செயல்பாட்டு அமைப்பு
தந்திரோபாய முக்கியத்துவம்
கடற்படை தலைமையகம்
கடற்படை தளபதி (C of N) கடற்படையின் செயல்பாட்டு மற்றும் நிர்வாக கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கைகளை பட்டரமுள்ள லுள்ள கடற்படை தலைமையகத்திலிருந்து கொண்டு நடத்துவார். அவருக்கு உதவியாக கடற்படை பிரதானி, மேலாண்மை குழு மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். கடற்படையில் ஏழு கட்டளை பிராந்தியங்கள் உள்ளன.
கட்டளை பிராந்தியங்கள்
செயல்திறன் மிக்க கட்டளை மற்றும் நிர்வாகத்திற்காக இலங்கையின் கடல் மற்றும் கரையோரப் பகுதிகள் ஏழு கடற்படை பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் துறைமுகங்கள், தளங்கள், பழுதுபார்க்கும் வசதிகள், தொடர்பு மையங்கள், வழங்கல் மற்றும் மருத்துவ நிலையங்கள் உள்ளன.
செயல்பாட்டு வரைபடம்: ஏழு பகுதி கட்டளைகள்
● கிழக்கு
● வடக்கு
● மேற்கு
● தெற்கு
● வடமேற்கு
● வட மத்திய
● தென் கிழக்கு













