• அதிகாரியாக ஆகுவதற்கு

    இலங்கை கடற்படையின் அதிகாரிகளாக இணைந்து ஒரு சிறந்தஉயர்தர, திறன் மற்றும் புத்தாக்கமுடைய கடல் பயன தொழில் வாழ்க்கையை ஒன்றினை பெற்றுக்கொள்ள அனைத்து இளம் இலங்கையர்களுக்கு இது ஒரு அரிய சந்தரப்பமாகும்.

    * நிறைவேற்று * வழங்கள் * ரோந்து * நீதி
    * பொறியியல் * வைத்திய * கப்பல் கட்டல் * தகவல் தொழில் நுட்பம்
    * மின் மற்றும் மின்னணுவியல் * பல் வைத்தியம் * காவலர் * இசை

    தற்பொழுது அதிகாரிகளுக்கான பயிற்சி பிரதானமாகதிருகோணமலை, கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் நடத்தபடுகிறது. மேலும்குறுகிய/விசேடத்துவ பயிற்சிகள் வெலிசறை, கடற்படை கப்பல் கெமுனுவில்நடத்தப்படும். இப் பயிற்சி அடிப்படை பயிற்சியின் கருத்தாக்க அம்சங்களைக்கொண்டு அமைவதோடு அதன் பின் கடலில் கடற்படை கப்பல்களில் மேலதிக நடைமுறைபயிற்சியும் வழங்கப்படும்.

  • அதிகாரிகள் இணைந்து கொள்ளும் முறைகள்

  • பட்டப்படிப்பு கெடட் நுழைவு

    கல்வி பொதுத் தராதர (உயர் தர) பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்ல குறைந்தபட்ச தகுதி பெறுபேறு பெற்றிருத்தல் வேண்டும்.

  • பட்டப்படிப்பு தவிர்ந்த கெடட் நுழைவு

    கல்வி பொதுத் தராதர (உயர் தர) பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

  • நிரந்தர படை நேரடி நுழைவு

    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் அல்லது உயர்தேசிய டிப்ளோமா (குறைந்தது ஒரு வருட காலம்) மற்றும் இரண்டு வருட கால சேவைஅனுபவத்தினைக் கொண்டிருக்க வேண்டும்.

  • தொண்டர் படைப் பிரிவு

    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் அல்லது உயர்தேசிய டிப்ளோமா (குறைந்தது ஒரு வருட காலம்) மற்றும் இரண்டு வருட கால சேவைஅனுபவத்தினைக் கொண்டிருக்க வேண்டும்.

  • சேவை உள்வாங்கல்

    விசேட திறமைகள், தகுதிகள் மற்றும் மேம்பட்ட தலைமைத்துவதிறன்களைக் கொண்ட கடற்படை ஏனைய தர வீரர்கள் இம்முறையின் கீழ்தெரிவுசெய்யப்பட்டு பயிற்சியின் பின் அதிகாரிகளாக ஆணையளிக்கப்படுவர்.

  • அதிகாரிகளுக்கான தகுதி பட்டப்படிப்பு கெடட் அதிகாரிகள்

    * இலங்கை குடிமகன் * பாரம் 110 இராத்தல்.
    * திருமணமாகாத ஆண்கள் * மார்பு 32 அங்குலங்கள் (குறைந்த)
    * வயது 18-22 * பார்வை நிறம் எஸ்திடி II
    * உயரம் 5’6’’ * தூரம் 6/6 ஒவ்வொரு கண்ணும்
    * கெடட் நுழைவு உத்தியோகத்தர்களுக்கான திறன் பரீட்சை
  • அதிகாரிகளுக்கான தகுதி நிரந்தர படை/தொண்டர் அதிகாரிகள்
    * இலங்கை குடிமகன் * உயரம் ஆண் 5'6", பெண் 5'3
    * திருமணமாகாத ஆண்கள் * மார்பு 32 அங்குலம் (குறைந்த)
    * திருமணமான /திருமணமாகாத (ஆண்கள்/பெண்கள்) * தூரம் 6/ 6 ஒவ்வொரு கண்ணிலும்
    * மார்பு ஆண்கள் 32 அங்குலம் (குறைந்த) * பார்வை எஸ்டிடி II
    * பாரம்: ஆண் – 115 இரா. பெண்- 90 இரா.

