட்டில் கலந்துகொள்ளாவிடினும் பேரரசிற்குட்பட்ட அப்பகுதியின் பாதுகாப்பை பொபொறுபேற்க வேண்டும் என்ற ஒரு கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இலங்கையில், இந்த முடிவை "தொண்டர் கடற் பாதுகாப்புப் படை, கட்டளைச்சட்டம் எண் 1937 ன் 1" மூலம் நடைமுறை படுத்தப்பட்டது. 1938 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், முதலாவது அதிகாரிகள் ஆணையளிகப் பட்டார்கள். இரு இங்கிலாந்து மாஸ்டர் கடலோடிகள் மற்றும் இரண்டு இலங்கையர்கள், (சம்பளத் தளபதி லெப்டினன்ட் இ ப்என் கெரேஸியன், பின்நாள் உச்ச நீதிமன்ற நீதிபதி) மற்றும் டி சுசந்த டி பொன்சேகா (பின்நாள் பர்மா மற்றும் ஜப்பானுக்கான தூதுவர்) அவர்கள் ஆவார்கள். இலங்கை கடற் தொண்டர் படையின் (CNVF) கட்டளை அதிகாரி கொமான்டர் டப்.ஜி. பியூ சேம்ப் (ஜே.எம் ராபர்ட்சன் & கம்பெனி லிமிடெட்டில் ஒரு இயக்குனராக) நியமிக்கப்பட்டார்.

History

இலங்கை கடற் தொண்டர் படையின் (CNVF) கட்டளை அதிகாரி கொமான்டர் டப்.ஜி. பியூ சேம்ப் (ஜே.எம் ராபர்ட்சன் & கம்பெனி லிமிடெட்டில் ஒரு இயக்குனராக) நியமிக்கப்பட்டார்.

அனுபவம் வாய்ந்த பிரித்தானிய மாலுமிகள் மற்றும் அதிக எண்ணிக்கையை கொண்ட இலங்கையரை உள்ளடக்கிய குழு ஒன்றும் பின்பு சேர்க்கப்பட்டு பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின் ஆயுத, தகவல் தொடர்பு, பொது கடமைகள் மற்றும் இயந்திரவியல் வேலை கலுக்காக ஆட்களும் சேர்க்கப்பட்டனர். பயிற்சி நடவடிக்கைகளுக்காக, ஒரு அதிகாரி பயிற்றுவிப்பாளர் மற்றும் ஒரு ஓய்வு பெற்றவாரண்ட் அதிகாரியும் இணைக்கப்பட்டார்கள்: "அதிகாரி பயிற்றுவிப்பாளர்" என்றபதவிக்கு, அல்லது தற்போது வரை "01 / VNF". இக் காலப்பகுதியிலேயே தொண்டர் படையினருக்கான பாரம்பரிய வார இறுதி பயிற்சி முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆகஸ்ட் 31ஆம் திகதி 1939, 2100 மணிக்கு, சிலோன் கடற் தொண்டர் படை (CNVF) போர் கடமை கலுக்காக அணி திரட்டப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து, சிலோன் கடற்தொண்டர் படை (CNVF) ரோயல் கடற்படையால் (RN) ஒரு தொண்டர் ரிசர்வ் ஆக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது 1946 மார்ச் மாதம் வரை ரோயல் கடற்படையின் நிர்வாக மற்றும் கட்டளையின் கீழ் செயல்பட்டது. யுத்தம் முடிவுபெற சிலோன் ரோயல் கடற்படை தொண்டர் ரிசர்வ் (CRNVR) என இலங்கை அரசு கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் இயங்கத் துவங்கியது. 1939-1946 காலப் பகுதியில் சிலோன் ரோயல் கடற்படை தொண்டர் ரிசர்வ் (CRNVR) பல கடமைகளை, முக்கியமாக கடல் பிரதேசத்தில் மேற்கொண்டது. துறைமுக ஆணைக்குழுவில் இழுவை படகுகளான சாம்சன் மற்றும் கோலியாத் மூலம் செயற்பாட்டு பயிற்ச்சிகளை பெற்று, பின்னர் கடல் கண்ணி வெடிகள் அகற்றும் கப்பல்களாக ஆயுதங்கள், நீர்மூழ்கி கப்பல்களை கண்டறியும் கருவிகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட அண்டார்டிக் திமிங்கில வேட்டை கப்பல்களையும் இயக்கி பயிற்ச்சிகளை பெற்றனர். அவைகளாவன , ஹெச்.எம் கப்பல்கள் ஓவடேல் மற்றும் வைக் (இலங்கை அரசினால் கொள்வனவு செய்யப்பட்ட முதல் கப்பல்கள்), ஒகாபி, செம்லா, சம்ப, ஹோக்ஸா, பால்டா மற்றும் ஹெச்.எம் இழுவை படகுகளான பார்னெட் மற்றும் சீ 405. மேலும் பல மோட்டார் மீன்பிடி படகுகளும் மற்றும் இதர துணை சேவை படகுகளும் அவர்களினால் இயக்கப்பட்டன.

அவை அனைத்து சிலோன் ரோயல் கடற்படை தொண்டர் ரிசர்வ் (CRNVR) பணியாளர்கள் மூலம் மட்டுமே பிரத்தியேகமாக இயக்கப்பட்டன. இக்கப்பல்கள் துறைமுகங்களின் நுழைவு பதைகளை பாதுகாக்கும் பணிகளிலேயே பெரும்பாலும் ஈடுபடுத்தப்பட்டாலும் சில சமயங்களில் இலங்கை கடல்களுக்கு அப்பால் உள்ள பிரதேசங்கள் பணிகளுக்கும் ஈடுபடுத்தப்பட்டன.

அவையாவன: துணைச் செல்லும் கடமைகள்: இந்திய துறைமுகங்கள், அட்டு தீவு, மாலே மற்றும் டியேகோ கார்சியா நோக்கிச் செல்லும் கப்பல்களுக்கு மற்றும் துருப்புக்கள் கொண்டு செல்லும் கப்பல்களாக மாற்றம் செய்யப்பட ராணி மேரி, ராணி எலிசபெத், மொரிட்டேனியா மற்றும் அகியுடேனிய போன்ற கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குதல்.

History

பாதுகாப்பு கடமைகள்: உள்நாட்டு துறைமுகங்களின் மற்றும் அட்டு தீவில் உள்ள அனி சாரா நாட்டு ஆனால் சந்தேகத்திற்கிடமான கப்பல்களுக்கு அருகே தரித்திருத்தல் .

தேடல் மற்றும் மீட்பு: இலங்கைக்கும் மாலைதீவிட்கும் இடையே தாக்குதலுக்குள்ளான மற்றும் மூழ்கிய கப்பல்களுக்கு உதவியளித்தல். அவ்வாறான நடவடிக்கைகளின் போது 248 உயிர்கள் காப்பாற்றப்பட்டத்துடன் பல கப்பல்களும் மீட்கப்பட்டன.

ரோந்து மற்றும் வெளிச்சவீட்டு பணிகள்: நாடு முழுவதிலும் மற்றும் மிநிகோய் தீவிலுமுள்ள வெளிச்ச வீட்டுகளை பழுதுபார்த்தல். கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் நுழைவு வழிகளை ரோந்து செய்தல், மேலும் கப்பல் போக்குவரத்து தடைகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கண்ணிவெடி தளங்களை கண்காணித்தல்.

