நடவடிக்கை

தற்காலத்தில் கடற்படை பல வகையான கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கை கடற்படையின் முக்கிய கடல்சார் நடவடிக்கைகள் பின்வருமாறு,

  • ஆழ் கடலில் ரோந்துக் கப்பல்கள் செலுத்தப்பட்டு வணிகக் கப்பல்கள் மூலம் நாட்டிற்குள் யுத்த தளபாடங்கள் மற்றும் அது போன்ற பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை கண்காணித்தல் மற்றும் நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் நடவடிக்கைகளை கண்காணித்தல்.

  • வேகத் தாக்குதல் படகுகள், 25 மீட்டர் நீளமும் சுமார் 50 டன் எடையையும் துரிதமாக செயல்படும் ஆயுதங்கலையும் கொண்டிருக்கும். புதிய தலைமுறை படகுகள் 45 நெட்டாங்கு மேலான வேகத்தை கொண்டவை. இவ்வகையான படகுகள் கடற் புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் மிகவும் செயல்திறன் மிக்கவையாக காணப்படுகின்றன.

  • திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் காரைநகர் துரைமுகங்களில் நிலைகொண்டுள்ள கடற்படை இலக்குகள் மீது மற்றும் காங்கேசன்துறைக்கு அப்பால் கடலில் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் வணிக கப்பல்கள் மீது பயங்கரவாதிகள் பல தடவைகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ள முனைந்ததால் நாடாளாவிய ரீதியில் துறைமுகங்களை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இலங்கையில் சர்வதேச கப்பல்கள் மற்றும் துறைமுக பாதுகாப்பு வசதி (ISPs) குறியீடு நடைமுறைப் படுத்துவதற்கான அதிகாரம் இலங்கை கடற்படையே பெற்றிருந்தது.

  • கரையோர ரோந்து படகுகலானது சிறிய 14 மீட்டர் நீளமுடைய கரையோர பிரதேசங்களில் மற்றும் கரைக்கு கொண்டு செல்லக்கூடிய படகுகளாகும். அவை 30 நொட் வேகத்தை தாண்டி பயனிக்கக்கூடியவை.

  • விசேட படகு படையணி இரகசிய மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய விசேட பயிற்சி பெற்ற வீரர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

  • இலங்கை கடற்படை, 1990 களிலிருந்து பயங்கரவாத கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை மீட்க இலங்கை இராணுவத்திற்கு நீர் மற்றும் நில நடவடிக்கைகளை மேற்கொள்ள கல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

    கடற்படையினர் இலங்கை இராணுவத்தினருக்கு கல தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவுகின்றனர். இதற்காகவே வட மத்திய கடற்படை கட்டளை நிறுவப்பட்டு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டி அங்கு கடற்படை ரோந்து பட்டாலியன்களும் அமைக்கப்பட்டன.

Your browser is outdated!

To continue using this site, please update your browser to the latest version.

Supported browsers include:

Thank you!