    அடிப்படை பயிட்சிகளின் பின் அதிகாரிகளுக்கு பின்வரும் துறைகளில் விசேடத்துவ பயிற்சி வழங்கப்படும்.

    * தொழில்நுட்ப * கடற்படை போர் தொடர்பான
    * விசேடம் * நவீன போர் / உபகரணங்கள் பயிற்சி
    * மேலாண்மை * அதிகாரிகள் கல்லூரிகள்
    * நிர்வாகம் * தேசிய பாதுகாப்பு கல்லூரிகள்

    மட்டுபடுத்தப்பட்ட வெளிநாட்டு பயிற்சி பாடநெரிகளுக்கான தெரிவு (ஐக்கிய இராச்சிய டாத்மவ்த் கடற்படை கல்லூரியின் இடைநிலை அதிகாரி அல்லதுஇந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் சப் லெப்டினன்ட் (நிர்வாக) பாடநெறி)பயிலுனர்களின் பயிற்சி கால திறமைகளை கொண்டு தீர்மானிக்கப்படும்.

  • சேவையின் நன்மைகள்

    கடற்படை அங்கத்தவர்களின் நலன்புரி மற்றும் நன்மைக்காகஅவர்களின் உற்சாகத்தை அதிகரித்து சேவை திறனை அதிகரிக்கும் நோக்கோடுபின்வரும் நலன்புரி நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டுள்ளன.

    இலவச உணவு, விடுதி, சீருடைகள் மற்றும் போக்குவரத்து

    அனைத்து அதிகாரிகளுக்கும் உணவு, தங்குமிடம், சீருடைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

    மருத்துவம்&பல் பராமரிப்பு

    மருத்துவர்களும் மருத்துவ வசதிகளும் அனைத்து அங்கத்தவர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.

    விளையாட்டுகள்

    சுடுதல் மற்றும் படகோட்டல் உட்பட அனைத்து விளையாட்டுகளிலும் சர்வதேச போட்டிகளில் பங்கு பற்ற வாய்ப்புகள் உள்ளன.

    கடன் வசதிகள்

    குறிப்பிட்ட சேவை காலத்தின் பின்னர் அரச கடன் வசதிகளைபெறலாம். நாடளாவ ரீதியில் உள்ள கடற்படை விடுமுறை விடுதிலை தங்களின்குடும்பங்களுடன் உபயோகிக்க கடற்படையினர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

  • கடற்படை வீரராக தொழில் பெற உள்ள வாய்ப்புகள்
    கைவினைஞர் அல்லாத
    கைவினைஞர்
    * கடலோடி * என்ஜின் அறை கைவினைஞன்
    * சுளியோடி * வானொலி இலத்திரனவியல் கைவினைஞன்
    * காலாட்படை * இலத்திரனவியல் கைவினைஞன்
    * தொலைத் தொடர்பாளர் * கப்பல் கட்டும் கைவினைஞன்
    * இசைக்கலைஞர் * கட்டுமானப் பொறியியல் கைவினைஞன்
    * உடற்பயிற்சி போதகராக * வாகன திருத்தல் கைவினைஞன்
    * ரோந்து பிரிவு
    * விசேட படகு படையணி
    * வாகன நடத்துனர்
    * பொறியியல் மெக்கேனிக்
    * பொறியியல் மெக்கேனிக்- ஹல்
    * பொறியியல் மெக்கேனிக்- வேலை தளம்
    * பொறியியல் மெக்கேனிக்- டிரேட்ஸ் மன்
    * மின்நுட்பவியல் துணையாளர்
    * வானொலி மினுட்பவியல் துணையாளர்
    * வழங்குனர் துணையாளர்
    * எழுதுவிளைஞர்
    * உணவுபரிமாறல் உதவியாளர்
    * மெஸ் உதவியாளர்
    * மருத்துவ உதவியாளர்
    * பல் மருத்துவா உதவியாளர்
    * தகவல் தொழில்நுட்பம்

    வீரர்களின் அடிப்படை பயிற்சி (சுமார் ஆறு மாதங்கள்)கடற்படை உயர் பயிற்சி நிலையம் (நிபுன), கடற்படை சேர்ப்பார்கள் பயிற்சிநிலையம் (சிக்ஷா), கடற்படை கப்பல் கெமுனு (வெலிசறை), கடற்படை கப்பல் ருஹுனு (தங்காலை) மற்றும் கடற்படை கப்பல் விஜய (கற்பிட்டி) ஆகியவற்றில்நடைபெறும். அடிப்படை பயிற்சியின் வேலைத்தல பயிற்சி கடற்படை கப்பல்களில்/ஸ்தபனங்களில் வழங்கப்படும்.