இந்த நடவடிக்கைகளின் போது, கப்பல்கள் எதிரிகளின் தாக்குல்களுக்கு உள்ளாகின, சுட்டுவீழ்த்தப்பட்ட ஜப்பான் விமானங்கலிளிருந்து முக்கிய தகவல்களை மீட்டன, இரண்டு எப் எம் வீ (FMV) கப்பல்களுடன் பர்மா முன்னணி திறக்கப்பட்டதுடன் அக்யுப் இல் துறைமுக பணிகளுக்காக செல்லல், சரணடைந்த எரித்ரியா எனும் இத்தாலி யகப்பலையும் அதிலிருந்த முக்கியமான பணியாளர்கள் அடங்கலாக, பொறுப்பேற்று கொண்டுசெல்லல்; இலங்கை கடற்படை கப்பலொன்றால் (அல்லது வேறு சேவை அலகினால்)அண்மைக் காலத்தில் சரணடைந்த எதிரி பிரிவொன்றை பொறுப் பேற்ற முதலாவதும் ஒரே சந்தர்ப்பமும் இதுவாகும். மேலும் திருகோணமலையில் இயங்கிய துறைமுக போர்சமிக்ஞை நிலையத்தை இயக்குதல், கொழும்பிலிருந்த குறியீட்டு நிலையத்தை இயக்குதல், வைத்திய சாலைகளில் சேவையாற்றல் , வான்வழி தாக்குதல் எதிர்ப்பு, பர்மா போர் முன்னணிக்கு செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்களுக்கு சேவைவழங்கும் துணை படகு சேவை நிலையமொன்றினை இயக்குதல் மற்றும் அட்மிரல் மௌன்ட்பட்டன் இன் தென் கிழக்காசிய கட்டளை தலைமயகத்திட்கான உபசரிப்பு சேவைகளை வழங்குதல் போன்றவற்றையும் செய்தது.

கடற்படை விரிவாக்கம் (சமாதான காலத்தில்)

யுத்தம் முடிவுற்ற பின்னர், படைகலைப்பு வேலைகள் துவங்கப்பட்டன. சிலோன் ரோயல் கடற்படை தொண்டர் ரிசர்வ் (CRNVR) இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதுடன் அதன் யுத்த கால தளபதி கப்டன்டப். ஜி. பியுசம்ப் வி ஆர் டி, ஸி பி ஈ பதவி விலகினார். எனினும் சிலஅதிகாரிகளை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்த வேண்டிய தேவை இருந்தது; பிரத்தானிய கண்னோட்டத்தில் அதன் உயர் பீடம் “சமாதன காலத்தில் ஒரு சிறுபடையணியை தக்கவைத்தல்” இலங்கையின் கண்னோட்டத்தில், காலனித்துவத்தின் முடிவுகிட்டியுள்ளது ஆதலினால் “எதிர்கால கடற்படை” ஒன்று விரும்பத்தக்கது.அதன்படி கடற்படையின் அடிப்படை கரு 9 அதிகாரிகள் மற்றும் 91 வீரர்களுடன் கொமாண்டர் ஜி. ஆர். எம். டி மெல் அவர்களின் தலைமையின் கீழ் உருப்பெற்றது. இந்த காலப் பகுதியில், 1946-1950 ஆண்டு களின்போது, கடற்படையின் எதிகால் கடமை கட்டமைப்பு பாரம்பரிய கடற்படை பொறுப்புகள் மற்றும் உண்மையில் சந்தித்த சூழ்நிலைகள் என்பன வற்றின் செல்வாக்கு பெற்ற ஒரு சேர்கையாக இருந்தது. அதன் முதல் பணி, உடனடியாக அனைத்து புத்தகங்கள் மூடுதல், கப்பல்கள் மற்றும் தளங்களை பணியிலிருந்து உத்தியோகபூர்வமாக அகற்றுதல் (டி கமிஷன்) மற்றும் யுத்தக்கப்பல்களை அப்புரப்படுத்தல்.

அடுத்த கட்டமாக புதிய புத்தகங்கள் திறத்தல் மற்றும் கொச்சிக்கடை முகாமை தலைமையகமாக ஆணையமளித்து புதிய “கரு” வின் தலைமையகமாகவும் திறத்தல். ஆளணியின் திறன் மங்குதலைதவிர்க்கு முகமாக ரோயல் கடற்படையின் கப்பல்களுக்கு பயிற்சி குழுக்கள் அனுப்பப்பட்டது. மேலும் சிவில் சேவைக்கு உதவியளிப்பதும் ஒரு முக்கியபாத்திரமாக இருந்தது. வேலை நிறுத்த நடவடிக்கை அச்சுறுத்தலின் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பு, கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இழுவை படகுகள், சமீக்ஞை நிலையங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் படகுகளை இயக்குதல் போன்றனவும் அதனால் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வேலைநிறுத்த காலத்தில் ஸ்டான்லி மின் நிலையம் மற்றும் மாநகர கழிவுசுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றின் செயற்பாடுகளும் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டன. 1947 பெருவெள்ளத்தின் போது வெள்ள நிவாரண கடமைகலுக்காக நாட்டின் உட் பிரதேசங்களுக்கு கடற்படை படகுகலுடன் சென்றது. இதில் இரண்டு சம்பவங்கள் தனித்து விளங்குகின்றன. ஒன்று 75 அடி நீல 55 டன் பாரமான இழுப்புவலை மீன்பிடி படகை சிட்னியிலிருந்து பிரிஸ்பேன், டவ்ன்ஸ்வில், தேர்ஸ்டேதீவு, டார்வின் துறை, டிலி (கிழக்கு திமோர்), சுரபாயா, பத்தாவியா, சிங்கப்பூர், பினாங்கு, ரங்கூன், அக்யப் மற்றும் மெட்ராஸ் வழியாக, கொழும்புக்கு கொண்டுவருதல். இரண்டு மாதங்களில் 8000 மைல் தூர அப்பயணமே இலங்கை றோயல் கடற் தொண்டர் படையின் மிக நீண்ட கடற் பயணம்.

பயண முடிவின் பின் கப்பலின் தளபதி லெப் கொம். கால்ஒல்முஸ்ன் மரணம் இப்பயணத்தின் சிரமத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.மற்றையது,இலங்கையின் சார்பாக அவ்வாண்டு யுத்த வெற்றி அணி வகுப்புக்கு லெப்.கதிர்காமரின் தலைமையில் சென்ற 17 கடற்படை வீரர்களின் வருகை. இறுதியாகசுதந்திரம், பொதுநலவாய சங்கத்துட்பட்ட அரசாட்சி அந்தஸ்து வடிவில், 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி கிடைத்தது. இதற்கமைய சிலோன் ரோயல் கடற் தொண்டர்ரிசர்வ் (CRNVR), ரோயல் கடற்படையிடமிருந்து வெளிநாட்டிலிருந்து வருகை தரும் அனைத்து கடற்படைக் கப்பல்களுடனான தொடர்பு பேணல் பொறுப்பை பொறுப்பேற்றது.மேலும் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்காக பாதைகளில் அணிவகுப்புசெய்தது, சுதந்திர தினத்திற்காக இலங்கை வந்த க்லோசெஸ்டர் பிரபுவிற்காக மரியாதை அணிவகுப் பொன்றையும் மேற்கொண்டது.

அக்"கரு" இப்போது முழுமையான ஒரு கடற்படை எனும் நிலையை அடைய இயங்கத் துவங்கியது. ஆட்பலத்திலும் தரத்திலும் விரிவுபட தொடங்கியது.சேவை நிறுத்தப்பட்ட முன்னால் கடற்படை இருப்பு படையினர் மீண்டும் அணிதிரட்டப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆளணி தேர்வுகளின் ‘புது இரத்தம்’ ஊட்டப்பட்டது. கடற்படையிற்கு பொருத்தமான ஒரு தலைமை கப்பல் கொண்டு வரப்படும் வரை அப்பணியாட்கள் வெளிநாட்டு பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர். 1949 ஆம் ஆண்டில், எச்.எம். எஸ். ப்லையிங் பிஷ் எனும் ஒருஅல்ஜீரியன் வகுப்பு கடற்படை கடற்கண்ணிவாரி கப்பலை பிரிட்டன் காலவரையற்றகடனாக இலங்கைக்கு கொடுக்க அது எச். எம். சீ. எஸ். விஜய எனும் பெயரின் ஆணையமளிக்கப்பட்டது; இதற்கு வேறு எந்த ஒரு பெயரும் பொருத்தமற்றது என்று பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க அப்போது கூறியுள்ளார். ஒரு சிறு கடற்படை குழுசிங்கப்பூரில் வைத்து அக்கப்பலை கையேற்று திருகோணமலைக்கு கொண்டுவரும்வரை அக்கப்பலின் இருந்த ரோயல் கடற்படை பணியாளர்களின் கீழ் பயிற்சியாளர்களாக சேவை பயிற்சி பெற்றனர்.

History

திருகோணமலையில் வைத்து இலங்கையர் அக்கப்பலை பொறுப்பேற்றதுடன் மேலதிக பணியாளர்களும் கப்பலின் ஒழுங்கான இயக்கத்தை யொட்டி இணைந்து கொண்டனர். பின்னர் அக்கப்பல் லெப் ஆர். கதிர்காமரின் வழிநடத்தலின் கீழ் முறையான சம்பிரதாய கையளிப்புக்காக கொழும்புக்கு கொண்டு வரப்பட்டது. பிறகு காலி மற்றும் அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்த கப்பல் அங்கு பொதுமக்களின் பார்வைக்கும் திறந்து வைக்கப்பட்டது. விஜய வின் வருகையால் கடற்படையினால் கடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. பாக்கு நீரிணையில் கடத்தல் மற்றும்-சட்டவிரோத குடியேற்ற எதிர்ப்பு ரோந்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன மேலும் ஆள் நடமாட்டமற்ற கச்சதீவு தீவில் ஆயுதபயிற்சிகளும் மேட்கொள்ளப்பட்டது. விஜய வின் முக்கிய கடமைகளுள் கடல் வாழ்க்கை செயற்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குதல் மேலும் “கோடியைபறைசாட்டல்” என்பனவும் அடங்கியிருந்தது. புனித புத்த சின்னங்களைபர்மாவிற்கு கொண்டுசென்ற தெற்கு இந்திய கடற்படையின் தலைமை கப்பலான எச் எம்எஸ் கென்யா அடங்கலான கப்பல் தொடரில் விஜயவும் இணைந்து கொண்டார். இது வேவிஜயவின் பர்மாவிற்கான முதல் பயணமூமாகவும் அமைந்தது.

இதற்குள் ஒரு நிரந்தர கடற்படைக்கான சட்ட கட்டமைப்பு தயார் செய்யப்பட்டிருந்தது. அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் கமாண்டர் ஜி. ஆர். எம். டி மெல்ஒராண்டு பயிற்சிக்காக ஐக்கிய இராச்சியத்திற்கு சென்றதுடன் அவருக்கு பதில் கடமையாற்ற அரச கடற்படை ஆலோசகர், கேப்டன். டப்.இ. பேங்ஸ் சீ பீ இ, டி எப் சி நியமிக்கப்பட்டார்.1950ஆம் ஆண்டுடிசம்பர் 9ஆம் திகதி "கடற்படை சட்டம், அத்தியாயத்தின் 358" சட்டமன்ற பிரேரணைகள் நிறை வேற்றப்பட்டன. கேப்டன். பேங்க்ஸ் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டதுடன் 1937 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய அனைவரும் "ரோயல் இலங்கை கடற்படையின் நிரந்தர அல்லது தொண்டர் படை உறுப்பினர்களாக கருதப்பட்டனர்.

கடற்படை விரிவாக்கம் (முதன்மை காலம்)

கடற்படைக்கான ஒரு வேலைத்திட்டம் அமைப்பதற்கான தேவை இப்போது ஏற்பட்டது. ஏற்கனவே அது "சிவில் அதிகாரத்திற்கு உதவி" மற்றும் கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பு என்ற கடமைகளை செய்துகொண்டிருந்தது.விஜயவின் வருகை கடத்தல் மற்றும் சட்டவிரோத குடிவரவு எதிர்ப்பு ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பெரிதும் உதவியாக அமைந்தது. கடற்படைக்கான கொள்கை வடிவமைக்கும் பணி இக்காலத்தில் கடற்படை காப்டன்களின் மேல் விழுந்தது: கேப்டன் டப்.இ. பேங்க்ஸ், கேப்டன். ஜெ. ஆர். எஸ். பிரவுன், கேப்டன்.(பின்னர் கொமடோர்) பி.எம்.பி. சவேஸ் ரோயல் கடற்படையிலிருந்து இணைக்கப்பட்டிருந்த அதிகாரிகள் மற்றும் 1955-ல் கேப்டன் (பின்னர் அட்மிரல்)ஜி.ஆர்.எம் டி மெல்.

History

முதலாவதாக கடற்படைக்கு ஒரு ‘மனையை’ பெற வேண்டியிருந்தது. ரோயல் சிலோன் கடற்படைக்கு தலைமையக மொன்று அளிக்கப்பட்ட பின், வீரர்களின் ‘பெறாக்’ தங்குமிடம் காலி பக் (கொழும்பு வெளிச்சவீட்டுக்கு அருகில்) உள்ள எச்.எம்.சி. எஸ். கெமுனு I இற்கு கொண்டு செல்லப்பட்டது. கொச்சிகடே தளம் கெமுனு II என்றும் தொண்டர் படை எச். எம். சி. எஸ். லங்கா எனவும் தொடர்ந்தது இயங்கியது. கொடிக்கம்பம் வீதியிள் (Flagstaff) அதிகாரிகலுக்கான தங்குமிடம் ஒன்றும் பெறப்பட்டது. பயிற்சியளித்தள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுஅதற்காக தியத்தலாவையில் ஒரு முகாமும் நிறுவப்பட்டது. அது பின்னர் எச்.எம்.ஸி.எஸ். ரங்கள என ஆணையளிக்கப்பட்டது.