  • கைவினைஞர் அல்லாத பயிற்சி

    ஆறு மாதங்களை கொண்ட ஆரம்ப பயிற்சி குறித்த தொழில் பிரிவினரால் நடத்தப்படும்( கடலில் மற்றும் கப்பலில்) அத்துடன் மேலதிக பயிற்சிகள்(துணை விசேடம்) 6 தொடக்கம் 12 மாதங்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் தொடரலாம்.

  • கைவினைஞர் பயிற்சி

    3 தொடக்கம் 6 மாதங்களைக் கொண்ட ஆரம்ப பயிற்சியின் முடிவில்,உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் கைவினைஞர் பயிற்சி வழங்கப்படும் குறித்த இப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு நேவல் இன்ஜினியரிங் டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படும்.

  • மாலுமிகளுக்கான தகுதி
    * இலங்கை குடிமகன் * பாரம் 105 இராத்தல்
    * திருமணமாகதவர் * மார்பு 32 அங்குலங்கள் (குறைந்த)
    * வயது 18-22 * தூரப் பார்வை 6/6 ஒவ்வொரு கண்ணும்
    * உயரம் 5’3’’
  • சேவையின் நன்மைகள்

    கடற்படை அங்கத்தவர்களின் நலன்புரி மற்றும் நன்மைக்காக அவர்களின் உற்சாகத்தை அதிகரித்து சேவை திறனை அதிகரிக்கும் நோக்கோடு பின்வரும் நலன்புரி நடவடிக்கைகள் மேட்கொள்ளப்படுகின்றன.

  • இலவச உணவு, விடுதி, சீருடைகள் மற்றும் போக்குவரத்து

    அனைத்து அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் ஆகியொருக்கு உணவு, தங்குமிடம், சீருடைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

  • மருத்துவம்&பல் பராமரிப்பு

    மருத்துவர்களும் மருத்துவ வசதிகளும் அனைத்து அங்கத்தவர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்

  • விளையாட்டுக்கள்

    சுடுதல் மற்றும் படகோட்டல் உட்பட அனைத்து விளையாட்டுகளிலும் சர்வதேச போட்டிகளில் பங்கு பற்ற வாய்ப்புகள் உள்ளன.

  • கடன் வசதிகள்

    குறிப்பிட்ட சேவை காலத்தின் பின்னர் அரச கடன் வசதிகளை பெறலாம். நாடளாவ ரீதியில் உள்ள கடற்படை விடுமுறை விடுதி தங்களின் குடும்பங்களுடன் உபயோகிக்க கடற்படையினர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

  • சிரேஷ்ட அதிகாரி (ஆட்சேர்ப்பு)
  • கடற்படை தலைமையகம்,
    கொழும்பு 01
    இலங்கை.
    தோ. பே. இல : +94117195118

  • அதிகாரிகள் ஆட்சேர்ப்பு
  • கடற்படை தலைமையகம்,
    கொழும்பு 01
    இலங்கை.
    தோ. பே. இல : +94117195154

  • மாலுமிகள் ஆட்சேர்ப்பு
  • கடற்படை தலைமையகம்,
    கொழும்பு 01
    இலங்கை.
    தோ. பே. இல: +94117195162

  • எஸ்எல்என்எஸ் மஹாஸென்
  • கடற்படை தலைமையகம்,
    கொழும்பு 01
    இலங்கை.
    தோ. பே. இல: +94117195118
  • எஸ்எல்என்எஸ் பண்டுகாபய
  • பூனவே
    மெதவச்சிய.
    தோ. பே. இல: +94117195154

  • எஸ்எல்என்எஸ் டக்சின
  • மாகல்ல
    காலி
    தோ. பே. இல: +94117195162