செயல்பாட்டு நடவடிக்கை பணிகள் இன்றியமையாத அம்சமாக அமைந்தது. ஒரு சிறிய கரையோர முகாமாக எச்.எம்.ஸி.எஸ் கல்லாறு வடக்கு நோக்கிய முதல் நகர்வாக அமைந்தது. எனினும் கடற்படையிடம் கடல் ரோந்து படகுகள் எதுவும் அப்போது இருக்கவில்லை. முன்பதிவு செய்யப்பட்ட அவ்வகையான படகுகள் கிடைக்கும் வரை கல்லாறு முகாம் கைவிடப்பட்டு தலைமன்னாரில் எச்.எம்.ஸி.எஸ் எலார தளம் அமைக்கப்பட்டு ஆணையளிக்கப்பட்டதுடன் துறைமுக ஆணைக்குழு மற்றும் சுங்க திணைக்களத்திடமிருந்து இரவல் பெற்ற படகுகளின் மூலம் ரோந்து நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டன. சிறிது காலத்திற்குள் புதிய படகுகள் கிடைக்கப் பெற தொடங்கியதும் எலார தளம் காரைநகருக்கு மாற்றப்பட்டது. எலாரதளத்தினால், கடல் பாதுகாப்பு படகான கொட்டியா, நீண்ட தூர ரோந்து படகுகளான ஹன்சயா மற்றும் லிஹினியா, நான்கு குறுந்தூர ரோந்து படகுகளான சேருவா, தியகாவா, தாராவா மற்றும் கோரவக்கா ஆகியனவற்றின் மூலம் பாக்கு நீரிணையில் ரோந்து செய்ய விஜய தளத்திற்கு உதவியளிக்க முடிந்தது.

இந் நடவடிக்கைகளுக்காக கடற்படை அதிகாரிகளுக்கு சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. பயிற்சிக் கப்பலான விஜய தனது கடமைகளில் ஒரு பகுதியாக வெளிநாட்டு பயனங்களை மேற்கொண்டது. 1951 ஆம் ஆண்டு அமைச்சர் சேர் ஜோன் கொத்தலாவலையுடன் மாலைதீவுக்கு சென்றதுடன் மீண்டும் 1953 குடியரசப் பிரகடனத்தின் போதும் 1954 ல் கடற் தொண்டர் படை வீரர்கலின் பயிற்சிக்காகவும் அங்கு மீண்டும் சென்றது. இது போன்ற பயிற்சி பயணங்கள் அந்தமான் தீவிலுள்ள போர்ட் பிளேர், பம்பாய், சென்னை மற்றும் கொசின் (எர்னாகுளம்) துறைகளுக்கும் மேட்கொள்ளப்பட்டன. மேலும் விஜய, 1955-ல் முப்படையை சேர்ந்த ஒரு புத்த பிரதிநிதிகள் குழுவுடன் ஒரு புனித மஹா போதி மரக்கன்று ஒன்றை சுமந்து பர்மாவில் "சட்டா சங்காயனை” நிகழ்வுக்காக சென்றது. அங்கு வைத்து பரிசாகக் கிடைத்த பல புத்தர் சிலைகளில் இரண்டு நைனாதீவு விகாரையிலும் திருகோணமலை திஸ்ஸ விகாரையிலும் வைக்கப்பட்டன. மேலும் அது 1950ஆண்டு முதல் 1962 ஆண்டு வரை வருடாந்த ‘ஜெட்’ (கூட்டுப்பயிற்சிகள், திருகோணமலை) பயிற்சிகளிளும் கரை நடவடிக்கைகளில், சிவில் அதிகாரத்திற்காண உதவி பல சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டது. துறைமுக பாதுகாப்பிற்க்காக துறைமுக ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் தொண்டர் கடற்படையின் ஒரு தனி பிரிவாக கேப்டன் எம் சன்திரசோம ஓ.பி.ஈ அவர்களின் தலைமையில் ஆணையளிக்கப்பட்டனர். இப்பிரிவு 1956 ல் கலைக்கப்பட்டது.சம்பிரதாய கடமைகள் படிப்படியாக அதிகரித்தன. ஒரு தேசிய கொடி ஏற்கப்பட்டதுடன், பிரித்தானிய கொடிக்கு பதிலாக தேசிய கொடியை உள்ளடக்கிய கடற்படை கொடி ஏற்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு கடற்படை தினத்தில் பறக்க விடப்பட்டது.முதல் பிரதமரின் இறுதி ஊர்வலத்தின் போது கடற்படையினர் "ரன்சிவிகே" யில் கடமை பொறுப்பேற்றனர்.

History

1951 ஆம் ஆண்டு விஜய, தேசத்திற்காக 21 மரியாதை வேட்டுக்களை தனது ஒற்றை 4 அங்குல பீரங்கியினால் கச்சிதமாக வெடித்தது.1953 ஆம் ஆண்டில் அக்கப்பல் புதுப்பித்தளுக்காக முடிசூட்டு விழாவிற்கு கலந்துகொள்ளும் குழுவுடன் இங்கிலாந்திற்கு சென்றது.‘எங்களுடைய கப்பல்’ மெது மெதுவாக சென்று கிம்ஸ்பிகப்பல் துறையில் உலர் கரை எடுக்கப்பட்ட நிகழ்வை பிரித்தானிய பத்திரிகைகள் “கடற்படை வந்துவிட்டது” என செய்தி வெளியிட்டன. ரோயல் கடற்படையினால் விஜவிட்கு பதிலாக அதே வகையான மற்றொரு கப்பலை (விஜய ii) போர்ட்ஸ்மவ்த்ல் நடக்கும் இராணியின் கப்பல் அணிவகுப்பிற்கு கலந்துகொள்ளும் வகையில் இலங்கை கடற்படைக்கு இரவலாக வழங்கப்பட்டது. எலிசபெத் ராணியின் இலங்கை விஜயத்தின் போது தக்க தருணத்தில் நாடு திரும்பியா கப்பல் அரச படகான “கோதிக்” கைகொழும்பு துறைமுகத்திற்கு வழிநடத்திச் சென்றது. “கோதிக்” கப்பலே கொழும்பு எலிசபெத் இறங்கு துறையில் முதலாவதாக நிறுத்தப்பட்ட கப்பலாகும். பின்பு விஜய கப்பலுக்கு அரசி விஜயம் செய்தார். அடுத்த ஆண்டு பிலிப்பைன் இளவரசர் இலங்கைக்கு புதிய அரச படகான “பிரித்தானியாவில் விஜயமொன்றை மேற்கொண்டார்.

கடற்படை விரிவாக்கம் (1956 -1960)

1956 ல் துவங்கிய புதிய சிந்தனை சகாப்தத்தில் முழு நாட்டையும் போல் கடற்படையும் ‘புதிய சிந்தனையை’ அனுபவித்தது. வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் யுத்தத்தின் போது உலக அரசியலில் மேடையில் நடுநிலைமை காப்பதை தாண்டி அணிசாரா கொள்கையை நோக்கி நாடு நகர்ந்தது. சுதந்திரம் பெற்ற காலத்தில் செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இக் கொள்கைகளுக்கு முரணானதை கருதப்பட்டதுடன் பிரித்தானிய கட்டுப்பாட்டில் இருந்த தளங்கள், குறிப்பாக திருகோணமலை, கட்டுநாயக்க, மற்றும் தியத்தலாவையில் சில முகாம்களை சுமூகமாக கைமாற்ற நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டன. கடற்படை ஒரு பெரிய சுமையை சுமக்க அழைக்கப்பட்டதுடன் அதனால் சில நன்மைகளையும் அடைந்தது. தியத்தலாவையில் சகல வசதிகளையும் கொண்டஒரு புதிய முகாமை (முன்னாள் எச்.எம்.எஸ் ஊவா) பெற்றதுடன் மிகச் சொற்பவளங்கள் கொண்ட திருகோணமலையிலுள்ள பாரிய தளமான எச்.எம்.எஸ் ஹய்பிளையயும் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. இந்நிகழ்வு அரசியல் மற்றும் கடற்படை வாரியாகமகத்தான முக்கியத்துவத்தை கொண்டிருந்தது.

History

பிரதமர், எஸ்.டப்.ஆர்.டி பண்டாரநாயக இந்நிகழ்வை, காலனித்துவத்தின் மிச்சங்களின் ஒரு வெளியேற்ற மெனவும் பூரண சுதந்திரத்தை நோக்கிய பயணத்தில் ஒரு படி எனவும் தெரிவித்திருந்தார். இவ்விழாவிற்கு முக்கிய பிரமுகர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஒரு புகையிரதத்தில் சமூகமளித்தனர். ரோயல் கடற்படையின் கோடி அகற்றப்பட்டு ரோயல் சிலோன் கடற்படையின் கொடி பறக்க விடப்பட்டது. பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இரத்து செய்வதானது கடற்படை விரிவாக்கம் செய்யப்பட்டு நம் கடல் பரப்பை பாதுகாக்க தேவையான கப்பல்கள் பெறப்பட வேண்டும் என்ற தேவை ஏற்பட்டது.

History

அவ்விரு விடயங்களும் செயல் படுத்தப்பட்டன. கடற்படை, 1951-1958 வரை 48 அதிகாரிகளையும் 510 வீரர்களை மாத்திரமே கொண்டிருந்தது. அவர்களில் அதிகளவானோர், கொட்டியா மற்றும் "பறவை" வகுப்பு ரோந்துப் படகுகளை இயக்க தேவைப்பட்டிருந்தனர். முதல் இணைப்பாக மற்றொரு "அல்ஜீரிய" வர்க்க கடற்கண்ணிவாரி கப்பலான முன்னாள் எச்.எம்.எஸ். பிக்கில் இங்கிலாந்தில் வைத்து பொறுப்பேற்கப்பட்டு பின்னர் எச்.எம்.ஸி.எஸ். பராக்கிரம என ஆணையளிக்கப்பட்டு 1958-ல் நாடு திரும்பியது. அதன் பின் 1959 ல் கனடாவில் கட்டப்பட்ட “ரிவர்’ வகுப்பு பிரிகேட் படகு எச்.எம்.ஸி.எஸ். மஹாசேன (முன்னால், எச்.எம்.ஸி.எஸ். வயோலெட்டா, ஓர்க்னி மற்றும் முன்னாள் இஸ்ரேலிய கப்பல் மிவ்டச்) ஜிபுட்டியில் வைத்து கையேட்கப் பட்டு நாடு திரும்பியது. இதற்கு முன்னர் 1957 ஒரு கடல் செல்லும் இழுவை கப்பலான, முன்னாள் எச்.எம்.எஸ்அடெப்ட் கொல்வனவு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக மற்றுமொரு “ரிவர்” வகுப்பு படகான எச்.எம்.ஸி.எஸ் கஜபாஹு (முன்னாள் எச்.எம்.ஸி.எஸ் ஹேலொவெல், முன்னாள் இஸ்ரேலி கப்பலான மிஸ்நெக்) 1960 ல் திருகோணமலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. படிப்படியாக இலங்கை கடற்படை ஒரு கௌரவமான “ஆழ்கடல்” கடற்படையாக உறுப்பெற்றது. 6 பொதுநலவாய நாட்டு கடற்படைகளுக்குரிய 38 கப்பல்கள் வங்காள விரிகுடா பகுதியில் முன்னெப்போதையும் விட பெரிதாக நடந்த “ஜெட் 60” ல் பங்கேற்றன. அப்போதைய பிரதமர் ஒரு கொலையாளியின் துப்பாக்கிக்குண்டால் கொல்லப்பட்ட சமயம் முழு நாட்டையும் போன்று கடற்படையையும் வியத்தகு அனுபவங்களை எதிர்பார்த்திருந்தது. நாடு பல அரசியல் மற்றும் தலைமைத்துவ மாற்றங்களை கண்டது. ஆனால் கடற்படையின் விதி அதற்கு மாற்றமாக அமைந்தது.

“ஆழ்கடல்” நாட்கள் திரும்பக் வரவில்லை. எனினும் கடற்படை மற்றும் சலைக்காது சிரமங்களுக்கு மத்தியிலும் அதனால் காரியமாற்ற முடியும் என்பதை காட்டியதுடன் எதிர்காலத்திற்காக திட்டங்களையும் வகுத்தது. ‘எமிலி’ புயலினால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யும் காரியத்தில் கடற்படை மற்றனை வரையும் முந்தியது. மருத்துவ மனைகளுக்கு உதவி, பாதுகாப்பு சேவைகளுக்கு ஒத்துழைப்பு, நாட்டுக்கு வெளியே உள்ள தீவுகளுக்கு மற்றும் அவசர அத்தியாவசிய பொருள்களுடன் அறிமுகமில்லா கடல் மார்க்கங்களின் வரும் வர்த்தக கப்பல்களுக்கு உதவி, மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருள் சுமந்து வரும் ‘கஜபாஹு’ கப்பலுக்கு உதவி, நிலந்தள்ளப்பட்ட அரச கப்பல்களை மீட்க மற்றும்அரச நிர்வாக சேவை அதிகாரிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டுசெல்லல் என பல்வேறு சேவைகள் கடற்படையினால் மேட்கொள்ளப்பட்டது. வழக்கமான மற்றும் அவசர கால சூழ்நிலைகளின் போது கடற்படையின் சேவையே அரசின்வுருப்பத்திட்குரிய தேர்வாக அமைந்தது, எனினும் இது போதுமானதாக அமையவில்லை.கடற்படை கடந்த காலத்தை விட்டு நிகழ்கால மற்றும் எதிர்கால சவால்களை எதிர்நோக்க தனது கவனத்தை திருப்பியது. ஒரு சிறு நிராயுத படகுடன் உருவாக்கப்பட்ட அது கடலோர கண்காணிப்புக்காக 28 ரோந்து கப்பல்களை கொண்ட கப்பலனியையும் அதை இயக்க தேவையான படையினரின் செயற்திரனை பராமரித்துக்கொண்டும் மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுக்குள் செயற்படமுடிந்தது.

History

தனக்குன்டான எதிர்கால பாத்திரத்தை வடிவமைப்பதில் தலைமையகமும் தனிச்சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தது. தற்கால கடற்படையின் பாத்திரம் அக்கடந்த கால சிந்தனையின் பிரதிபலன் என கூறலாம். ஒரு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி, ஒரு கடற்படை சுழியோடும் பிரிவு, ஒருகடலியல் பிரிவு, ஒரு விவசாய மற்றும் கால்நடை திட்டம், தேசிய மயமாக்கப்பட்ட துறைமுகங்கள் கட்டுப்படுத்தல் மற்றும் அனைத்து அரசு கடல்சார் நிறுவனங்களுக்கு பயிற்சியளித்தல் போன்ற அனைத்தும் கடற்படையால் நிறைவேற்றப்பட்டன. மற்றைய திட்டங்கள் பிந்திய காலங்களில் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் வணிக கப்பல்களை இயக்குதல், துறைமுகங்களில் கப்பல் வழிநடத்தல், கப்பல் உலர்கரை எடுத்தல் மற்றும் நீருக்கு செலுத்தல், கடலோர நங்கூரத்தளங்களை நிர்மாணித்தல், கட்டல், கலங்கரை விளக்கங்கள் பராமரிப்பு போன்ற அனைத்தும் இன்று நடந்தேறியிருக்கின்றன; அவை அனைத்தும் முற்கால கடற்படை சிந்தனையாளர்களின் மனதில் உதித்தவையாகும். அலுவலர்கள் மற்றும் வீரர்களினது ஆட்சேர்ப்பு படிப்படியாக ஆரம்பிக்கப்பட்ட தெனினும் வெகுவிரைவில் அது மடைதிறந்தாற் போல் திறந்து விடப்பட்டது. அதிகளவானோர் சேர்க்கப்பட்டதுடன் சிறப்பு பயிற்சி தளங்களும் நிறுவப்பட்டன.

History

இழப்புக்கள் ஈடுகட்டப்படாவிட்டாலும் எதிர்காலம் ஆவலுடன் அழைக்கப்பட்டது. புதிய ஆளணியினர் அதிக கல்வி கற்றவர்களாகவும் பயிற்சி நெறி தொழில்நுட்ப விடயம் சார்ந்ததும் உயர்தர மானதாகவும் இருந்தது. இவையனைத்தும் இக் காலத்தின் பிற்பகுதியில் நடந்ததாயினும், அனைத்தையும் மீண்டும் அரசாங்கத்தினால் ஒருசீரமைக்க ஒரு பேரிடர் காரணமாயிருந்தது.

கடற்படையின் பங்கு மற்றும் கப்பலணியின் கட்டமைப்பு ஆகியவற்றை மறுமதிப்பிடபட வேண்டிய தேவையை ஏற்படுத்திய பேரிடர் எதிர்பார்த்ததை விட முன்னரே நிகழ்ந்தது. 1971 ஆம் ஆண்டில், மக்களின் விருப்பு தெளிவாக தெரிவிக்கப்பட்ட ஒரு பொதுத் தேர்தலிற்கு ஒரு சில மாதங்களுக்கு பின்னர், "மக்கள் விடுதலை முன்னணி" (ஜே.வி.பி.) தலைமையிலான ஜனநாயக விரோத சக்திகளினால் வெளி மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மீது ஒரு தொடர் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. புலனாய்வு பிரிவுகளின் கவனக்குறைவினால் அல்லது புலனாய்வு தகவல்கள் அலட்சியம் செய்யப்பட்டதால் அரசாங்கம், பொலிஸ் மற்றும் இராணுவ சேவைகள் அனைத்தையும் இந் நிகழ்வுதிடுக்கிடவைத்தது.

ஜனநாயகத்தை காத்தல்

கடற்படையின் பங்கு மற்றும் கப்பலணியின் கட்டமைப்பு ஆகியவற்றை மறுமதிப்பிடபட வேண்டிய தேவையை ஏற்படுத்திய பேரிடர் எதிர்பார்த்ததை விட முன்னரே நிகழ்ந்தது. 1971 ஆம் ஆண்டில் சில மாதங்கள், மக்களின் விருப்பு தெளிவாக தெரிவிக்கப்பட்ட ஒரு பொதுத் தேர்தலின் பின்னர், "மக்கள் விடுதலை முன்னணி" (ஜே.வி.பி.) தலைமையிலான ஜனநாயக விரோத சக்திகளினால் வெளி மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மீது ஒரு தொடர்தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. புலனாய்வு பிரிவுகளின் கவனக்குறைவினால் அல்லது புலனாய்வு தகவல்கள் அலட்சியம் செய்யப்பட்டதால் அரசாங்கம், பொலிஸ் மற்றும் இராணுவ சேவைகள் அனைத்தையும் இந் நிககழ்வு திடுக்கிடவைத்தது. திடீர்த் தாக்குதலின் வியப்பு மற்றும் அத்தகைய ஒரு சூல்நிலையை சந்திக்கக்கூடிய ஒரு மூலோபாயம் இல்லாமையின் காரணத்தால் ஆரம்பத்தில், கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமான நிலை காணப்பட்டது மேலும் அப்போது நாடு பெரும் குழப்பத்தில் மூழ்கி இருந்தது. ஆனால் பாதுகாப்பு படையினரின் பாரம்பரிய ஒழுக்கம், எதிர்பாராததை எதிர்கொள்ளும் திறன், மற்றும் உறுதியாக முடிவெடுக்கும் அரச தலைமை ஆகியகாரணங்களினால் அவ்வலை அரசாங்கத்திற்கு ஆதரவாக திரும்பியது. கிளர்ச்சியாளர்கள், எதிர்கொள்ளப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர் மேலும் பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டது இவையனைத்தும் ஒரு சில மாதங்களிட்குல்லேயே நடந்தேறின. அதன் பின்னர் நாடு ஒருபோதும் பழைய நிலைமைக்கு திரும்பவேயில்லை.

கடற்படை மீதான தாக்கம்

கடற்படையின் மீதான நேரடித்தாக்கம் அதன் ஆள் மற்றும் வளபற்றாக்குறையின் காரணத்தினால் எட்பட்டதாக விருன்ந்தது. கஜபாகுவின் ஆளணி தரையுத்தத்திற்கு அனுப்பப்பட்டதாலேயே ஆளணி பற்றாக்குறை எற்பட்டது மேலும், இந்நிலைமை கடலில் ரோந்து செல்ல அதனால் முடியாம லிருந்தது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் மற்றும் உதவி கடல் மார்க்கமாக வருவது தெளிவாக இலங்கை அரசு அண்டைய நட்பு நாடுகளிடம் உதவி கோர வேண்டி வந்தது. எங்களுக்கு இந்திய மற்றும் பாகிஸ்தானிய கடற்படையினரிடம் நம் நாட்டு கடலில் ரோந்து செய்ய வேண்டி நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இராணுவமும் விமானப்படையும் இந்நிலைமைக்கே தள்ளப்பட்டது.

எனினும் அரசு கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்று எதிர்காலத்தை திட்டமிட முடிந்தது. ஆள் பல தேவைகளை உணர்ந்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டன. முப்படைகளிலும் கிளர்ச்சியாளர்களின் ஊடுருவல் காணப்பட்டதால் பாதுகாப்பு சோதனை அவசியமானதாக இருந்தது. யாழ்சுன்னாகத்தில் ஜேவிபி அதரவு கடற்படை சிப்பாய் ஒருவர் தன சகாக்களின் மேல் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் இரு கடற்படையினர் உயிரிழந்தனர்.குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் கடற்படை அதன்முதல் போர் உயிரிழப்பை நொச்சியகமையில் சந்தித்தது.

இதனால் நாட்டிலும் கடற்படையிலும் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டன. பல நாடுகள் இராணுவத் தளபாடங்கள் மற்றும் பயிற்சி ஆகியன வழங்க முன்வந்தன. சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் தமது தூதுவரலயங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களை நிலை நிறுத்தினர், அந்நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரான்ஸ் மற்றும் சோவியத் ஒன்றியம் அடங்கும். இக்கிளர்ச்சி உலக அரசியலில் இலங்கையின் அந்தஸ்த்தை மாற்றியமைத்தது.

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசு

1972-ல் டொமினியன் அந்தஸ்தை துறந்து குடியரசாக மாற அரசு எடுத்த முடிவு இதன் ஒரு எதிரொலியாக கருதலாம். இலங்கை டொமினியன், இலங்கை சோஷலிச குடியரசாகவும் ரோயல் சிலோன் கடற்படை இலங்கை கடற்படையாகவும் மாறியது. காலனித்து வத்திலிருந்து பிரிந்த அனைத்து கடற்படைகளைப் போல இலங்கை கடற்படையும் அதன் சின்னத்திலிருந்த புனித ஜார்ஜ் கிராஸ் சின்னத்தை அகற்றியது மேலும் கொடி அதிகாரிகள் கொடிகளும் மீள் வடிவமைக்கப்பட்டது. மேலும் கடற்படை சட்டத்தின் இல் அறிமுகப்படுத்தப்பட்ட "கடற்படை கேப்டன்” எனும் பதம் "கடற்படை தளபதி" என்று மாற்றப்பட்டது. இறுதியாக, "அவரதுமாட்சிமை தங்கிய இலங்கை கப்பல்கள்" (H.M.Cy.S.) "இலங்கை கடற்படை கப்பல்கள்" (SLNS) என மாற்றியமைக்கப்பட்டது.

கப்பற்தொகுதியை மீளமைத்தல்

கடற்படையின் கடலியக்கத்திட்கு பலமளிக்க வேண்டிய தேவை ஒரு முக்கிய ஒன்றாக இருந்தது. முதலாவதாக பெறப்பட்ட கப்பல்கள் சீன மக்கள் குடியரசினால் வளங்கப்படனவையாகும். அவை 1972 ல் பெறப்பட்ட "ஷாங்காய்"வகுப்பு கப்பல்களான ‘சூறையா’ மற்றும் ‘வீரயா’. அவை ரோந்து படகுகளை விடபெரியவை. அவை திறன்மிக்க துப்பாக்கி பேட்டரி கலி கொண்டிருந்தன. மேலும் மூன்று அதே வகை கப்பல்களான “த க்ஷயா’, ரணகாமீ’ மற்றும் ‘பலவதா’ 1973 ளும், ‘ஜகதா’ மற்றும் ‘ரக்ஷயா’ ம் 1980 ம் பெறப்பட்டது. சோவியத் ஒன்றியத்திலிருந்து ஒரு புது வகை கப்பலும் அன்பளிப்பாக பெறப்பட்டு SLNS ‘சமுத்ரா தேவி’ என ஆணையளிக்கப்பட்டது.`மேலும் ஐந்து ரோந்து படகுகளுக்கு ஐக்கிய இராச்சிய ‘செவ்ரோன்’ நிறுவனத்திடம் உத்தரவலிக்கப்பட்டது அவற்றில் இரண்டு “சேருவா’ மற்றும் ‘கோரவக்கா’ என ஆணையாளிக்கப்பட்டன. கொழும்பு டொக்கியார்ட் நிறுவனம் 40 மீட்டர் நீளம், ஆழ்கடல் ரோந்து படகான ‘ஜெயசாகர’ வையும் பின்னர் ‘சாகரவர்தன’ வையும் கட்டியது.

இப்படியாக உருவம் பெற்ற கப்பல் தொகுதி, மீண்டும் கடல் பிரயாணங்களை மேற்கொள்ள உதவியளித்தது. 1972 ல் ‘கஜபாஹு’ மெட்ராஸ்ற்கு செயல்பாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டது மேலும் ‘பலவதா’ மற்றும் ‘கஜபாஹு’ நல்லெண்ண விஜயமொன்ரை மேட்கொண்டு மாலைதீவிற்கு 1973சென்றரது. மீண்டும் 1974ல் கடற்படை தளபதியின் கொடியை தாங்கியும் அதே ஆண்டில் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டும் மாலைதீவு சென்றது. நேரடி விளைவாக இரண்டு மாலைதீவு கடெட் பயிலுனர்கள் இலங்கையில் பயிற்சி பெற ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். மேலும் 1976 ல் ‘கஜபாஹு’ கொச்சினுக்கும், 1976 ல் ‘சூறையா’ மற்றும் ‘ரணகாமீ’ மாலைதீவிட்கும், 1978 ல் ‘பலவதா’ மற்றும் ‘வீரயா’ ம் 1981 ல் ‘ஜகதா’ மற்றும் ‘ரக்ஷயா’ ம் அங்கு சென்றது.

மற்றுமொரு கடல் பயிற்சியை மேற்கொண்டு லெப்டினன்ட் கொமாண்டர் எம்.எச் வேளிவிடிகொட யின் கீழ் ஒரு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் குழுவொன்று சுதேச உற்பத்தி யான ஒரு ‘வேள’ படகொன்றில் நாட்டை சுற்றி பயணம் ஒன்றினை மேற்கொண்டனர்.

புதிய கடமைகள், புதிய தளங்கள்

கிளர்ச்சியின் போது கடற்படையினர் இராணுவத்தினருடன் இணைந்து பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆளணி குறைபாட்டிற்கு மத்தியிலும் கடற்படை பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குட்படாத பிரதேசங்களிள் சேவையில் ஈடுபட்டது. கடற்படை ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக பொலநறுவை, அம்பாறை மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களுக்கு முறையே கொமாண்டர் எ.எச்.எ. டி சில்வா, கொமாண்டர் ட.எ.ஜி. பர்னாந்து மற்றும் கேப்டன் டப். மொல்லிகோட ஆகியோர் நியமிக்கப்பட்டனர். முன்னைய திட்டங்களுக்கமைய புதிய தளங்களும் புதிய கடமைகளும் ஆரம்பிக்கப்பட்டன. 1973 ல் கற்பிட்டியில்‘விஜய’ தளம்நிறுவப்பட்டது. லக்சபானையில் ஒரு காவலரண் அமைக்கப்பட்டது. இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் ‘லங்கா காந்தி’ கப்பல் கடற்படை கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்தப்பட்டு அக் கூட்டுத்தாபனத்தின் கப்பல் தொகுதியின் ஒரு அங்கமாக கடற்படை ஆளணில் இயக்கப்பட்டது. மேலும் அவ்வாறே ‘மகாவேலியும்’ ‘மாதுருஒயவும்’ இயக்கப்பட்டது. ஏகாதிபத்திய வெளிச்ச வீட்டு ஆணையகம் தனது கடமைகளை இடைநிறுத்தியதுடன் இலங்கை கடற்படை பாபரின், கிரேட்பாசஸ் மற்றும் தேவேந்திற முனை வெளிச்ச வீடுகளை பொறுப்பேற்றது.

பாரம்பரிய
History

கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அமுல் படுத்தப்பட்ட பின்னர் கடற்படைக்கு அதன் சம்பிரதாய கடமைகளை மீள் அமுல்படுத்த முடிந்தது. 1973 ல் ரியர் அட்மிரல் டி.வி. ஹன்டரின் ஓய்வுக்கு பின் ஒரு புதிய தலைமைத்துவ தலைமுறை உறுவானது. அட்மிரல் ஹன்டர் 1938 ல் கடற்படையில் ஆரம்ப சமிக்ஞை வீரர்களில் ஒருவராக இணைந்து உலக கடற்படைகளிள் சிறு தரத்தில் இருந்து முன்னேறி கடற்படை தளபதியான முதலாவது நபராவார். அவரே யுத்த கால தலைமை அதிகாரிகளின் இறுதியானவருமாவார். அவர் பின்வந்தவர்கள் சுதந்திரத்தின் பின் இணைந்தவர்கலாவார்கள். அவர்களில் நேரடிஉள்ளீடு முறையின் 1950 உப லெப்டினன்ட் ஆக ஆணையளிக்கப்பட்ட ரியர் அட்மிரல்டி.பே. குணசேகர ஆவார். 1983 ல் தலைமை ஒரு புதிய தலைமுரைக்கு ரியர் அட்மிரல் எ.டப்.எச். பெரேரா வினால் ரியர் அட்மிரல் (பின்னர் வைஸ் அட்மிரல்)எ.எச்.எ. டி சில்வா விற்கு ( 1949 ல் ஆரம்ப கடெட் உள்ளீடு) கையளித்ததினால் ஏற்பட்டது. 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி கடற்படை அதன் வெள்ளி விழாவை கொண்டாடியது. அப்பாரிய விழாவில் அப்போதைய ஜனாதிபதி விலியம் கொபள்ளவினால் கடற்படைக்கு ஜனாதிபதியின் றிறம் வழங்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய விமான சேவை ‘எயா லங்கா’ கடற்படை கலாச்சார அணியினரை லண்டன், பாரிஸ், பாங்காக் மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு கொண்டு சென்றதுடன் (இசை பணிப்பாளர்) கொமாண்டர் டி.பி. தன்வத்த அவர்களின் வழிகாட்டலில் மிக சிறப்பாக கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தியது. 1981 ல் இரண்டாம் எலிசபெத் ராணியின் இலங்கை விஜயத்தின் போது கடற்படை ஒரு மரியாதை அணிவகுப்பை அவருக்கு வழங்கியது.

அடிப்படை அழுத்தங்கள்

இக் காலகட்டத்தில் எதிர்கால உள்நாட்டு பிரச்சினைகலுக்கான அறிகுரிகள் தலைதூக்க ஆரம்பித்தன. யாழ்ப்பாண நகர பிதாவின் கொலையே முதல் அறிகுறியாக அமைந்தது. 70ல் முழுவதிலும் ஆங்காங்கே ஏட்பட்ட இனவாத பதட்ட நிலைமைகள் மிகவிரைவில் ஒரு பேரிடர் ஏற்படக்கூடிய அபாயத்தை பறைசாட்டின.முப்படைகள் தயார் நிலை படுத்தப்பட்டதுடன் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் திருகோனமலை பிரதேசங்களில் பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளை எதிர் கொள்லுமுகமாக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் முப்படை, போலிஸ் மற்றும்நிர்வாக சேவை அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த “ஒருங்கிணைந்த சேவைகள் சிறப்பு கட்டளை ஆணையகம்” (JOSSOP) கடற்படை தளபதியின் தலைமையில் ஜே. பண்டாரகொட (நிர்வாக சேவை) துணை தலைமைத்துவத்தில் வவுனியாவை தலைமையகமாக கொண்டு செயல்பட நிருவப்பட்டது.

1980 கலிள் உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்ப காலத்தில் கடற்படை அதன் ரோந்து படகு தொகுதியை வேக தாக்குதல் படகுகளை அறிமுகப்படுத்தி அதிகரித்தது.

இது புலிகளின் கடல் பிரயோகத்தை தடைபடுத்தும் நடவடிக்கைகளில் அதிகளவுவெற்றி கிட்ட உதவியது. கடல் புலிகள் இப்படகுகளுக்கு எதிராக நவீன தற்கொலை தாக்குதல் படகுகள் மூலம் எதிர்கொள்ள முற்பட்டதால் கடற்படை அதன் படகுகளின் ஆயுத அமைப்புகளை காலத்திற்கு காலம் நவீனமயப்படுத்தியது. மேலும் இரண்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஜெயசாகர’ வகுப்பு ஆள் கடல் ரோந்து கப்பல்கள் கடற்கரை ரோந்து மற்றும் கள்ளக் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இக் காலப்பகுதியிலேயே கடற்படை அதன் வரலாற்றில் முதலாவது கடல் மற்றும் தரை (amphibious) செயற்பாட்டில் பங்குகொண்டது. யுத்த காலங்களில் அதன் ஆளணியும் கப்பல் தொகுதியும் அதிகரித்தது. 80 களில் தரை படை ஒன்றும் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் கடற்படை தளங்களை பாதுகாக்க மட்டும்அதன் செயற்பட்டாலும் படிப்படியான ஆளணி அதிகரிப்பின் பின் இராணுவத்தினருடன் இணைந்து புலிகளுக்கெதிரான தாக்குதல் நடவடிக்ககளிலும் ஈடுபட்டது. 1980 களில் இங்கிலாந்து விசேட படகு சேவை ஒத்த ஒரு, விசேட படகு படை (Special Boat Squadron) உருவாக்கப்பட்டது.1990 களில் கடற்படை இராணுவத்துடன் இணைந்து அதன் முதலாவது கடல் மற்றும் தரை நடவடிக்கையான “ஆபரேஷன் சீ பிரீஸ்” யையும் ஒரு வருடத்தின் பின் அதைவிட பெரிய “பலவேகய” நடவடிக்கையையும் மேலு கடலில் புலிகளின் ஆயுத கடத்தலுக்கெதிராக நடவடிக்கையையும் மேற்கொண்டது. இக் காலக்கட்டத்திலேயே 1992 ல் கடற்படை தளபதி அட்மிரல் டப். டப். இ கிளன்சி பிரனாந்து புலிகளின் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தார்.

1992 ல் பிற்பகுதியில் கடற்படை அதன் ரோந்து படகு தொகுதியை கடல் புலிபடகுகளை எதிர்க்க மற்றும் ஆயுத கடத்தலை தடுக்க விரிவாக்கியது. 2000 ம்ஆண்டில் ஆள் கடல் ரோந்து படகுகள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் கடற்படை விரிவு படுத்தியது. அக் காலப்பகுதியில் ஏவுகணை தாங்கி படகுகளை பெற்று பாரம்பரிய யுத்த திறனையும் அதிகரித்தது.

2006 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தம்மீண்டும் ஆரம்பித்ததினால் கடற்படை புலிகளின் கடல் பிரயோகத்தை கட்டுப்படுத்த முனைந்து செயல்பட்டது. இதன் காரணமாக 2006, 2007 மற்றும் 2009 ஆண்டுகளிள்பாரிய கடல் சண்டைகள் ஏட்பட்டன. இதில் இந்து சமுத்திரத்திளும் சர்வதேச கடலிலும் புலிகளுக்கு ஆயுதம் தாங்கி வந்த பல சரக்கு கப்பல்களை இடைமறித்துதாக்கி அழித்த நிகழ்வு முதன்மையானது . இந்த நிகழ்வுகள் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் திறனை நிறூபிப்பவையாக அமைந்தது.

history